இந்த பூமியில எப்ப வந்து நீ பொறந்த
என் புத்திக்குள்ள தீப்பொறிய நீ வெதச்ச
அடி தேக்கு மர காடு பெருசுதான்
சின்ன தீக்குச்சி உசரம் சிறுசு தான்
அடி தேக்கு மர காடு பெருசுதான்
சின்ன தீக்குச்சி உசரம் சிறுசு தான்
ஒரு தீக்குச்சி விழுந்து துடிக்குதடி
கருந்தேக்கு மரக்காடு வெடிக்குதடி
உசுரே போகுதே உசுரே போகுதே
உதட்ட நீ கொஞ்சம் சுழிக்கயில
ஓ.. மாமன் தவிக்குறேன்
மடிப்பிச்சை கேக்குறேன்
மனசத் தாடி என் மணிக்குயிலே
அக்கரைச் சீமையில் நீ இருந்தும்
ஐவிரல் தீண்டிட நினைக்குதடி
அக்கினிப் பழமுன்னு தெரிஞ்சிருந்தும்
அடிக்கடி நாக்கு துடிக்குதடி
உடம்பும் மனசும் தூரம் தூரம்
ஒட்ட நினைக்கேன் ஆகல
மனசு சொல்லும் நல்ல சொல்ல
மாய உடம்பு கேக்கல
தவியா தவிச்சு
உசிர் தடம் கெட்டுத் திரியுதடி
தைலாங்குருவி
என்ன தள்ளி நின்னு சிரிக்குதடி
இந்த மம்முதக் கிறுக்கு தீருமா
அடி மந்திரிச்சு விட்ட கோழி மாறுமா
என் மயக்கத்த தீத்து வச்சு மன்னிச்சிருமா
சந்திரனும் சூரியனும்
சுத்தி ஒரு கோட்டில் வருகுதே
சத்தியமும் பத்தியமும்
இப்ப தலை சுத்தி கெடக்குதே
உசுரே போகுதே உசுரே போகுதே
உதட்ட நீ கொஞ்சம் சுழிக்கயில
ஓ.. மாமன் தவிக்குறேன்
மடிப்பிச்சை கேக்குறேன்
மனசத் தாடி என் மணிக்குயிலே
அக்கரைச் சீமையில் நீ இருந்தும்
ஐவிரல் தீண்டிட நினைக்குதடி
அக்கினிப் பழமுன்னு தெரிஞ்சிருந்தும்
அடிக்கடி நாக்கு துடிக்குதடி
இந்த உலகத்தில் இது ஒண்ணும் புதுசில்ல
ஒண்ணு ரெண்டு தப்பி போகும் ஒழுக்கத்தில
விதி சொல்லி வழி போட்டான் மனுசப்புள்ள
விதிவிலக்கில்லாத விதியுமில்ல
எட்டயிருக்கும் சூரியன் பாத்து
மொட்டு விரிக்குது தாமரை
தொட்டு விடாத தூரம் இருந்தும்
சொந்த பந்தமோ போகல
பாம்பா விழுதா ஒரு பாகுபாடு தெரியலையே
பாம்பா இருந்தும் நெஞ்சு பயப்பட நினைக்கலயே
என் கட்டையும் ஒரு நாள் சாயலாம்
என் கண்ணுல உன் முகம் போகுமா
நான் மண்ணுக்குள்ள
உன் நெனப்பு மனசுக்குள்ள
சந்திரனும் சூரியனும்
சுத்தி ஒரு கோட்டில் வருகுதே
சத்தியமும் பத்தியமும்
இப்ப தலை சுத்தி கெடக்குதே
உசுரே போகுதே உசுரே போகுதே
உதட்ட நீ கொஞ்சம் சுழிக்கயில
ஓ.. மாமன் தவிக்குறேன்
மடிப்பிச்சை கேக்குறேன்
மனசத் தாடி என் மணிக்குயிலே
அக்கரைச் சீமையில் நீ இருந்தும்
ஐவிரல் தீண்டிட நினைக்குதடி
அக்கினிப் பழமுன்னு தெரிஞ்சிருந்தும்
அடிக்கடி நாக்கு துடிக்குதடி
உசுரே போகுதே உசுரே போகுதே
உதட்ட நீ கொஞ்சம் சுழிக்கயில
ஓ.. மாமன் தவிக்குறேன்
மடிப்பிச்சை கேக்குறேன்
மனசத் தாடி என் மணிக்குயிலே
அக்கரைச் சீமையில் நீ இருந்தும்
ஐவிரல் தீண்டிட நினைக்குதடி
அக்கினிப் பழமுன்னு தெரிஞ்சிருந்தும்
அடிக்கடி நாக்கு துடிக்குதடி
படம் : ராவணன்
பாடல் வரிகள் : வைரமுத்து
பாடியவர்கள் : கார்த்திக், முகமது இர்ஃபான்
இசை : ஏ.ஆர்.ரஹ்மான்
Sunday, July 18, 2010
Saturday, February 6, 2010
நூறாண்டுக்கு ஒரு முறை பூக்கின்ற பூவல்லவா
ஆண் : நூறாண்டுக்கு ஒரு முறை பூக்கின்ற பூவல்லவா
இந்த பூவுக்கு சேவகன் செய்பவன் நானல்லவா
இதழோடு இதழ் சேர்த்து
உயிரோடு உயிர் கோர்த்து வாழவா ..
(நூறாண்டுக்கு )
பெண் : கண்ணாளனே கண்ணாளனே உன் கண்ணிலே என்னை கண்டேன்
ஆண் : கண்மூடினால் கண்மூடினால் அந்நேரமும் உன்னை கண்டேன்
பெண் : ஒரு விரல் என்னை தொடுகையில் உயிர் நிறைகிறேன் அழகா
ஆண் : மறு விரல் வந்து தொடுகையில் விட்டு விலகுதல் அழகா
பெண் : உயிர் கொண்டு வாழ்கின்ற நாள் வரை இந்த உறவுகள் வேண்டும் மன்னவா ..
(நூறாண்டுக்கு)
ஆண் : இதே சுகம் இதே சுகம் என்னாளுமே கண்டால் என்ன
பெண் : இன்னேரமே இன்னேரமே என் ஜீவனும் போனால் என்ன
ஆண் : ம்ம் .. முத்தத்திலே பல வகை உண்டு இன்று சொல்லட்டுமா கணக்கு
பெண் : இப்படியே என்னை கட்டிக்கொள்ளு மெல்ல விடியட்டும் கிழக்கு
ஆண் : அச்சப்பட வேண்டாம் பெண்மையே எந்தன் ஆண்மையில் உண்டு மென்மையே
(நூறாண்டுக்கு)
இந்த பூவுக்கு சேவகன் செய்பவன் நானல்லவா
இதழோடு இதழ் சேர்த்து
உயிரோடு உயிர் கோர்த்து வாழவா ..
(நூறாண்டுக்கு )
பெண் : கண்ணாளனே கண்ணாளனே உன் கண்ணிலே என்னை கண்டேன்
ஆண் : கண்மூடினால் கண்மூடினால் அந்நேரமும் உன்னை கண்டேன்
பெண் : ஒரு விரல் என்னை தொடுகையில் உயிர் நிறைகிறேன் அழகா
ஆண் : மறு விரல் வந்து தொடுகையில் விட்டு விலகுதல் அழகா
பெண் : உயிர் கொண்டு வாழ்கின்ற நாள் வரை இந்த உறவுகள் வேண்டும் மன்னவா ..
(நூறாண்டுக்கு)
ஆண் : இதே சுகம் இதே சுகம் என்னாளுமே கண்டால் என்ன
பெண் : இன்னேரமே இன்னேரமே என் ஜீவனும் போனால் என்ன
ஆண் : ம்ம் .. முத்தத்திலே பல வகை உண்டு இன்று சொல்லட்டுமா கணக்கு
பெண் : இப்படியே என்னை கட்டிக்கொள்ளு மெல்ல விடியட்டும் கிழக்கு
ஆண் : அச்சப்பட வேண்டாம் பெண்மையே எந்தன் ஆண்மையில் உண்டு மென்மையே
(நூறாண்டுக்கு)
நிலா நீ வானம் காற்று மழை
(ஆண்)
நிலா நீ வானம் காற்று மழை
என் கவிதை மூச்சு இசை
துளி தேனா மலரா திசை ஒளி பகல் நிலா நீ வானம் காற்று மழை
என் கவிதை மூச்சு இசை
துளி தேனா மலரா திசை ஒளி பகல்
தேவதை அன்னம் பட்டாம்பூச்சி
கொஞ்சும் தமிழ் குழந்தை
சினுங்கள் சிரிப்பு முத்தம்
மௌனம் கனவு ஏக்கம்
மேகம் மின்னல் ஓவியம்
செல்லம் ப்ரியம் இம்சை
இதில் யாவுமே நீதான் எனினும்
உயிர் என்றே உனை சொல்வேனே
நான் உன்னிடம் உயிர் நீ என்னிடம்
நாம் என்பதே இனிமேல் மெய் சுகம்
நிலா நீ வானம் காற்று மழை
என் கவிதை மூச்சு இசை
துளி தேனா மலரா திசை ஒளி பகல்
(பெண்)
அன்புள்ள மன்னா அன்புள்ள கணவா
அன்புள்ள கள்வனே அன்புள்ள கண்ணாளனே
அன்புள்ள ஒளியே அன்புள்ள தமிழே
அன்புள்ள செய்யுளே அன்புள்ள இலக்கணமே
அன்புள்ள திருக்குறளே அன்புள்ள நற்றினையே
அன்புள்ள படவா அன்புள்ள திருடா
அன்புள்ள ரசிகா அன்புள்ள கிருக்கா
அன்புள்ள திமிரே அன்புள்ள தவறே
அன்புள்ள உயிரே அன்புள்ள அன்பே
இதில் யாவுமே இங்கு நீதான் என்றால்
என்னதான் சொல்ல சொல் நீயே
பேரன்பிலே ஒன்று நாம் சேர்ந்திட
வீண் வார்த்தைகள் இனி ஏன் தேடிட
(ஆண்)
நிலா நீ வானம் காற்று மழை
என் கவிதை மூச்சு இசை
துளி தேனா மலரா திசை ஒளி பகல்
(பெண்)
அன்புள்ள மன்னா அன்புள்ள கணவா
அன்புள்ள கள்வனே அன்புள்ள கண்ணாளனே
நிலா நீ வானம் காற்று மழை
என் கவிதை மூச்சு இசை
துளி தேனா மலரா திசை ஒளி பகல் நிலா நீ வானம் காற்று மழை
என் கவிதை மூச்சு இசை
துளி தேனா மலரா திசை ஒளி பகல்
தேவதை அன்னம் பட்டாம்பூச்சி
கொஞ்சும் தமிழ் குழந்தை
சினுங்கள் சிரிப்பு முத்தம்
மௌனம் கனவு ஏக்கம்
மேகம் மின்னல் ஓவியம்
செல்லம் ப்ரியம் இம்சை
இதில் யாவுமே நீதான் எனினும்
உயிர் என்றே உனை சொல்வேனே
நான் உன்னிடம் உயிர் நீ என்னிடம்
நாம் என்பதே இனிமேல் மெய் சுகம்
நிலா நீ வானம் காற்று மழை
என் கவிதை மூச்சு இசை
துளி தேனா மலரா திசை ஒளி பகல்
(பெண்)
அன்புள்ள மன்னா அன்புள்ள கணவா
அன்புள்ள கள்வனே அன்புள்ள கண்ணாளனே
அன்புள்ள ஒளியே அன்புள்ள தமிழே
அன்புள்ள செய்யுளே அன்புள்ள இலக்கணமே
அன்புள்ள திருக்குறளே அன்புள்ள நற்றினையே
அன்புள்ள படவா அன்புள்ள திருடா
அன்புள்ள ரசிகா அன்புள்ள கிருக்கா
அன்புள்ள திமிரே அன்புள்ள தவறே
அன்புள்ள உயிரே அன்புள்ள அன்பே
இதில் யாவுமே இங்கு நீதான் என்றால்
என்னதான் சொல்ல சொல் நீயே
பேரன்பிலே ஒன்று நாம் சேர்ந்திட
வீண் வார்த்தைகள் இனி ஏன் தேடிட
(ஆண்)
நிலா நீ வானம் காற்று மழை
என் கவிதை மூச்சு இசை
துளி தேனா மலரா திசை ஒளி பகல்
(பெண்)
அன்புள்ள மன்னா அன்புள்ள கணவா
அன்புள்ள கள்வனே அன்புள்ள கண்ணாளனே
Subscribe to:
Posts (Atom)