Friday, November 26, 2010

வளர்ந்த கலை மறந்து விட்டாள் ஏனடா கண்ணா

வளர்ந்த கலை மறந்து விட்டாள் ஏனடா கண்ணா - அவள்
வடித்து வைத்த ஓவியத்தைப் பாரடா கண்ணா
குடும்பக் கலை போதும் என்று கூறடா கண்ணா - அதில்
கூட இந்தக் கலைகள் வேறு ஏனடா கண்ணா ?

காதல் சொன்ன பெண்ணை இன்று காணமே கண்ணா
கட்டியவள் மாறி விட்டாள் ஏனடா கண்ணா - தாலி
கட்டியவள் மாறி விட்டாள் ஏனடா கண்ணா
காதலிதான் மனைவி என்று கூறடா கண்ணா - அந்தக்
காதலிதான் மனைவி என்று கூறடா கண்ணா - அன்று
கண்ணை மூடிக் கொண்டிருந்தார் ஏனடா கண்ணா

மனதில் அன்றே எழுதி வைத்தேன் தெரியுமா கண்ணா
அதை மறுபடியும் எழுதச் சொன்னால் முடியுமா கண்ணா

தினம் தினம் ஏன் கோபம் கொண்டாள்
கூறடா கண்ணா - அவள்
தேவை என்ன ஆசை என்ன
கேளடா கண்ணா
நினைப்பதெல்லாம் வெளியில் சொல்ல
முடியுமா கண்ணா - அதை
நீ பிறந்த பின்பு கூற இயலுமா கண்ணா

மனதில் அன்றே எழுதி வைத்தேன் தெரியுமா கண்ணா
அதை மறுபடியும் எழுதச் சொன்னால் முடியுமா கண்ணா

இன்று வரை நடந்ததெல்லாம் போகட்டும் கண்ணா - இனி
என்னிடத்தில் கோபமின்றி வாழச் சொல் கண்ணா
அவரில்லாமல் எனக்கு வேறு யாரடா கண்ணா - நான்
அடைக்கலமாய் வந்தவள்தான் கூறடா கண்ணா

முதற்கனவே முதற்கனவே மறுபடி ஏன் வந்தாய்

முதற்கனவே முதற்கனவே மறுபடி ஏன் வந்தாய்
நீ மறூபடி ஏன் வந்தாய்

முதற்கனவே முதற்கனவே மறுபடி ஏன் வந்தாய்
நீ மறூபடி ஏன் வந்தாய்
விழி திறந்ததும் மறுபடி கனவுகள் வருமா வருமா?
விழி திறக்கையில் கனவென்னை துறத்துவது நிஜமா நிஜமா?

முதற்கனவு முதற்கனவு மூச்சுள்ள வரையில் வருமல்லவா?
கனவுகள் தீர்ந்து போனால் வாழ்வில்லை அல்லவா?
கனவல்லவே கனவல்லவே கண்மணி நானும் நிஜம் அல்லவா?
சத்தியத்தில் உடைத்த காதல் சாகாது அல்லவா?
(முதற்கனவே..)

எங்கே எங்கே நீ எங்கே என்று காடு மேடு தேடி ஓடி
இரு விழி இரு விழி தொலைத்து விட்டேன்
இங்கே இங்கே நீ வருவாய் என்று சின்ன கண்கள் சிந்துகின்ற
துளிகளில் துளிகளில் உயிர் வளர்ப்பேன்
தொலைந்த என் கண்களை பார்ஹ்த்டதும் கொடுத்து விட்டாய்
கண்களை கொடுத்து இதயத்தைஅ எடுத்துவிட்டாய்
இதயத்தை தொலைததற்காக என் ஜீவன் எடுக்கிறாய்
(முதற்கனவே..)

ஊடல் வேண்டாம் ஓடல்கள் வேண்டாம்
ஓசையோடு நாதம் போல உயிரிலே உயிரிலே கலந்து விடு
கண்ணீர் வேண்டாம் காயங்கள் வேண்டாம்
ஆறு மாத பிள்ளை போல மடியிலே மடியிலே உறங்கிவிடு
நிலா வரும் நேரம் நட்சத்திரம் தேவையில்லை
நீ வந்த நேரம் நெஞ்சில் ஒரு ஊடல் இல்லை
வண்ண பூக்கள் வேர்க்கும் முன்னே வரச்சொல்லு தென்றலை
வரச்சொல்லு தென்றலை

தாமரையே தாமரையே நீரில் ஒளியாதே நீ நீரில் ஒளியாதே
தினம் தினம் ஒரு சூரியன் போல வருவேன் வருவேன்
அதினம் உன்னை ஆயிரம் கையால் தொடுவேன் தொடுவேன்
விண்ணில் நீயும் இருந்துக்கொண்டே விர்ல் நீட்டி திறக்கிறாய்
மரங்கொத்தியே மரங்கொத்தியே மனதை கொத்தி துலையிட்உவாய்
உள்ளத்துக்குள் விளக்கடித்து உன் காதல் எழுப்புவாய்
தூங்கும் காதல் எழுப்புவாய்
தூங்கும் காதல் எழுப்புவாய்
நீ தூங்கும் காதல் எழுப்புவாய்
தூங்கும் காதல் எழுப்புவாய்

படம்: மஜுனு
இசை: ஹாரீஸ் ஜெயராஜ்
பாடியவர்கள்: ஹரிஷ் ராகவேந்திரா, பாம்பே ஜெயஸ்ரீ

மன்னவனே அழலாமா

மன்னவனே அழலாமா
கண்ணீரை விடலாமா
உன்னுயிராய் நானிருக்க
என்னுயிராய் நீ இருக்க
மன்னவா மன்னவா மன்னவா ...

மன்னவனே அழலாமா
கண்ணீரை விடலாமா
உன்னுயிராய் நானிருக்க
என்னுயிராய் நீ இருக்க

கண்ணை விட்டு போனாலும்
கருத்தை விட்டு போகவில்லை
மண்ணை விட்டு போனாலும்
உன்னை விட்டு போகவில்லை
இன்னொருத்தி உடலெடுத்து
இருப்பவளும் நானல்லவா
கண்ணெடுத்து பாராமல்
கலங்குவதும் நீயல்லவா

மன்னவனே அழலாமா
கண்ணீரை விடலாமா
உன்னுயிராய் நானிருக்க
என்னுயிராய் நீ இருக்க

உன் மயக்கம் தீர்க்க வந்த
பெண் மயிலை புரியாதா
தன் மயக்கம் தீராமல்
தவிக்கின்றாள் தெரியாதா
என் உடலில் ஆசையென்றால்
என்னை நீ மறந்து விடு
என்னுயிரை மதித்திருந்தால்
வந்தவளை வாழவிடு

மன்னவனே அழலாமா
கண்ணீரை விடலாமா
உன்னுயிராய் நானிருக்க
என்னுயிராய் நீ இருக்க
மன்னவா மன்னவா மன்னவா ...

மன்னவனே அழலாமா
கண்ணீரை விடலாமா
உன்னுயிராய் நானிருக்க
என்னுயிராய் நீ இருக்க

படம்: கற்பகம்
இசை: விஸ்வநாதன் - ராமமூர்த்தி
பாடியவர்: P சுசீலா
வரிகள்: வாலி