Sunday, March 9, 2014

ஆனந்த யாழை மீட்டுகிறாய்

ஆனந்த யாழை மீட்டுகிறாய்
அடி நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய்
அன்பெனும் குடையை நீட்டுகிறாய்
அதில் ஆயிரம் மழை துளி கூட்டுகிறாய்

இரு நெஞ்சம் இணைந்து பேசிட உலகில் பாஷைகள் எதுவும் தேவையில்லை
சிறு புல்லில் உறங்கும் பனியில் தெரியும்
மலையின் அழகோ தாங்கவில்லை
உந்தன் கைகள் பிடித்து போகும் வழி
அது போதவில்லை இன்னும் வேண்டுமடி
இந்த மண்ணில் இதுபோல் யாருமிங்கே
எங்கும் வாழவில்லை என்று தோன்றுதடி.

ஆனந்த யாழை மீட்டுகிறாய்
அடி நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய்
அன்பெனும் குடையை நீட்டுகிறாய்
அதில் ஆயிரம் மழை துளி கூட்டுகிறாய்

தூரத்து மரங்கள் பார்க்குதடி
தேவதை இவளா கேட்குதடி

தன்னிலை மறந்து பூக்குதடி
காற்றினில் வாசம் தூக்குதடி
அடி கோயில் எதற்கு தெய்வங்கள் எதற்கு
உனது புன்னகை போதுமடி

இந்த மண்ணில் இதுபோல் யாருமிங்கே
எங்கும் வாழவில்லை என்று தோன்றுதடி

ஆனந்த யாழை மீட்டுகிறாய்
அடி நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய்
உன் முகம் பார்த்தால் தோணுதடி
வானத்து நிலவு சின்னதடி
மேகத்தில் மறைந்தே பாக்குதடி
உன்னிடம் வெளிச்சம் கேக்குதடி

அதை கையில் பிடித்து ஆறுதல் உரைத்து
வீட்டுக்கு அனுப்பு நல்லபடி

இந்த மண்ணில் இதுபோல் யாருமிங்கே
எங்கும் வாழவில்லை என்று தோன்றுதடி

ஆனந்த யாழை மீட்டுகிறாய் அடி
நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய் 

லவ் லெட்டரு எழுத ஆசைப்பட்டேன்

லவ் லெட்டரு எழுத ஆசைப்பட்டேன் இன்னும் எழுதலை
அதை உன்னிடம் கொடுக்க ஆசைப்பட்டேன் கொடுக்க முடியலை
கானா கத்துக்க வந்தேன் நானு உங்க வீட்டுல
பெட்ரோல் இல்லாத காராட்டம் நின்னேன் ரோட்டுல
லவ் லெட்டரு எழுத ஆசைப்பட்டேன் இன்னும் எழுதலை
அதை உன்னிடம் கொடுக்க ஆசைப்பட்டேன் கொடுக்க முடியலை
உன் சித்தி டார்ச்சரை நான் தாங்கி
உன் சித்தப்பன் கிட்ட அடிவாங்கி
லவ் பண்ணேன் உன்னைத்தான்....
உன் தம்பி வந்தான் எமனாட்டம்
தினமும் எனக்கு போராட்டம்
கிழிஞ்சு போச்சு என் பெல்பாட்டம்...
துரத்தி துரத்தி காதலிச்சேன் வெறிப்புடிச்ச நாயாட்டம்
எகிறி குதிச்சு ஓடுறியே வண்டலூரு மானாட்டம்...
நான் அப்பாடக்கரு
இந்தா வாங்கிக்கோ லெட்டரு...
அன்ன நடை போடாதே
என்னை ஆட்டி படைக்காதே
என் வைஃபா வந்திடு
ஆசையை மூடி மறைக்காத
உங்க அப்பன் பேச்சை மதிக்காதே
ஐ லவ் யூ சொல்லிடு
விளம்பரத்தை பார்த்துவிட்டு
விழுந்துடாதே ஆத்துக்குள்ள
நடனமாடி காட்டிடுவான்
மாட்டிக்காத சேத்துக்குள்ள
அவன் சைனா மேடும்மா
இவன் பக்கா ஃபிராடும்மா...

அவன் சைனா மேடும்மா
இவன் பக்கா ஃபிராடும்மா...   

Sunday, March 3, 2013

எனக்குப் பிடித்த பாடல் அது உனக்கும் பிடிக்குமே

எனக்குப் பிடித்த பாடல் அது உனக்கும் பிடிக்குமே
உன் மனது போகும் வழியை எந்தன் மனது அறியுமே
என்னைப் பிடித்த நிலவு அது உன்னை பிடிக்குமே
காதல் நோய்க்கு மருந்து தந்து நோயைக் கூட்டுமே
உதிர்வது பூக்களா? மனது வளர்த்த சோலையில் காதல் பூக்கள் உதிருமா?(2)

மெல்ல நெருங்கிடும் போது நீ தூரப் போகிறாய்
விட்டு விலகிடும் போது நீ நெருங்கி வருகிறாய்
காதலின் திருவிழா கண்களில் நட‌க்குதே
குழந்தையைப் போலவே இதயமும் தொலையுதே
வானத்தில் பறக்கிறேன்...மோகத்தில் மிதக்கிறேன்
காதலால் நானுமோ காற்றாடி ஆகிறேன்
எனக்குப் பிடித்த பாடல் அது உனக்கும் பிடிக்குமே
உன் மனது போகும் வழியை எந்தன் மனது அறியுமே
என்னைப் பிடித்த நிலவு அது உன்னை பிடிக்குமே
காதல் நோய்க்கு மருந்து தந்து நோயைக் கூட்டுமே

வெள்ளிக் கம்பிகளைப் போல ஒரு தூறல் போடுதோ
விண்ணும்,மண்ணில் வந்து சேர‌ அது பாலம் போடுதோ...ஓ
நீர்த்துளி நீந்தினால் நீ தொடும் ஞாபகம்
நீ தொட்ட இட‌மெல்லாம் வீணையின் தரிச‌னம்
ஆயிர‌ம் அருவியாய்,அன்பிலே நட‌க்கிறாய்
வேகம் போல எனக்குள்ளே மோக மழைக்குள் நனைகிறாய்
எனக்குப் பிடித்த பாடல் அது உனக்கும் பிடிக்குமே
உன் மனது போகும் வழியை எந்தன் மனது அறியுமே
என்னைப் பிடித்த நிலவு அது உன்னை பிடிக்குமே
காதல் நோய்க்கு மருந்து தந்து நோயைக் கூட்டுமே
உதிர்வது பூக்களா? மனது வளர்த்த சோலையில் காதல் பூக்கள் உதிருமா?
எனக்குப் பிடித்த பாடல் அது உனக்கும் பிடிக்குமே
உன் மனது போகும் வழியை எந்தன் மனது அறியுமே