Showing posts with label ஆராரிரோ பாடியதாரோ. Show all posts
Showing posts with label ஆராரிரோ பாடியதாரோ. Show all posts

Friday, December 17, 2010

ஆராரிரோ பாடியதாரோ?

ஆராரிரோ பாடியதாரோ?
தூங்கிப்போனதாரோ
யாரோ யாரோ......

என் தாயோ யாரோ
என் தெய்வமே இது பொய்த்தூக்கமா??
நான் தூங்கவே இனி நாளாகுமா?

நீ முந்திப்போனது நியாயம் இல்லையே
நான் முந்திப்போகவே யோகம் இல்லையே
கூட்டை விட்டுத் தாய்க்கிளி பறந்தது எங்கே
பசித்தவன் கேட்கிறேன் பால்சோறு எங்கே
என் தேவியே நான் செய்த குற்றம் என்ன கூறு?
ஒரு பார்வை பாரு..

ஆராரிரோ பாடியதாரோ?
தூங்கிப்போனதாரோ
யாரோ யாரோ.....
என் தாயோ யாரோ

பொழுதாகிப்போனதே இன்னும் தூக்கமா?
சொல்லாமல் போவது தாயே நியாயமா?
உயிர்த்தந்த தேவிக்கு உயிர் இல்லையோ
பால் ஊத்திப் பாத்தியே பால் ஊத்தலாமோ
அன்னம் போட்ட என் தாயே உனக்கு
அரிசி போட வந்தேன் எனை நானே நொந்தேன்.

ஆராரிரோ பாடியதாரோ?
தூங்கிப்போனதாரோ
யாரோ யாரோ.....
என் தாயோ யாரோ

என் தெய்வமே இது பொய்த்தூக்கமா??
நான் தூங்கவே இனி நாளாகுமா?

ஆராரிரோ பாடியதாரோ?
தூங்கிப்போனதாரோ
யாரோ யாரோ.....
என் தாயோ யாரோ