ஓ..அன்பே..அன்பே!
எனைக் காணவில்லையே நேற்றோடு..
எங்கும் தேடித் பார்க்கிறேன், காற்றோடு..
உயிர் ஓடிப் போனதோ உன்னோடு?? ...அன்பே!
நான் நிழலில்லாதவன் தெரியாதா?
என் நிழலும் நீயெனப் புரியாதா?
உடல் நிழலைச் சேரவே முடியாதா? அன்பே..அன்பே!
நடை போடும் பூங்காற்றே..பூங்காற்றே!
வா,வா..என் வாசல்தான்..
வந்தால் வாழ்வேனே நான்! (எனைக் காணவில்லையே..)
ஆதாரம் இல்லாமல் நான் வாழக்கூடும்..அன்பே உன் பேரைச் சொல்லித்தான்!
தீக்குச்சி இல்லாமல் தீ மூட்டக்கூடும்..கண்ணே நம் கண்கள் சந்தித்தால்!
நானென்று சொன்னாலே நானல்ல,நீதான்!
நீயின்றி வாழ்ந்தாலே நீர் கூடத் தீதான்...
உன் சுவாசக் காற்றில் வாழ்வேன் நான்...அன்பே! (எனைக் காணவில்லையே..)
நிமிஷங்கள் ஒவ்வொன்றும் வருஷங்கள் ஆகும் - நீ என்னை நீங்கிச் சென்றாலே!
வருஷங்கள் ஒவ்வொன்றும் நிமிஷங்கள் ஆகும் - நீ எந்தன் பக்கம் நின்றாலே!
நீயாக நீயென்னை விரும்பாத போதும்..
பொய்யொன்று சொல் கண்ணே...என் ஜீவன் வாழும்!
நிஜம் உந்தன் காதல் என்றால்! (எனைக் காணவில்லையே..)
Showing posts with label எனைக் காணவில்லையே நேற்றோடு. Show all posts
Showing posts with label எனைக் காணவில்லையே நேற்றோடு. Show all posts
Monday, October 4, 2010
Subscribe to:
Posts (Atom)