Showing posts with label என் கதை முடியும் நேரம் இது. Show all posts
Showing posts with label என் கதை முடியும் நேரம் இது. Show all posts

Sunday, November 21, 2010

என் கதை முடியும் நேரம் இது
என்பதை சொல்லும் ராகம் இது
அன்பில் வாழும் உள்ளம் இது
அணையே இல்லா வெள்ளம் இது

இதயத்தில் ரகசியம் இருக்கின்றது
அது இதழில் பிறந்திட தவிக்கின்றது
உலகத்தை என் மனம் வெறுக்கின்றது
அதில் உறவு என்று அவளை நினைக்கின்றது

பேதமை நிறைந்தது என் வாழ்வு
அதில் தேவையோ மறைந்தது சில கோடு
பித்து என்று சிரிப்பது உள் நினைவு
அதன் வித்து ஒன்று போட்டது அவள் உறவு

உறவுகள் வளர்ந்தது எனக்குள்ளே
அதில் பிரிவுகள் என்பது இருக்காதே
ஒளியாய் தெரிவது வெறும் கனவு
அதன் உருவாய் எரிவது என் மனது

ரயில் பயணத்தில் துணையாய் அவள் வந்தாள்
உயிர் பயணத்தின் முடிவாய் அவள் நின்றாள்
துயில் நினைவினை மறக்கும் விழி தந்தாள்
உயர் கடலினை படைக்கும் நீர் தந்தாள்

*****

படம் : ஒரு தலை ராகம் (1976)
இசை : டி. ராஜேந்தர்
பாடியவர் : TM செளந்தர்ராஜன்