என்ன சொல்லி என்னைச் சொல்ல
காதல் என்னைக் கையால் தள்ள (2)
இதயம் தான் சரிந்ததே, உன்னிடம் மெல்ல
சுவாசமே...சுவாசமே...
ஜன்னல் காற்றாகி வா
ஜரிகைப் பூவாகி வா
மின்னல் மழையாகி வா
உயிரின் மூச்சாகி வா (2)
சுவாசமே...சுவாசமே...
சுவாசமே...சுவாசமே...
என்ன சொல்லி என்னைச் சொல்ல
காதல் என்னை கையால் தள்ள (2)
இதயம் தான் சரிந்ததே, உன்னிடம் மெல்ல
வாசமே...வாசமே...
வாசமே...வாசமே...
என்ன சொல்லி என்னைச் சொல்ல
கண்கள் ரெண்டில் கண்கள் செல்ல
சிறகுகள் முளைக்குதே மனசுக்குள் மெல்ல........
(ஜன்னல் காற்றாகி .....)
இடது கண்ணாலே அஹிம்சைகள் செய்தாய்
வலது கண்ணாலே வன்முறை செய்தாய் (2)
ஆறறிவோடு உயிரது கொண்டேன்
ஏழாம் அறிவாக காதல்வரக் கண்டேன்
இயற்கை கோளாக இயங்கிய என்னை
செயற்கை கோளாக உன்னை சுற்றவைத்தாய்
அணு சக்தி பார்வையில் உயிர் சக்தி தந்தாய்
அணு சக்தி பார்வையில் உயிர் சக்தி தந்தாய்
சுவாசமே... சுவாசமே...
இசைத் தட்டுப் போலே இருந்த என் நெஞ்சை
பறக்கும் தட்டாகப் பறந்திடச் செய்தாய்
நதிகள் இல்லாத அரபு தேசம் நான்
நைல் நதியாக எனக்குள்ளே வந்தாய்
நிலவு இல்லாத புதன் கிரகம் நானே
முழு நிலவாக என்னுடன் சேர்ந்தாய்
கிழக்காக நீ கிடைத்தாய்
விடிந்து விட்டேனே
வாசமே...வாசமே...
என்ன சொல்லி!..
என்ன சொல்லி என்னைச் சொல்ல
காதல் என்னை கையால் தள்ள
ஜன்னல் காற்றாகி வா
ஜரிகைப் பூவாகி வா
மின்னல் மழையாகி வா
உயிரின் மூச்சாகி வா (2)
சுவாசமே... சுவாசமே...சுவாசமே...
Showing posts with label என்ன சொல்லி என்னைச் சொல்ல. Show all posts
Showing posts with label என்ன சொல்லி என்னைச் சொல்ல. Show all posts
Sunday, March 20, 2011
Subscribe to:
Posts (Atom)