ஒரு சின்ன தாமரை என் கண்ணில் பூத்ததே
அதன் மின்னல் வார்த்தைகள் என் உள்ளம் தேடி தைக்கின்றதே
இதை உண்மை என்பதா இல்லை பொய் தான் என்பதா
என் தேகம் முழுவதும் ஒரு விண் மீன் கூட்டம் மொய்கின்றதே
என் ரோம கால்களோ ஒரு பயணம் போகுதே
உன் ஈரப் புன்னகை சுடுதே ....
என் காட்டு பாதையில் நீ ஒற்றை பூவடா
உன் வாசம் தாக்கியே மலர்ந்தேன் உயிரே..
ஒரு சின்ன தாமரை என் கண்ணில் பூத்ததே
அதன் மின்னல் வார்த்தைகள் என் உள்ளம் தேடி தைக்கின்றதே
உன் பெயர் கேட்டாலே அடி பாறையும் பூ பூக்கும்
உன் காலடி தீண்டிய வார்தைகள் எல்லாம் கவிதைகளாய் மாறும்
உன் தெரு பாத்தாலே என் கண்கள் அலை மோதும்
உன் வாசல் தேடி போகச் சொல்லி கெஞ்சுது என் பாதம்..
என் வாழ்க்கை வரலாற்றில் எல்லாமே உன் பக்கங்கள் ...
உன்னாலே என் வீட்டின் சுவறேல்லாம் ஜன்னல்கள்..
ஒரு சின்ன தாமரை என் கண்ணில் பூத்ததே
அதன் மின்னல் வார்த்தைகள் என் உள்ளம் தேடி தைக்கின்றதே
உன் குரல் கேட்டாலே அந்த குயில்களுக்கும் கூசும்
நீ மூச்சினில் சுவாசித்த காற்றுகள் மட்டும் மொச்சத்தினை சேரும் ..
அனுமதி கேட்காமல் உன் கண்கள் என்னை மேயும்
நான் இத்தனை நாளாய் எழுப்பிய கோபுரம் நொடியில் குடை சாயும்
உன் கைகள் கோக்காமல் பயணங்கள் கிடையாது ...
உன்னோடு வந்தாலே சாலைகள் முடியாது..
ஒரு சின்ன தாமரை என் கண்ணில் பூத்ததே
அதன் மின்னல் வார்த்தைகள் என் உள்ளம் தேடி தைக்கின்றதே
இதை உண்மை என்பதா இல்லை பொய் தான் என்பதா
என் தேகம் முழுவதும் ஒரு விண் மீன் கூட்டம் மொய்கின்றதே
என் ரோம கால்களோ ஒரு பயணம் போகுதே
உன் ஈரப் புன்னகை சுடுதே ....
என் காட்டு பாதையில் நீ ஒற்றை பூவடா
உன் வாசம் தாக்கியே மலர்ந்தேன் உயிரே..
ஒரு சின்ன தாமரை என் கண்ணில் பூத்ததே
அதன் மின்னல் வார்த்தைகள் என் உள்ளம் தேடி தைக்கின்றதே
Showing posts with label ஒரு சின்ன தாமரை என் கண்ணில் பூத்ததே. Show all posts
Showing posts with label ஒரு சின்ன தாமரை என் கண்ணில் பூத்ததே. Show all posts
Friday, October 22, 2010
Subscribe to:
Posts (Atom)