Showing posts with label காதல் வந்தால் சொல்லி அனுப்பு. Show all posts
Showing posts with label காதல் வந்தால் சொல்லி அனுப்பு. Show all posts

Monday, October 4, 2010

காதல் வந்தால் சொல்லி அனுப்பு

காதல் வந்தால் சொல்லி அனுப்பு
உயிரோடு இருந்தால் வருகிறேன்
என் கண்ணீர் வழியே உயிரும் வெளியே
கரையில் கரைந்து இருக்கிறேன்
சுட்ட மண்ணிலே மீனாக
மனம் வெட்ட வெளியிலே வாடுதடி (2)
கண்ணீர் கலந்து கண்ணீர் கலந்து
கடல் நீர் மட்டும் கூடுதடி

(காதல் வந்தால் ...)

உயிரை தவிர சொந்தம் இல்லையே காதலிக்கும் முன்பு
இந்த உலகே எந்தன் சொந்தம் ஆனதே காதல் வந்த பின்பு
Babe, Tell me you love me
It's never late, Don't hesitate
சாவை அழைத்து கடிதம் கேட்டேன் காதலிக்கும் முன்பு
ஒரு சாவை புதைக்க சக்தி கேட்கிறேன் காதல் வந்த பின்பு
உன்னால் தான் என் கடல் அலை உறங்கவே இல்லை
உன்னால் என் நிலவுக்கு உடல் நலம் இல்லை
கடல் துயில் கொள்வதும் நில குணம் கொள்வதும்
நான் உயிர் வாழ்வதும் உன் சொல்லில் உள்ளதடி
உன் இறுக்கம் தான் என் உயிரை கொல்லுதடி கொல்லுதடி ...

(காதல் வந்தால் ...)

பிறந்த மண்ணை அள்ளி தின்றேன் உன்னை காணும் முன்பு
நீ நடந்த மண்ணை அள்ளி தின்றேன் உன்னை கண்ட பின்பு
அனை தந்தாய் கண்டதி ல்லை நான் கண் திறந்த பின்பு
என் அத்தனை உறவும் மொத்தம் கண்டேன் உன்னை கண்ட பின்பு
பெண்ணே என் பயணமோ தொடங்கவே இல்லை
அதற்குள் அது முடிவதா விளங்கவே இல்லை
நான் கரையாவதும் இல்லை நுரையாவதும்
வளர் பிரையாவதும் உன் சொல்லில் உள்ளதடி
உன் இறுக்கம் தான் என் உயிரை கொல்லுதடி கொல்லுதடி ...

(காதல் வந்தால் ...)