Showing posts with label சின்ன சின்ன ஆசை சிறகடிக்க ஆசை. Show all posts
Showing posts with label சின்ன சின்ன ஆசை சிறகடிக்க ஆசை. Show all posts

Monday, October 4, 2010

சின்ன சின்ன ஆசை சிறகடிக்க ஆசை

சின்ன சின்ன ஆசை சிறகடிக்க ஆசை
முத்து முத்து ஆசை முடிந்துவிட ஆசை
வெண்ணிலவு தொட்டு முத்தமிட ஆசை
என்னையிந்த பூமி சுற்றிவர ஆசை

(சின்ன)

மல்லிகைப் பூவாய் மாறிவிட ஆசை
தென்றலைக் கண்டு மாலையிட ஆசை
மேகங்களையெல்லாம் தொட்டுவிட ஆசை
சோகங்களையெல்லாம் விட்டுவிட ஆசை
கார்குழலில் உலகைக் கட்டிவிட ஆசை

(சின்ன)

சேற்று வயலாடி நாற்று நட ஆசை
மீன் பிடித்து மீண்டும் ஆற்றில் விட ஆசை
வானவில்லைக் கொஞ்சம் உடுத்திக்கொள்ள ஆசை
பனித்துளிக்குள் நானும் படுத்துக்கொள்ள ஆசை
சித்திரத்து மேலே சேலை கட்ட ஆசை

(சின்ன)