ஆண்: செம்பூவே பூவே உன் மேகம் நான் வந்தால் ஒரு வழியுண்டோ
பெண்: சாய்ந்தாடும் சங்கில் துளி பட்டாலும் முத்தாகிடும் முத்துண்டே
ஆண்: படை கொண்டு நடக்கும் மன்மதச் சிலையோ
பெண்: மன்னவன் விரலகள் பல்லவன் உளியோ
ஆண்: இமைகளும் உதடுகள் ஆகுமோ
பெண்: வெட்கத்தின் விடுமுறை ஆயுளின் வரைதானோ
(செம்பூவே பூவே)
ஆண்: அந்திச் சூரியனும் குன்றில் சாய மேகம் வந்து கச்சையாக காமன் தங்கும் மோகப் பூவில் முத்தக் கும்மாளம்
பெண்: தங்கத் திங்கள் நெற்றிப் பொட்டும் இட்டு வெண்ணிலாவின் கன்னம் தொட்டு நெஞ்சில் ஆடும் சுவாசச்சூட்டில் காதல் குற்றாலம்
ஆண்: தேன் தெளிக்கும் தென்றலாய் நின்னருகில் வந்து நான் சேலை நதியோரமாய் நீந்தி விளையாடவா
பெண்: நாளும் மின்னல் கொஞ்சும் தாழம்பூவைச் சொல்லி
ஆண்: ஆசைக் கேணிக்குள்ளே ஆடும் மீன்கள் துள்ளி
பெண்: கட்டிலும் கால்வலி கொள்ளாதோ கைவளை கைகளை கீறியதோ
(செம்பூவே பூவே)
பெண்: இந்த தாமரைப்பூ தீயில் இன்று காத்திருக்கு உள்ளம் நொந்து கண்கள் என்னும் பூந்தேன் தும்பி பாடிச் செல்லாதோ
ஆண்: அந்த காமன் அம்பு என்னைச் சுட்டு பாவை நெஞ்சின் நாணம் சுட்டு மேகலையின் நூலறுக்கும் சேலைப் பொன் பூவே
பெண்: விம்மியது தாமரை வண்டு தொடும் நாளிலோ பாவை மயில் சாயுதே மன்னவனின் மார்பிலோ
ஆண்: முத்தத்தாலே பெண்ணே சேலை நெய்வேன் கண்ணே
பெண்: நாணத்தாலோர் ஆடை சூடிக் கொள்வேன் நானே
ஆண்: பாயாகும் வழி சொல்லாதே பஞ்சணை புதையல் ரகசியமே
(செம்பூவே பூவே)
படம்: சிறைச்சாலை
பாடியவர்கள்: S.P.பாலசுப்ரமணியம், சித்ரா
வரிகள்: அறிவுமதி (இவரது முதல் பாடல்)
இசை: இளையராஜா
Showing posts with label செம்பூவே பூவே உன் மேகம் நான் வந்தால் ஒரு வழியுண்டோ. Show all posts
Showing posts with label செம்பூவே பூவே உன் மேகம் நான் வந்தால் ஒரு வழியுண்டோ. Show all posts
Sunday, July 18, 2010
Subscribe to:
Posts (Atom)