Showing posts with label நேற்று இல்லாத மாற்றம் என்னது. Show all posts
Showing posts with label நேற்று இல்லாத மாற்றம் என்னது. Show all posts

Sunday, August 16, 2009

நேற்று இல்லாத மாற்றம் என்னது

நேற்று இல்லாத மாற்றம் என்னது
காற்று என் காதில் ஏதோ சொன்னது
இதுதான் காதல் என்பதா
இளமை பொங்கி விட்டதா
இதயம் சிந்தி விட்டதா
சொல் மனமே..
(நேற்று..)

கடவுள் இல்லை என்றேன் தாயை காணும் வரை
கனவு இல்லை என்றேன் ஆசை தோன்றும் வரை
காதல் பொய் என்று சொன்னேன் உன்னை காணும் வரை
கவிதை வரியின் சுவை அர்த்தம் புரியும் வரை
கங்கை நீரின் சுவை கடலில் சேரும் வரை
காதல் சுவை ஒன்றுதானே காற்று வீடும் வரை
(நேற்று..)

வானம் இல்லாமலே பூமி உண்டாகலாம்
வார்த்தை இல்லாமலே பாஷை உண்டாகலாம்
காதல் இல்லாமல் போனால் வாழ்க்கை உண்டாகுமா
வாசம் இல்லாமலே வண்ண பூ பூக்கலாம்
வாசம் இல்லாமலே காற்று வந்தாடலாம்
நேசம் இல்லாத வாழ்வில் பாசம் உண்டாகுமா?
(நேற்று..)

படம்: புதிய முகம்
இசை: AR ரஹ்மான்
பாடியவர்: சுஜாதா

வரிகள்: வைரமுத்து