Showing posts with label யாருக்கு மாப்பிள்ளை யாரோ. Show all posts
Showing posts with label யாருக்கு மாப்பிள்ளை யாரோ. Show all posts

Monday, July 13, 2009

யாருக்கு மாப்பிள்ளை யாரோ

படம்: பார்த்தால் பசி தீரும்
இசை: விஸ்வநாதன் - ராமமூர்த்தி
பாடியவர்: P சுசீலா

யாருக்கு மாப்பிள்ளை யாரோ
அவர் எங்கே பிறந்திருக்காரோ
எந்தப் பார்வை பட்டு
சொந்த உள்ளம் கெட்டு
எங்கே மயங்கி நின்றாரோ
(யாருக்கு..)

கட்டவிழ்ந்து கண் மயங்குவாரோ
அதில் கைகலந்து காதல் புரிவாரோ
தொட்டுத் தொட்டுப் பேசி மகிழ்வாரோ
இல்லை தூர நின்று ஜாடை புரிவாரோ
(யாருக்கு..)

ஊர் அறிய மாலையிடுவாரோ
இல்லை ஓடிவிட எண்ணமிடுவாரோ
சீர் வரிசை தேடி வருவாரோ
இல்லை சின்ன இடை எண்ணி வருவாரோ
(யாருக்கு..)