Showing posts with label ராதை மனதில் ராதை மனதில் என்ன ரகசியமோ. Show all posts
Showing posts with label ராதை மனதில் ராதை மனதில் என்ன ரகசியமோ. Show all posts

Friday, October 22, 2010

ராதை மனதில் ராதை மனதில் என்ன ரகசியமோ

ராதை மனதில் ராதை மனதில் என்ன ரகசியமோ
கண் ரெண்டும் தந்தியடிக்க கண்ணா வா கண்டுப்பிடிக்க

கொள்ளை நிலவடிக்கும் வெள்ளை ராத்திரியில்
கோதை ராதை நடந்தாள்
மூங்கில் காட்டில் ஒரு கானம் கசிந்தவுடன்
மூச்சு வாங்கி உறைந்தாள்
பாடல் வந்த வழி ஆடை பறந்ததையும்
பாவை மறந்து தொலைந்தாள்
நெஞ்சை மூடி கொள்ள ஆடை தேவை என்று
நிலவின் ஒளியை எடுத்தாள்
நெஞ்சின் ஓசை ஒடுங்கிவிட்டாள்
நிழலை கண்டு நடுங்கிவிட்டாள்
கண்ணன் தேடி வந்த மகள்
தன்னை தொலைத்து மயங்கிவிட்டாள்
தான் இருக்கின்ற இடத்தினில்
நிழலையும் காணவில்லை
எங்கே எங்கே சொல் சொல்
கண் ரெண்டும் தந்தியடிக்க
கண்ணா வா கண்டுபிடிக்க

கண்ணன் ஊதும் குழல் காற்றில் தூண்டிலிட்டு
காந்தம் போல இழுக்கும்
மங்கை வந்தவுடன் மறைந்து கொள்ளுவது
மாய கண்ணன் வழக்கம்
கால்கள் இருண்டு விட கண்கள் சிவந்துவிட
காதல் ராதை அலைந்தாள்
அவனை தேடி அவள் கண்ணை தொலைத்து விட்டு
ஆசை நோயில் விழுந்தாள்
உதடு துடிக்கும் பேச்சு இல்லை
உயிரும் இருக்கும் மூச்சு இல்லை
வந்த பாதை நினைவு இல்லை
போகும் பாதை புரியவில்லை
உன் புல்லாங்குழல் சத்தம் வந்தால்
பேதை ராதை ஜீவன் கொள்வாள்
கண்ணா எங்கே சொல் சொல்
கண்ணீரில் உயிர் துடிக்க கண்ணா வா உயிர் கொடுக்க..

கன்னம் தீண்டியதும் கண்ணன் என்று
அந்த கண்ணி கண்ணை விழித்தாள்
கன்னம் தீண்டியது கண்ணன் இல்லை
வெறும் காற்று என்று திகைத்தாள்
கண்கள் மூடிக்கொண்டு கண்ணன்
பேரை சொல்லி கைகள் நீட்டி அழைத்தாள்
காட்டில் தொலைத்துவிட்ட கண்ணின்
நீர் துளியை எங்கு கண்டுப்பிடிப்பாய்
கிளியின் சிறகு வாங்கிக்கொண்டு
கிழக்கு நோக்கி சிறகடித்தாள்
குயிலின் குரலை வாங்கிக்கொண்டு
கூவி கூவி அவள் அழைத்தாள்
அவள் குறை உயிர் கறையும்முன்
உடல் மண்ணில் சரியும்முன்
கண்ணா கண்ணா வா வா
கண்ணீரில் உயிர் துடிக்க
கண்ணா வா உயிர் கொடுக்க..