Saturday, January 9, 2010

அவள் அப்படி ஒன்றும் அழகில்லை

படம் அங்காடித் தெரு
பாடியவர் கார்த்திக்

அவள் அப்படி ஒன்றும் அழகில்லை
அவளுக்கு யாரும் இணையில்லை
அவள் அப்படி ஒன்றும் கலர் இல்லை
ஆனால் அது ஒரு குறையில்லை

அவள் பெரிதாய் ஒன்றும் படிக்கவில்லை
அவளைப் படித்தேன் முடிக்கவில்லை
அவள் உடுத்தும் உடைகள் பிடிக்கவில்லை
இருந்தும் கவனிக்க மறுக்கவில்லை

நன நான நன நான நன நான நன நானநன நான

அவள் நாய்க்குட்டி எதுவும் வளர்க்கவில்லை
யார் காவலிருந்தால் தடுக்கவில்லை
அவள் பொம்மைகள் அணைத்து உறங்கவில்லை
நான் பொம்மை போலவே பிறக்கவில்லை
அவள் கண்கள் என்றும் ஈரமில்லை
அந்தக் காட்டில் தொலைந்தேன் தீரவில்லை
அவள் கண்கள் நோக தாங்கவில்லை
கை பிடித்திடும் ஆசை தூங்கவில்லை
அவள் சொந்தமின்றி எதுவுமில்லை
எனக்கு எதவுமில்லை

அவள் பட்டுப் புடவை என்றும் அணிந்ததில்லை
அவள் சுடிதார் போல எதுவும் சிறந்ததில்லை
அவள் திட்டும் போது வலிக்கவில்லை
அந்த அக்கறை போலே வேறு இல்லை

அவள் வாசம் ரோசா வாசமில்லை
அவளில்லாமல் சுவாசமில்லை
அவள் சொந்தபந்தம் எதுவுமில்லை
அவள் சொந்தமின்றி எதுவுமில்லை
அவள் சொந்தமின்றி எதுவுமில்லை
எனக்கு எதுவுமில்லை

விழாமலே இருக்க முடியுமா ? விழுந்துவிட்டேன் காதல் வலையிலே

விழாமலே இருக்க முடியுமா ? விழுந்துவிட்டேன் காதல் வலையிலே
ச.. ச..
ம ப ச ம ப நீ
ம ப ச நீ ப ம ரீ ச ரீ

என்னை காதலிக்க பிறந்தவனே நீ தான் என்று
கை கோர்த்து தோள் சாயும் தோழன் என்று
எனக்கு தோன்றியதாலே எல்லாம் மாறியதாலே
உன் கண்ணுக்குள்ளே காதலனே விழுந்து எழுகிறேன்

விழாமலே இருக்க முடியுமா ?
விழுந்துவிட்டேன் காதல் வலையிலே
வரமாலே போக முடியுமா ?
விரைந்து விட்டேன் காதல் வழியிலே

நிஜம் தான் நிஜம் தான்
இங்கே கனவுகளின் தொல்லை தாங்கல

விழாமலே இருக்க முடியுமா ?
விழுந்துவிட்டேன் காதல் வலையிலே
வரமாலே போக முடியுமா ?
விரைந்து விட்டேன் காதல் வழியிலே

இவள் கண்ணுக்குள்ளே உள்ளதென்ன என்ன சக்தி
இவள் பக்கமாக என்னை இழுக்கும் காந்த சக்தியோ
ஹோ ஹோ ஹோ
ஹொஹொ ஹோ ஹோ
இவன் கைகளிலே உள்ளதென்ன மந்திரகொளோ
இவன் தொட்டவுடன் உயிர்தெழுந்தது மங்கையின் உடலோ
ஹோ ஹோ ஹோ
ஹொஹொ ஹோ ஹோ
காதல் ஓரு பரமபதம்
கண்ணிரண்டில் தாயம் விழும்
ஏணி மேல ஏறும் போது
காதல் பாம்பு தீண்டினாள்

விழாமலே இருக்க முடியுமா ?
விழுந்துவிட்டேன் காதல் வலையிலே
வரமாலே போக முடியுமா ?
விரைந்து விட்டேன் காதல் வழியிலே

நிஜம் தான் நிஜம் தான்
இங்கே கனவுகளின் தொல்லை தாங்கல

விழாமலே இருக்க முடியுமா ?
விழுந்துவிட்டேன் காதல் வலையிலே
வரமாலே போக முடியுமா ?
விரைந்து விட்டேன் காதல் வழியிலே


இவள் மூச்சு காற்றை கேட்கும் எந்தன் வாயு மண்டலம்
இவள் பத்து விரலை பற்றும் போது உஷ்ண மண்டலம்
ஹோ ஹோ ஹோ
ஹொஹொ ஹோ ஹோ
இவன் உதடு எந்தன் உதட்டை தொட்டால் ஈர மண்டலம்
இவன் இழுத்து அணைக்கும் நேரத்திலே கோடி சங்கமம்
ஹோ ஹோ ஹோ
ஹொஹொ ஹோ ஹோ

சேர்ந்திருந்தால் ஏகாதேசி
சேலைக்கு தான் ஒரே குஷி
வயது வந்து வலையை விரிக்க
மாட்டி கொண்டேன் நீ ரசி

விழாமலே இருக்க முடியுமா ?
விழுந்துவிட்டேன் காதல் வலையிலே
வரமாலே போக முடியுமா ?
விரைந்து விட்டேன் காதல் வழியிலே

நிஜம் தான் நிஜம் தான்
இங்கே கனவுகளின் தொல்லை தாங்கல

விழாமலே இருக்க முடியுமா ?
விழுந்துவிட்டேன் காதல் வலையிலே
வரமாலே போக முடியுமா ?
விரைந்து விட்டேன் காதல் வழியிலே

வரான் வரான் பூச்சாண்டி ரயிலு வண்டியிலே

வரான் வரான் பூச்சாண்டி ரயிலு வண்டியிலே
வாரணாசி கேட்டை தாண்டி மெயிலு வண்டியிலே
[வரான் வரான்...]

ரயிலு வண்டியிலே மெயிலு வண்டியிலே
பறந்து வராண்டா பாஞ்சு வராண்டா
காட்டு வழியிலே எதிர் மேட்டு வழியிலே
தீ மூட்ட வராண்டா கொடி நாட்ட வராண்டா
[வரான் வரான்...]

ஏழு கடல தாண்டி.....
ஏழு கடல தாண்டி ஏழு மலைய தாண்டி
வருவான் பூச்சாண்டி......
வருவான் பூச்சாண்டி வலைய விரிப்பாண்டி
மனசெல்லாம் தோண்டி பாடம் படிப்பாண்டி
மனசெ குடுப்பாண்டி சபதம் முடிப்பாண்டி
[வரான் வரான்...]

கொல்லிமலை தாண்டி.....
கொல்லிமலை தாண்டி குடகு மலை தாண்டி
காத்தா வருவாண்டி.....
காத்தா வருவாண்டி கருப்பா வருவாண்டி
வேசம் கலைப்பாண்டி வெரதம் முடிப்பாண்டி
ஆரியக்கூத்தாடி காரியம் முடிப்பாண்டி
[வரான் வரான்...]


ஆல்பம்: இரண்டு பேர்
இசை: சுனில் வர்மா
பாடியவர்: ஆபாவாணன்

அனுபவம் புதுமை அவனிடம் கண்டேன்

அனுபவம் புதுமை அவனிடம் கண்டேன்
அந்நாளில் இல்லாத பொல்லாத எண்ணங்களே
ஆஹா... பொன்னான கைபட்டு புண்ணான கண்ணங்களே
லாலால லாலால லாலா
அனுபவம் புதுமை அவனிடம் கண்டேன்
அந்நாளில் இல்லாத பொல்லாத எண்ணங்களே
பொன்னான கைபட்டு புண்ணான கண்ணங்களே
லாலால லாலால லாலா
அனுபவம் புதுமை...

தள்ளாடி தள்ளாடி நடமிட்டு அவள் வந்தாள்
ஆஹா.. சொல்லாமல் கொள்ளாமல் அவளிடம் நான் சென்றேன்
அது கூடாதென்றாள்.. மனம் தாளாதென்றாள்
ஒன்று நானே தந்தேன்.. அது போதாதென்றாள்...
போதாதென்றாள்...
அனுபவம் புதுமை அவளிடம் கண்டேன்
அந்நாளில் இல்லாத பொல்லாத எண்ணங்களே
பொன்னான கைபட்டு புண்ணான கண்ணங்களே
அனுபவம் புதுமை...

கண்ணென்ன கண்ணென்று அருகினில் அவன் வந்தான்
கண்ணென்ன கண்ணென்று அருகினில் அவன் வந்தான்
ஆஹா.. பெண்ணென்ன பெண்ணென்று என்னென்ன கதை சொன்னான்
இது போதாதென்றேன்.. இனி கூடாதென்றான்
இன்னும் மீதம் என்றான்.. அது நாளை என்றான்
நாளை என்றான்...
அனுப்வம் புதுமை...

சிஙகாரத் தேர் போல குலுங்கிடும் அவள் வண்ணம்
ஆஹா..சித்தாடை முந்தானை தழுவிடும் என் எண்ணம்
அவள் எங்கே என்றாள்.. நான் இங்கே நின்றேன்
அவள் அங்கே வந்தாள்.. நாங்கள் எங்கோ சென்றோம்
எங்கோ சென்றோம்...

பனி போல் குளிர்ந்தது கனி போல் இனித்ததம்மா
ஆஹா.. மழை போல் விழுந்தது மலராய் மலர்ந்ததம்மா
ஒரு தூக்கம் இல்லை.. வெறும் ஏக்கம் இல்லை
பிறர் பார்க்கும் வரை எங்கள் பிரிவும் இல்லை
பிரிவும் இல்லை
அனுபவம் புதுமை அவனிடம் கண்டேன்
அந்நாளில் இல்லாத பொல்லாத எண்ணங்களே
பொன்னான கைபட்டு புண்ணான கண்ணங்களே
லாலால லாலால லாலா
அனுபவம் புதுமை...

படம் : காதலிக்க நேரமில்லை
இசை : விஸ்வநாதன் - ராமமூர்த்தி
பாடியவர் : பி.சுசீலா, PB ஸ்ரீநிவாஸ்

என்னிடத்தில் தேக்கி வைத்த காதல் முழுதும்

என்னிடத்தில் தேக்கி வைத்த காதல் முழுதும்
உன்னிடத்தில் கொண்டு வர தெரியவில்லை
காதலனே சொல்லுகின்ற வழி தெரிந்தால்
சொல்லி அனுப்பு ....

பூக்கள் உதிரும் சாலை வழியே பேசி செல்கிறேன்
மரங்கள் கூட நடப்பது போலே நினைத்து கொள்கிறேன்
கடிதம் ஒன்றில் கப்பல் செய்து மழையில் விடுகிறேன்
கனவில் மட்டும் காதல் செய்து இரவை கொல்கிறேன்

என்னை தேடி காதல் என்னும் வார்த்தை அனுப்பு
உன்னை தேடி வாழ்வின் மொத்தம் அர்த்தம் தருவேன்
செல்லரிக்கும் தனிமையில் செத்துவிடும் முன்
செய்தி அனுப்பு

யாரோ உன் காதலில் வாழ்வது யாரோ
உன் கனவினில் இரைவது யாரோ
என் சலனங்கள் தீர்த்திட வாராயோ

ஏனோ என் இரவுகள் நீள்வது ஏனோ
ஒரு பகலென சுடுவது ஏனோ
என் தனிமையின் அவஸ்தைகள் தீராதோ

காதல் தர நெஞ்சம் காத்து இருக்கு
காதலிக்க அங்கு நேரம் இல்லையா
இழையை போல் என் இதயம் தவறி விழுதே

என்னை தேடி காதல் என்னும் வார்த்தை அனுப்பு
உன்னை தேடி வாழ்வின் மொத்தம் அர்த்தம் தருவேன்
செல்லரிக்கும் தனிமையில் செத்துவிடும் முன்
செய்தி அனுப்பு