Tuesday, March 6, 2012

அய்யய்யய்யோ நெஞ்சு அலையுதடி

ஆண்: அய்யய்யய்யோ நெஞ்சு அலையுதடி
ஆகாயம் இப்போ வலையுதடி
என் வீட்டில் மின்னல் ஒளிருதடி
எம்மேல நெலா பொழியுதடி
உன்னப் பார்த்த அந்த நிமிஷம்
மறைஞ்சுப் போச்சே நகரவே இல்ல
தின்ன சோறும் செரிக்கவே இல்ல கொழம்பு வேணான்னு
உன் ஆச அடிக்கிறக் காத்து எங்கூட நடக்கிறதே
என் சேவல் கூவுற சத்தம் உம்பேரக் கேட்கிறதே
ஓ.. அய்யய்யய்யோ நெஞ்சு அலையுதடி
ஆகாயம் இப்போ வலையுதடி
என் வீட்டில் மின்னல் ஒளிருதடி
எம்மேல நெலா பொழியுதடி

(இசை...)

ஆண்: உன்னத் தொடும் அனல் காத்து
கடக்கையிலப் பூங்காத்து
கொழம்பித் தவிக்குதடி எம்மனசு....

பெண்: ஓ.. திருவிழா கடைகளைப் போல
தெனருறேன் நான்தானே
எதிரில் நீ வரும்போது
நனனன ஏன் தானோ

ஆண்: கண் சிமிட்டும் தீயே என்னை எரிச்சிப்புட்ட நீயே

பெண்: தாரா ரா ரா ரா ரா
தாரா ரா ரா ரா ரா

இருவர்: ஹோ.. அய்யய்யய்யோ நெஞ்சு அலையுதடி
ஆகாயம் இப்போ வளையுதடி
என் வீட்டில் மின்னல் ஒளிருதடி
ஹோ எம்மேல நெலா ஒளிருதடி

ஆண்: தாரே ராரே ரா ரா ரா....
தாரே ராரே ரா ரா ரா....
தாரே ராரே ரா ரா தாரே ராரா ராரா ரா
தாரே ராரே ரா ரா தாரே ராரா ராரா ரா

பெண்: தந்தனன நானே நன நானா
தந்தனனா தனனா தனனா நா நா நா
தந்தனன நானே நன நானா
தனனா தனனா தனனா நா நா நா

(இசை...)

ஆண்: மழைச்சாரல் விழும் வேளை
மண் வாசம் மணம் வீச
ஓம்மூச்சைத் தொடவே நான் மிதந்தேன்...

பெண்: கோடையில அடிக்கிற மழையா
நீ என்னை நனைச்சாயே
ஈரத்துல அணைக்கிற சுகத்தை
பார்வையிலக் கொடுத்தாயே

ஆண்: பாதகத்தி என்னை ஒரு பார்வையாலக் கொன்ன
ஊரோட வாழுற போதும்
யாரோடும் சேரல தான்

ஆண்: ஹோ.. அய்யய்யய்யோ நெஞ்சு அலையுதடி
ஆகாயம் இப்போ வலையுதடி
என் வீட்டில் மின்னல் ஒளிருதடி
எம்மேல நெலா பொழியுதடி
உன்னப் பார்த்த அந்த நிமிஷம்
மறைஞ்சுப் போச்சே நகரவே இல்ல
தின்ன சோறும் செரிக்கவே இல்ல கொழம்பு வேணான்னு
உன் ஆச அடிக்கிறக் காத்து எங்கூட நடக்கிறதே
என் சேவல் கூவுற சத்தம் உம்பேரக் கேட்கிறதே
ஓ.. அய்யய்யய்யோ நெஞ்சு அலையுதடி
ஆகாயம் இப்போ வலையுதடி
என் வீட்டில் மின்னல் ஒளிருதடி
எம்மேல நெலா பொழியுதடி

உன் பேரே தெரியாது

உன் பேரே தெரியாது உன்னை கூப்பிட முடியாது
நான் உனக்கோர் பேர் வைத்தேன் உனக்கே தெரியாது
அந்த பேரை அறியாது அட யாரும் இங்கேது
அதை ஒரு முறை சொன்னாலே தூக்கம் வாராது
அட தினந்தோறும் அதை சொல்லி உன்னை கொஞ்சுவேன்
நான் அடங்காத அன்பாலே உன்னை மிஞ்சுவேன்

சூடான பேரும் அதுதான் சொன்னவுடன் உதடுகள் கொதிக்கும்
சூரியனை நீயும் நினைத்தால் அது இல்லையே
ஜில்லென்ற பேரும் அதுதான் கேட்டவுடன் நெஞ்சம் குளிரும்
நதியென்று நீயும் நினைத்தால் அது இல்லையே
சிலிர்க்கவைக்கும் தெய்வமில்லை
மிளரவைக்கும் மிருகமில்லை
ஒளிவட்டம் தெரிந்தாலும் அது பட்டப்பேரில்லை
என் பேரின் பின்னால் வரும் பேர் நான் சொல்லவா..

பெரிதான பேரும் அதுதான் சொல்ல சொல்ல மூச்சே வாங்கும்
எத்தனை எழுத்துக்கள் என்றால் விடையில்லையே
சிறிதான பேரும் அதுதான்
சட்டென்று முடிந்தேபோகும் எப்படி சொல்வேன் நானும்
மொழி இல்லையே
சொல்லிவிட்டால் உதடு ஒட்டும்
எழுதிவிட்டால் தேனும் சொட்டும்
அது சுத்த தமிழ் பெயர்தான்
அயல் வார்த்தை அதில் இல்லை
என் பேரின் பின்னால் வரும் பேர் நான் சொல்லவா..

உன் பேரே தெரியாது உன்னை கூப்பிட முடியாது
நான் உனக்கோர் பேர் வைத்தேன் உனக்கே தெரியாது
அட தினந்தோறும் அதை சொல்லி உன்னை கொஞ்சுவேன்
நான் அடங்காத அன்பாலே உன்னை மிஞ்சுவேன்

படம்: எங்கேயும் எப்போதும்
இசை: சத்யா
பாடியவர்: மதுஸ்ரீ
வரிகள்: நா. முத்துக்குமார்

அந்தியில வானம்

ஆண்:
அந்தியில வானம்
தந்தனத்தோம் போடும்
அலையோடு சிந்து படிக்கும்..ம்…

பெண்:
சந்திரனே வாரும்
சுந்தரியை பாரும்
சதிராட்டம் சொல்லி கொடுக்கும்..ம்…

ஆண்:
ஓடும் காவேரி
இவ தான் என் காதலி
குளிர் காய தேடி தேடி
கொஞ்ச துடிக்கும்…ஹோய்….

பெண்:
அந்தியில வானம்
தந்தனத்தோம் போடும்
அலையோடு சிந்து படிக்கும்..ம்…

ஆண்:
சந்திரனே வாரும்
சுந்தரியை பாரும்
சதிராட்டம் சொல்லி கொடுக்கும்..ம்…

பெண்:
கட்டுமர சோழி போல
கட்டழகை உங்க மேலே
சாய்ஞ்சா சந்தோஷம் இரண்டல்லோ…. ஓஹோ….
பட்டு உடுத்த தேவையில்ல
முத்துமணி ஆசையில்ல
பாசம் நெஞ்சோடு வந்தல்லோ………ஓ…ஹோ…

ஆண்:
பாலூட்டும் சங்கு
அது தேனூட்டும் இங்கு
பாலாறும் தேனாறும் தாலாட்டும் பொழுது
பாய் மேலே நீ போடு தூங்காத விருந்து

பெண்:
நாணம் உண்டல்லோ
அதை நானும் பெண்டல்லோ
இதை நானும் நீயும் பாடும் பாட்டல்லோ

ஆண்:
அந்தியில வானம்
தந்தனத்தோம் போடும்
அலையோடு சிந்து படிக்கும்..ம்…

பெண்:
சந்திரனே வாரும்
சுந்தரியை பாரும்
சதிராட்டம் சொல்லி கொடுக்கும்..ம்…

ஆண்:
வெள்ளியிலை தாளம் தட்ட
சொல்லி ஒரு மேளம் கொட்ட
வேலை வந்தாச்சு கண்ணம்மா …… அஹா…
மல்லிகைப்பூ மாலைக் கட்ட
மாரியிட வேலைக்கிட்ட
மஞ்சம் போட்டாச்சு பொன்னம்மா….அஹ்ஹா….

பெண்:
கடலோர காத்து
ஒரு கவிப்பாடும் பாத்து
நாளாம நூலானேன் ஆளான நான் தான்
தோளோடு நான் சேர
கூறாதோ சேதி தான்

ஆண்:
தேகம் இரண்டல்லோ..ஒ…
இரு ஜீவன் ஒன்றல்லோ
இரு தேகம் ஒன்று ஜீவன் ஒன்று கூடும் இன்றல்லோ…ஒ….

பெண்:
அந்தியில வானம்
தந்தனத்தோம் போடும்
அலையோடு சிந்து படிக்கும்..ம்…

ஆண்:
சந்திரனே வாரும்
சுந்தரியை பாரும்
சதிராட்டம் சொல்லி கொடுக்கும்..ம்…

பெண்:
ஓடும் காவேரி
இவ தான் உன் காதலி
குளிர் காய தேடி தேடி
கொஞ்ச துடிக்கும்…ஹோய்….

ஆண்:
அந்தியில வானம்
ஹா…
தந்தனத்தோம் போடும்
ஆஹா ஹா…
அலையோடு சிந்து படிக்கும்..ம்…

பெண்:
சந்திரனே வாரும்
ஓய்….
சுந்தரியை பாரும்
ஆஹா ஹா…
சதிராட்டம் சொல்லி கொடுக்கும்..ம்…

கண்மணியே காதல் என்பது

கண்மணியே காதல் என்பது கற்பனையோ, காவியமோ, கண்
வரைந்த ஓவியமோ,
எத்தனை எத்தனை இன்பங்கள் நெஞ்சினில் பொங்குதம்மா,
பல்சுவையும் சொல்லுதம்மா

கண்மணியே காதல் என்பது கற்பனையோ, காவியமோ, கண்
வரைந்த ஓவியமோ,
எத்தனை எத்தனை இன்பங்கள் நெஞ்சினில் பொங்குதம்மா,
பல்சுவையும் சொல்லுதம்மா

மேளம் முழங்கிட தோரணம் ஆடிட காலமும் வந்ததம்மா
நேரமும் வந்ததம்மா

பார்வையின் ஜாடையில் தோன்றிடும் ஆசையில் பாடிடும்
எண்ணங்களே இந்த பாவையின் உள்ளத்திலே

பூவிதழ் தேன் குலுங்க, இந்த புன்னகை நான் மயங்க

ஆயிரம் காலமும் நான் உந்தன் மார்பினில் சாய்ந்திருப்பேன்
வாழ்ந்திருப்பேன்

கண்மணியே காதல் என்பது கற்பனையோ, காவியமோ, கண்
வரைந்த ஓவியமோ,

எத்தனை எத்தனை இன்பங்கள் நெஞ்சினில் பொங்குதம்மா,
பல்சுவையும் சொல்லுதம்மா

பாலும் கசந்தது பஞ்சனை நொந்தது காரணம் நீ அறிவாய் தேவையை நான் அறிவேன்

நாளொரு மோகமும் வேகமும் தாபமும் வாலிபம் தந்த சுகம்
இளம் வயதினில் வந்த சுகம்

தோள்களில் நீ அணைக்க வண்ண தாமரை நான் சிரிக்க

ஆயிரம் காலமும் நான் உந்தன் மார்பினில் தோரணமாய்
ஆடிடுவேன்

கண்மணியே காதல் என்பது கற்பனையோ, காவியமோ, கண்
வரைந்த ஓவியமோ,

எத்தனை எத்தனை இன்பங்கள் நெஞ்சினில் பொங்குதம்மா,
பல்சுவையும் சொல்லுதம்மா

கண்மணியே காதல் என்பது கற்பனையோ, காவியமோ, கண்
வரைந்த ஓவியமோ

மெல்லினமே மெல்லினமே

மெல்லினமே, மெல்லினமே,
நெஞ்சில் மெல்லிய காதல் பூக்கும்,
என் காதல் ஒன்றே,
மிக உயர்ந்ததடி,
அதை வானம் அண்ணாந்து பார்க்கும்,

மெல்லினமே, மெல்லினமே,
நெஞ்சில் மெல்லிய காதல் பூக்கும்,
என் காதல் ஒன்றே,
மிக உயர்ந்ததடி,
அதை வானம் அண்ணாந்து பார்க்கும்,

நான் தூர தெரியும் வானம்,
நீ துப்பட்டாவில் இழுத்தாய்,
என் இருவதைந்து வயதை,
ஒரு நொடிக்குள் எப்படி அடைத்தாய்?
ஓ ஹோ, ஹே-ஏ,

மெல்லினமே, மெல்லினமே,
நெஞ்சில் மெல்லிய காதல் பூக்கும்,
என் காதல் ஒன்றே,
மிக உயர்ந்ததடி,
அதை வானம் அண்ணாந்து பார்க்கும்,

வீசிப்போன புயலில்,
என் வேர்கள் சாயவில்லை,
ஒரு பட்டாம்பூச்சி மோத,
அது பட்டென்று சாய்ந்ததடி,

எந்தன் காதல் சொல்ல,
என் இதயம் கையில் வைத்தேன்,
நீ தாண்டி போன போது,
அது தரையில் விழுந்ததடி,

மண்ணிலே, செம்மண்ணிலே,
என் இதயம் துள்ளுதடி,
ஒவ்வொரு துடிப்பிலும்,
உன் பேர் சொல்லுதடி,

கனவு பூவே வருக,
உன் கையால் இதயம் தொடுக,
எந்தன் இதயம் கொண்டு,
நீ உந்தன் இதயம் தருக,
ஓ ஹோ, ஹே-ஏ,

மெல்லினமே, மெல்லினமே,
நெஞ்சில் மெல்லிய காதல் பூக்கும்,
என் காதல் ஒன்றே,
மிக உயர்ந்ததடி,
அதை வானம் அண்ணாந்து பார்க்கும்,

மண்ணை சேரும் முன்னே,
அடி மழைக்கு லட்சியம் இல்லை,
மண்ணை சேர்ந்த பின்னே,
அதன் சேவை தொடங்குமடி,

உன்னை காணும் முன்னே,
என் உலகம் தொடங்கவில்லை,
உன்னை கண்ட பின்னே,
என் உலகம் இயங்குதடி,

வானத்தில் ஏறியே,
மின்னல் பிடிக்கிறவன்,
பூக்களை பறிக்கவும்,
கைகள் நடுங்குகிறேன்,

பகவான் பேசுவதில்லை,
அட பக்தியும் குறைவதுமில்லை,
காதலி பேசவுமில்லை,
என் காதல் குறைவதுமில்லை,
ஓ ஹோ, ஹே-ஏ,,

மெல்லினமே, மெல்லினமே,
நெஞ்சில் மெல்லிய காதல் பூக்கும்,
என் காதல் ஒன்றே,
மிக உயர்ந்ததடி,
அதை வானம் அண்ணாந்து பார்க்கும்,
நான் தூர தெரியும் வானம்,
நீ துப்பட்டாவில் இழுத்தாய்,
என் இருவதைந்து வயதை,
ஒரு நொடிக்குள் எப்படி அடைத்தாய்?
ஓ ஹோ, ஹே-ஏ,