Friday, January 27, 2012

அன்று வந்ததும் அதே நிலா

அன்று வந்ததும் அதே நிலா
இன்று வந்ததும் அதே நிலா
இன்பம் தந்ததும் ஒரே நிலா
ஏங்க வைப்பதும் ஒரே நிலா.. ஆஆஆஆ
ஏங்க வைப்பதும் ஒரே நிலா


அன்று வந்ததும் அதே நிலா
இன்று வந்ததும் அதே நிலா
இன்பம் தந்ததும் ஒரே நிலா
ஏங்க வைப்பதும் ஒரே நிலா

காதல் தந்தது வண்ண நிலா
களங்கமில்லாக் கன்னி நிலா
மேகம் மூடிய வெள்ளி நிலா..
வெள்ளை உள்ளம் கொண்ட நிலா..ஆஆஆஆ
வெள்ளை உள்ளம் கொண்ட நிலா

அன்று வந்ததும் இதே நிலா

இன்று வந்ததும் அதே நிலா
இன்பம் தந்ததும் ஒரே நிலா
ஏங்க வைப்பதும் ஒரே நிலா

பேசச் சொன்னது அன்பு நிலா
பிரியச் சொன்னது துன்ப நிலா
தூங்க சொன்னது காதல் நிலா
துடிக்க விட்டது கால நிலா.. ஆஆஆஆ
துடிக்க விட்டது கால நிலா

அன்று வந்ததும் இதே நிலா

இன்று வந்ததும் அதே நிலா
இன்பம் தந்ததும் ஒரே நிலா
ஏங்க வைப்பதும் ஒரே நிலா

மலர்ந்தும் மலராத பாதி மலர்

மலர்ந்தும் மலராத பாதி மலர்
போல வளரும் விழி வண்ணமே
வண்து விடிந்தும் விடியாத காலைப் பொழுதாக
விளைந்த கலையன்னமே
நதியில் விளையாடி கொடியின் தலை சீவி நடந்த
இளம்தென்றலே
வளர் பொதிகை மலை தோன்றி மதுரை நகர்
கண்டு பொலிந்த தமிழ் மன்றமே

மலர்ந்தும் மலராத பாதி மலர்
போல வளரும் விழி வண்ணமே
வண்து விடிந்தும் விடியாத காலைப் பொழுதாக
விளைந்த கலையன்னமே
நதியில் விளையாடி கொடியின் தலை சீவி நடந்த
இளம்தென்றலே
வளர் பொதிகை மலை தோன்றி மதுரை நகர்
கண்டு பொலிந்த தமிழ் மன்றமே

யானைப் படை கொண்டு சேனை பல வென்று
ஆளப் பிறந்தாயடா
புவி ஆளப் பிறந்தாயடா
அத்தை மகளை மணம் கொண்டு இளமை வழி கண்டு
வாழப் பிறந்தாயடா
அத்தை மகளை மணம் கொண்டு... இளமை வழி கண்டு...
வாழப் பிறந்தாயடா

தங்கக் கடிகாரம் வைர மணியாரம்
தந்து மணம் பேசுவார்
பொருள் தந்து மணம் பேசுவார்
மாமன் தங்கை மகளான மங்கை உனக்காக
உலகை விலை பேசுவார்..உலகை விலை பேசுவார்
மாமன் தங்கை மகளான மங்கை உனக்காக
உலகை விலை பேசுவார்

நதியில் விளையாடி கொடியின் தலை சீவி
நடந்த இளம்தென்றலே
வளர் பொதிகை மலை தோன்றி மதுரை நகர் கண்டு
பொலிந்த தமிழ் மன்றமே

சிறகில் எனை மூடி அருமை மகள் போல
வளர்த்த கதை சொல்லவா
கனவில் நினையாத காலம் இடை வந்து பிரித்த
கதை சொல்லவா..
பிரித்த கதை சொல்லவா

கண்ணில் மணி போல மணியின் நிழல் போல
கலந்து பிறந்தோமடா
இந்த மண்ணும் கடல் வானும் மறைந்து
முடிந்தாலும் மறக்க முடியாதடா
உறவைப் பிரிக்க முடியாதடா
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

அன்பே ஆரிராரோ ஆரிராரோ
ஆரிராராரிரோ
அன்பே ஆரிராரிரோ..அன்பே ஆரிராரிரோ

வா வெண்ணிலா உன்னைத் தானே வானம் தேடுதே

வா வெண்ணிலா உன்னைத் தானே வானம் தேடுதே
வா வெண்ணிலா உன்னைத் தானே வானம் தேடுதே
மேலாடை மூடியே ஊர்கோலமாய் போவதேன்
மேலாடை மூடியே ஊர்கோலமாய் போவதேன்
வா வெண்ணிலா உன்னைத் தானே வானம் தேடுதே
வா வெண்ணிலா உன்னைத் தானே வானம் தேடுதே

முகம் பார்க்க நானும் முடியாமல் நீயும்
திரை போட்டு உன்னை மறைத்தாலே பாவம்
ஒரு முறையேனும் திருமுகம் காணும்
வரம் தரவேண்டும் எனக்கது போதும்
எனைச்சேர....எனைச்சேர எதிர்பார்த்து முன்னம்
ஏழுயென்மம் ஏங்கினேன்....

வா வெண்ணிலா உன்னைத் தானே வானம் தேடுதே
வா வெண்ணிலா உன்னைத் தானே வானம் தேடுதே
மேலாடை மூடியே ஊர்கோலமாய் போவதேன்
மேலாடை மூடியே ஊர்கோலமாய் போவதேன்
வா வெண்ணிலா உன்னைத் தானே வானம் தேடுதே
வா வெண்ணிலா உன்னைத் தானே வானம் தேடுதே

மலர் போன்ற பாதம் நடக்கின்ற போது
நிலம் போல உன்னை நான் தாங்வேண்டும்
இடையினில் ஆடும்.... உடையென நானும்
இணைபிரியாமல் துணைவரவேண்டும்
உனக்காகா.... உனக்காகாப் பனிக்காற்றைத்
தினம் தூது போகவேண்டினேன்....

வா வெண்ணிலா உன்னைத் தானே வானம் தேடுதே
வா வெண்ணிலா உன்னைத் தானே வானம் தேடுதே
மேலாடை மூடியே ஊர்கோலமாய் போவதேன்
மேலாடை மூடியே ஊர்கோலமாய் போவதேன்
வா வெண்ணிலா உன்னைத் தானே வானம் தேடுதே
வா வெண்ணிலா உன்னைத் தானே வானம்

ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்

ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்
கண் தேடுதே சொர்க்கம்
கை மூடுதே வெட்கம்
பொன் மாலை மயக்கம்
பொன் மாலை மயக்கம்
ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்
கண் தேடுதே சொர்க்கம்
கை மூடுதே வெட்ட்கம்
பொன் மாலை மயக்கம்
பொன் மாலை மயக்கம்

ராணியின் முகமே ரசிப்பதில் சுகமே (2)
பூரண நில்வோ புன்னகை மலரோ (2)
அழகினை வடித்தேன் அமுதத்தை குடிதேன்
அணைக்க துடித்தேன்…

…… ராஜாவின் பார்வை……………

ஆசையில் விளைந்த மாதுளம் கனியோ (2)
கனி இதழ் தேடும் காதலன் கிளியோ (2)
உனக்கென பிறந்தேன் உலகத்தை மறந்தேன்
உறவினில் வளர்த்தேன்…

………..ராஜாவின் பார்வை …………..

பாவலன் மறந்த பாடலில் ஒன்று
பாவையின் வடிவில் பார்த்ததும் இன்று
தலைவனை அழைத்தேன் தனிமையில் சொன்னேன்
தழுவிட குளிர்ந்தேன்………

ஒரு தங்கரதத்தில் பொன்மஞ்சள் நிலவு

ஒரு தங்கரதத்தில் பொன்மஞ்சள் நிலவு
ஒரு தங்கரதத்தில் பொன்மஞ்சள் நிலவு
என் தெய்வம் தந்த..........
என் தெய்வம் தந்த என் தங்கை


ஒரு தங்கரதத்தில் பொன்மஞ்சள் நிலவு
ஒரு தங்கரதத்தில் பொன்மஞ்சள் நிலவு


செம்மண்ணிலே தண்ணீரைப்போல் உண்டான சொந்தம் இது
சிந்தாமணி ஜோதியைப்போல் ஒன்றான பந்தம் இது
தங்கை அல்ல.....
தங்கை அல்ல தாயானவள்
கோடி பாடல் நான் பாட பொருளானாள்


ஒரு தங்க ரதத்தில் பொன்மஞ்சள் நிலவு
ஒரு தங்க ரதத்தில் பொன்மஞ்சள் நிலவு


கண்ணீரினால் நீராட்டினால் என் ஆசை தீராதம்மா
முன்னூறு நாள் தாலாட்டினால் என் பாசம் போகாதம்மா
என் ஆலயம் பொன் கோபுரம்
ஏழேழு ஜென்மங்கள் ஆனாலும் மாறாதம்மா


ஒரு தங்கரதத்தில் பொன்மஞ்சள் நிலவு
ஒரு தங்கரதத்தில் பொன்மஞ்சள் நிலவு


ராஜாவை நான் ராஜாத்திக்கு துணையாக பார்ப்பேன் அம்மா
தேவர்களின் பல்லாக்கிலே ஊர்கோலம் வைப்பேன் அம்மா
மணமங்கலம் திருக்குங்குமம் வாழ்க என்று பல்லாண்டு நான் பாடுவேன்


ஒரு தங்கரதத்தில் பொன்மஞ்சள் நிலவு
ஒரு தங்கரதத்தில் பொன்மஞ்சள் நிலவு
என் தெய்வம் தந்த..........
என் தெய்வம் தந்த என் தங்கை


ஒரு தங்க ரதத்தில் பொன்மஞ்சள் நிலவு
ஒரு தங்க ரதத்தில் பொன்மஞ்சள் நிலவு

ஆடுங்கடா மச்சான் ஆடுங்கடா

ஆடுங்கடா மச்சான் ஆடுங்கடா
அழகான பொண்ணப் பாத்து தேடுங்கடா
பாடுங்கடா மச்சான் பாடுங்கடா
பாவாடைப் பின்னால தான் ஓடுங்கடா
குத்த வசப் பொண்ணு எல்லாம் அத்தை பொண்ணு தான்
மத்தப் பொண்ணு எல்லாம் இந்த மாமன் பொண்ணுதான்
கைத்தட்டிக் கூப்புடுதே ரெண்டுக்கண்ணுதான்
ஏன்டான்னுக்கேட்க கேட்க வேண்டான்னு சொல்ல சொல்ல
யாருமே இல்ல இல்ல எங்களதான்
எப்போதும் எங்கப்பாடு மங்களந்தான்
எப்போதும் எங்கப்பாடு மங்களந்தான்

சிங்காரி நாத்தனா சிங்கிள் டீ ஆத்துனா
கோடுப்போட்ட கிளாஸ்சுல எனக்கு ஊத்துனா
தஞ்சாவூரு கச்சேரி தப்பாட்ட ஒய்யாரி
கல்யாணம் பன்னிக்கண்ணு காதக்கிள்ளுனாள்
பாம்பு புடிக்க மகுடி மகுடிதான்
பொண்ணப்புடிக்க கபடி கபடிதான்
பாம்பு புடிக்க மகுடி மகுடிதான்
பொண்ணப்புடிக்க கபடி கபடிதான்
ஆகாயம் மேலப்பாரு வான வேடிக்கை
அப்பனோடப் பொன்னு வந்தா கண்ணை மூடிக்க
ஊரோரம் கள்ளுக்கடை ஓடோடிவா வா
பங்காளி ஒன்னா சேர்ந்து பந்தாடலாம்
சித்தப்பன் பாக்கெட்டுல சில்லரைய எடுத்து
நாட்டாண்மை தின்ணையில சீட்டாடலாம்

தந்தானே தந்தானே தந்தானேனா

மங்கம்மா மாராப்பு மல்யுத்த வீராப்பு

சிக்குன்னு சிரிச்சாலே சிந்தும் மத்தாப்பு
ஆண்டாளு இடுப்புல அஞ்சாரு மடிப்புல
குத்தாட்டம் ஆடுதே கொத்து சாவிதான்
பல்லப்புடுங்க வாயக் காட்டுடா
பொண்ணப் புடிக்கப் பல்லக்காட்டுடா
பல்லப்புடுங்க வாயக் காட்டுடா
பொண்ணப் புடிக்கப் பல்லக்காட்டுடா
பாவாடைக்கட்டி வந்தா பச்சகுதுர
சேர்ந்துக்கிட்டு ஆட்டம் போட வாடி எதுர
ஆண்கோழி எங்களோட ஆட்டத்தப் பாரு
வான் கோழிப்போல வந்து ஜோடி சேரு
ஜான்புள்ள ஆனாக்கூட ஆண்புள்ள நான் தான்
ஏம்புள்ள என்னப்பாத்து ஓடிப்போற
ஜான்புள்ள ஆனாக்கூட ஆண்புள்ள நான் தான்
ஏம்புள்ள என்னப்பாத்து ஓடிப்போற

ஆடுங்கடா மச்சான் ஆடுங்கடா
அழகான பொண்ணப் பாத்து தேடுங்கடா
பாடுங்கடா மச்சான் பாடுங்கடா
பாவாடைப் பின்னால தான் ஓடுங்கடா
குத்த வசப் பொண்ணு எல்லாம் அத்தை பொண்ணு தான்
மத்தப் பொண்ணு எல்லாம் என் மாமன் பொண்ணுதான்
கைத்தட்டிக் கூப்புடுதே ரெண்டுக்கண்ணுதான்
ஏன்டான்னுக்கேட்க கேட்க வேண்டான்னு சொல்ல சொல்ல
யாருமே இல்ல இல்ல எங்களதான்
எப்போதும் எங்கப்பாடு மங்களந்தான்

வாழ நினைத்தால் வாழலாம்

வாழ நினைத்தால் வாழலாம்
வழியா இல்லை பூமியில்
ஆழக் கடலும் சோலையாகும்
ஆசையிருந்தால் நீந்திவா

(வாழ)

பார்க்கத் தெரிந்தால் பாதை தெரியும்
பார்த்து நடந்தால் பயணம் தொடரும்
பயணம் தொடர்ந்தால் கதவு திறக்கும்
கதவு திறந்தால் காட்சி கிடைக்கும்
காட்சி கிடைத்தால் கவலை தீரும்
கவலை தீர்ந்தால் வாழலாம்

(வாழ)

கண்ணில் தெரியும் வண்ணப் பறவை
கையில் கிடைத்தால் வாழலாம்
கருத்தில் வளரும் காதல் எண்ணம்
கனிந்து வந்தால் வாழலாம்
கன்னி இளமை என்னை அணைத்தால்
தன்னை மறந்தே வாழலாம்

(வாழ)

ஏரிக்கரையில் மரங்கள் சாட்சி
ஏங்கித் தவிக்கும் இதயம் சாட்சி
துள்ளித் திரியும் மீங்கள் சாட்சி
துடித்து நிற்கும் இளமை சாட்சி
இருவராக ஆனபோதும்
ஒருவராக வாழலாம்

(வாழ)

மீனாட்சி மீனாட்சி… அண்ணன் காதல் என்னாச்சி

ஆண்டாளு

ஏன்ன அது அண்ணா நகர்-ல இருக்குதுன்னா

மச்சி… நான் சாமிய கூப்பிடுறேன்டா…

கூப்புடு கூப்புடு…

ஆண்டாளுக்கு பெருமாள் துணை
பார்வதி-க்கு சிவனார் துணை
அந்த வள்ளி-க்கு முருகன் துணை
லோக்கல் முனியம்மாவுக்கு
நம்ம கலக்கல் கன்னியப்பன் துணை
நம்ப அண்ணனுக்கு யார் துணை….

கரெக்டா பாடுனன்னா…

தானனன்னா தானனன்னா தானனன்னா
தானனன்னா தானனன்னா தானனன்னா
போடு… தானனன்னா தானனன்னா தானனன்னா
தானனன்னா தானனன்னா தானனன்னா

மீனாட்சி மீனாட்சி…
அண்ணன் காதல் என்னாச்சி

மீனாட்சி மீனாட்சி…
அண்ணன் காதல் என்னாச்சி
மீனாட்சி மீனாட்சி…
அண்ணன் காதல் என்னாச்சி
தூங்கி ரொம்ப நாள் ஆச்சி
நாலு வருஷம் வீணாச்சி

ஒத்துக்கம்மா ஒத்துக்கம்மா ஒத்துக்கம்மா
பாவப்பட்ட ஆம்பிள்ளைய ஏத்துக்கம்மா

மீனாட்சி மீனாட்சி…
அண்ணன் காதல் என்னாச்சி
மீனாட்சி மீனாட்சி…
அண்ணன் காதல் என்னாச்சி
தூங்கி ரொம்ப நாள் ஆச்சி
நாலு வருஷம் வீணாச்சி

ஒத்துக்கம்மா ஒத்துக்கம்மா ஒத்துக்கம்மா
பாவப்பட்ட ஆம்பிள்ளைய ஏத்துக்கம்மா

சேத்து வச்சாரு சேத்து வச்சாரு எத்தனை காதலதான்
கேட்டுப்பாரு கேட்டுப்பாரு கண்ணகி சிலையத்தான்
மாமுவ பாரு மாமுவ பாரு செக்சி ஃபிகரு தான்
சொல்லிக்கிட்டாங்க சொல்லிக்கிட்டாங்க காலேஜ் பொண்ணுங்கதான்
அண்ணன் கை லக்கு நீ உட்டுக்கம்மா லுக்கு
லைஃப் இன்ன புக்கு அத புரட்டினாதான் கிக்கு
கிக்கு இன்ன கிக்கு பெக்கு போட்ட கிக்கு
தொக்குன்னாக்கா தொக்கு ஜிஞ்சர் சிக்கன் தொக்கு

ஒத்துக்கம்மா ஒத்துக்கம்மா ஒத்துக்கம்மா
பாவப்பட்ட ஆம்பிள்ளைய ஏத்துக்கம்மா

மீனாட்சி மீனாட்சி…
அண்ணன் காதல் என்னாச்சி
மீனாட்சி மீனாட்சி…
அண்ணன் காதல் என்னாச்சி
—-
வத்திபெட்டின வத்திபெட்டின குச்சிங்க உரசத்தான்
பத்திகிச்சுன்ன பத்திகிச்சுன்ன பீடி குடிக்கத்தான்
பொண்ணுன்னாக்கா பொண்ணுன்னாக்கா புருஷன் அணைக்கத்தான்
இல்லைன்னாக்கா இல்லைன்னாக்கா ஏது உலகந்தான்
அத்தை பெத்த சிட்டு நீ ஒத்தை குழ புட்டு
பனாரஸு பட்டு அத கட்டிக்கடி தொட்டு
கட்டுன்னா கட்டு கரன்சி நோட்டு கட்டு
துட்டுன்னாக்கா துட்டு ரிசர்வ் பேங்கு துட்டு

ஒத்துக்கம்மா ஒத்துக்கம்மா ஒத்துக்கம்மா
பாவப்பட்ட ஆம்பிள்ளைய ஏத்துக்கம்மா

மீனாட்சி மீனாட்சி…
அண்ணன் காதல் என்னாச்சி
மீனாட்சி மீனாட்சி…
அண்ணன் காதல் என்னாச்சி
தூங்கி ரொம்ப நாள் ஆச்சி
நாலு வருஷம் வீணாச்சி

ஒத்துக்கம்மா ஒத்துக்கம்மா ஒத்துக்கம்மா
பாவப்பட்ட ஆம்பிள்ளைய ஏத்துக்கம்மா
ஒத்துக்கம்மா ஒத்துக்கம்மா ஒத்துக்கம்மா
பாவப்பட்ட ஆம்பிள்ளைய ஏத்துக்கம்மா

நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்

நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்
நாளோடும் பொழுதோடும் உறவாட வேண்டும் உறவாட வேண்டும்
நான் காணும் உலகங்கள் நீ காண வேண்டும் நீ காண வேண்டும்
நீ காணும் பொருள் யாவும் நானாக வேண்டும் நானாக வேண்டும்

பாலோடு பழம் யாவும் உனக்காக வேண்டும் உனக்காக வேண்டும்
பாவை உன் முகம் பார்த்துப் பசியாற வேண்டும் பசியாற வேண்டும்
மனதாலும் நினைவாலும் தாயாக வேண்டும் நானாக வேண்டும்
மடி மீது விளையாடும் சேயாக வேண்டும் நீயாக வேண்டும்
(நான் பேச)

சொல்லென்றும் மொழியென்றும் பொருளென்றும் இல்லை பொருளென்றும் இல்லை
சொல்லாத சொல்லுக்கு விலையேதும் இல்லை விலையேதும் இல்லை
ஒன்றோடு ஒன்றாக உயிர் சேர்ந்த பின்னே உயிர் சேர்ந்த பின்னே
உலகங்கள் நமையன்றி வேறேதும் இல்லை வேறேதும் இல்லை
(நான் பேச)

தீயில் விழுந்த தேனா இவன் தீயில் வழிந்த தேனா

தீயில் விழுந்த தேனா இவன் தீயில் வழிந்த தேனா
தாயைக் காக்கும் மகனா இல்லை தாயுமானவனா
மழையின் நீர் வாங்கி மழையே அழுவது போல்
தாயின் உயிர் தாங்கி தனையன் அழுவானோ
உயிரை தந்தவளின் உயிரைக் காப்பானா
கடனைத் தீர்ப்பானா ஏய்
தங்கம் போலே இருந்தவள் தான்
சருகைப் போலே ஆனதனால்
சிங்கம் போலே இருந்த மகன்
செவிலியைப் போலே ஆவானா
(தீயில்..)

ஓர் சொல்லில் ஓர் உலகம் அம்மா ஆ
உலகெல்லாம் ஓர் சொந்தம் அம்மா ஆ
(ஓர்..)
நீ சுமந்த பிள்ளையாய் நானிருந்தேன் அம்மா
நான் சுமக்கும் பிள்ளையாய் நீ ஆனாய் அம்மா
எனக்கேதும் ஆனதென்றால் உனக்கு வேறு பிள்ளை உண்டு
உனக்கேதும் ஆனதென்றால் எனக்கு வேறு தாயிருக்கா ஆ
நெஞ்சை க்கூட்டி வளர்த்தவளை கண்ணில் மணியாய் சுமந்தவளை
மண்ணில் இட்டு விடுவானா மனதில் மட்டும் சுமப்பானா
(தீயில்..)

தாயின் மடிதானே உலகம் தொடங்கும் இடம்
தாயின் மடிதானே உலகம் முடியும் இடம்
கருணைத் தாயின் நினைவினிலே
கல்லும் மண்ணும் அழுது விடும் கண்ணீர் துளிகளின் வேகத்திலே
கண்ணின் மணிகளும் இழந்து விடும்
(தீயில்..)

இதுதானா இதுதானா எதிர்ப்பார்த்த அந்நாளும் இதுதானா

இதுதானா இதுதானா
எதிர்ப்பார்த்த அந்நாளும் இதுதானா
இவந்தானா இவந்தானா
மலர் சூடும் மணவாளன் இவந்தானா

பகலிலும் நான் கண்ட கனவுகள் நனவாக
உனதானேன் நான் உனதானே
திருமண நாள் எண்ணி நகர்ந்திடும் என் நாட்கள்
சுகமான ஒரு சுமையானேன்
இதழ் பிரிக்காமல் குரல் எழுப்பாமல்
நான் எனக்கான ஒரு பாடல் பாடிக்கொள்வேன்(இதுதானா..)

இன்மேல் வீட்டில் தினமும் நடக்கும்
நாடகம் இனித்திடுமே
ஒளிந்திடும் எனையே உனது விழிகள்
தேடியே அலைந்திடுமே
மாடியின் வலைவினில் என்னை கண்டு பிடிப்பாய்
பார்க்காதவன் போல் சிறப்பாய் நடிப்பாய்
விடுமென திரும்பி என் இடை வளைப்பாய்
படிகளின் அடியினில் என்னை அள்ளி அணைப்பாய்
அச்சங்களும் அச்சப்பட்டு மறைந்திடுமே
எண்ணங்களும் விட்டுபட்டு ஒளிந்திடுமே
(இதுதானா..)

ஞாயிறு மதியம் சமையல் உனது
விரும்பி நீ சமைத்திடுவாய்
வேடிக்கை பா என என்னை அமர்த்தி
துணிகளும் துவைத்திடுவாய்
ஊருக்குள் அனைவரும் உன்னை கண்டு நடுங்க
வீட்டினில் நீ ஒரு குழந்தையாய் சிணுங்க
பெருமையில் என் முகம் இன்னும் மினுங்க
இருவரின் உலகமும் இருவரி சுருங்க
மகிழ்ச்சியில் எந்தன் மனம் மலர்ந்திடுமே
என் உயரமோ இன்னும் கொஞ்சம் வளர்ந்திடுமே
அஹ ஹாஹஹா.
மலர் சூட்டும் மணவாளன் இவந்தானா
(பகலிலும்..)

என் காதலே என் காதலே என்னை என்ன செய்ய போகிறாய்

என் காதலே என் காதலே என்னை என்ன செய்ய போகிறாய்
நான் ஓவியன் என்று தெரிந்தும் நீ ஏன் கண்ணிரண்டை கேட்கிறாய்

சிலுவைகள் சிறகுகள் ரெண்டில் என்ன தரப் போகிறாய்
கிள்ளுவதை கிள்ளிவிட்டு ஏன் தள்ளி நின்று பார்க்கிறாய்
காதலே நீ பூவெறிந்தால் எந்த மழையும் கொஞ்சம் குழையும்
காதலே நீ கல்லெறிந்தால் எந்த கடலும் கொஞ்சம் கலங்கும்

இனி மீள்வதா இல்லை வீழ்வதா
உயிர் வாழ்வதா இல்லை போவதா

அமுதென்பதா விஷமென்பதா
உன்னை அமுத விஷமென்பதா
(என் காதலே)

காதலே உன் காலடியில் நான் விழுந்து விழுந்து தொழுவேன்
கண்களை நீ மூடி கொண்டால் நான் குலுங்கி குலுங்கி அழுவேன்
இது மாற்றமா தடுமாற்றமா
என் நெஞ்சிலே பனிமூட்டமா
உயிர் தோழியா இல்லை எதிரியா, என்று தினமும் போராட்டமா

அஞ்சலி...அஞ்சலி.. புஷ்பாஞ்சலி

அஞ்சலி......... அஞ்சலி......... புஷ்பாஞ்சலி.........

அஞ்சலி......... அஞ்சலி......... புஷ்பாஞ்சலி.........



பூவே... உன் பாதத்தில் புஷ்பாஞ்சலி.........

பொன்னே... உன் பெயருக்கு பொன்னாஞ்சலி.........

கண்ணே உன் குரலுக்கு கீதாஞ்சலி.........

கண் காணா அழகுக்கு கவிதாஞ்சலி.........!



அஞ்சலி......... அஞ்சலி......... புஷ்பாஞ்சலி.........

அஞ்சலி......... அஞ்சலி......... புஷ்பாஞ்சலி.........



பூவே... உன் பாதத்தில் புஷ்பாஞ்சலி.........

பொன்னே... உன் பெயருக்கு பொன்னாஞ்சலி.........

கண்ணே உன் குரலுக்கு கீதாஞ்சலி.........

கண் காணா அழகுக்கு கவிதாஞ்சலி.........!



காதல் வந்து தீண்டும் வரை இருவரும் தனித்தனி........

காதலின் பொன் சங்கிலி இணைத்தது கண்மணி.........



கடலிலே மழை மேகத்தில் எந்த துளி மழைத்துளி...

காதலில் அது போல நான் கலந்திட்டேன் காதலி.....



திருமகள் திருப்பாதம் பிடித்துவிட்டேன்....

தினமொரு புதுப்பாடல் வடித்துவிட்டேன்........



அஞ்சலி......... அஞ்சலி......... என்னுயிர் காதலி...........!



பூவே... உன் பாதத்தில் புஷ்பாஞ்சலி.........

பொன்னே... உன் பெயருக்கு பொன்னாஞ்சலி.........

கண்ணே உன் குரலுக்கு கீதாஞ்சலி.........

கண் காணா அழகுக்கு கவிதாஞ்சலி.........!



அஞ்சலி......... அஞ்சலி......... புஷ்பாஞ்சலி.........

அஞ்சலி......... அஞ்சலி......... புஷ்பாஞ்சலி.........



பூவே... உன் பாதத்தில் புஷ்பாஞ்சலி.........

பொன்னே... உன் பெயருக்கு பொன்னாஞ்சலி.........

கண்ணே உன் குரலுக்கு கீதாஞ்சலி.........

கண் காணா அழகுக்கு கவிதாஞ்சலி.........!



சீதையின் காதல் அன்று..... விழி வழி நுழைந்தது...

கோதையின் காதல் இன்று..... செவிவழி புகுந்தது....

என்னவோ என் நெஞ்சினை... இசை வந்து துளைத்தது.....

இசை வந்த பாதை வழி... தமிழ் மெல்ல நுழைந்தது....



இசை வந்த திசை பார்த்து.. மனம் குழைந்தேன்................

தமிழ் வந்த திசை பார்த்து..... உயிர் கசிந்தேன்...............



அஞ்சலி......... அஞ்சலி......... இவள்தனைக்காதலி........



அன்பே.. உன் அன்புக்கு புஷ்பாஞ்சலி...

மன்னா.. உன் கண்ணுக்கு நடனாஞ்சலி...

கண்ணா.. உன் இசை வாழ கீதாஞ்சலி...

கவியே.. உன் கவி வாழ கவிதாஞ்சலி...



அஞ்சலி......... அஞ்சலி......... புஷ்பாஞ்சலி.........

அஞ்சலி......... அஞ்சலி......... புஷ்பாஞ்சலி.........



பூவே... உன் பாதத்தில் புஷ்பாஞ்சலி.........

பொன்னே... உன் பெயருக்கு பொன்னாஞ்சலி.........

கண்ணே உன் குரலுக்கு கீதாஞ்சலி.........

கண் காணா அழகுக்கு கவிதாஞ்சலி.........!



அழகியே.. உனைப்போலவே அதிசயம் இல்லையே...

அஞ்சலி பேரைச்சொன்னேன்..... அவிழ்ந்தது முல்லையே...

கார்த்திகை மாதம் போனால்.... கடும் மழை இல்லையே...

கண்மணி... நீயில்லையேல்.. கவிதைகள் இல்லையே.......



நீயென்ன நிலவோடு.... பிறந்தவளா......

பூவுக்குள் கருவாகி வளர்ந்தவளா........



அஞ்சலி......... அஞ்சலி......... என்னுயிர்க்காதலி...................!



பூவே... உன் பாதத்தில் புஷ்பாஞ்சலி.........

பொன்னே... உன் பெயருக்கு பொன்னாஞ்சலி.........

கண்ணே உன் குரலுக்கு கீதாஞ்சலி.........

கண் காணா அழகுக்கு கவிதாஞ்சலி.........!



அஞ்சலி......... அஞ்சலி......... புஷ்பாஞ்சலி.........

அஞ்சலி......... அஞ்சலி......... புஷ்பாஞ்சலி.........



பூவே... உன் பாதத்தில் புஷ்பாஞ்சலி.........

பொன்னே... உன் பெயருக்கு பொன்னாஞ்சலி.........

கண்ணே உன் குரலுக்கு கீதாஞ்சலி.........

கண் காணா அழகுக்கு கவிதாஞ்சலி.........!

சிப்பி இருக்குது முத்தும் இருக்குது

சிப்பி இருக்குது முத்தும் இருக்குது
திறந்து பார்க்க நேரம் இல்லடி ராஜாத்தி

சிந்தை இருக்குது சந்தம் இருக்குது
கவிதை பாட நேரம் இல்லடி ராஜாத்தி

சிப்பி இருக்குது முத்தும் இருக்குது
திறந்து பார்க்க நேரம் இல்லடி ராஜாத்தி
சிந்தை இருக்குது சந்தம் இருக்குது
கவிதை பாட நேரம் இல்லடி ராஜாத்தி

சந்தங்கள்..
நீயானால்..
சங்கீதம்..
நானாவேன்..


சந்தங்கள் நீயானால் சங்கீதம் நானாவேன்

சிப்பி இருக்குது முத்தும் இருக்குது
திறந்து பார்க்க நேரம் இல்லடி ராஜாத்தி

சிந்தை இருக்குது சந்தம் இருக்குது
கவிதை பாட நேரம் இல்லடி ராஜாத்தி

சிரிக்கும் சொர்க்கம்
தங்க தட்டு எனக்கு மட்டும்
தேவை பாவை பார்வை
நினைக்க வைத்து

நெஞ்சில் நின்று நெருங்கி வந்து

மயக்கம் தந்தது யார் தமிழோ அமுதோ கவியோ

சிப்பி இருக்குது முத்தும் இருக்குது
திறந்து பார்க்க நேரம் இல்லடி ராஜாத்தி

சிந்தை இருக்குது சந்தம் இருக்குது
கவிதை பாட நேரம் இல்லடி ராஜாத்தி

சந்தங்கள் நீயானால் சங்கீதம் நானாவேன்

மழையும் வெயிலும் என்ன
உன்னை கண்டால் மலரும் முள்ளும் என்ன
ரதியும் நாடும் அழகில் ஆடும் கண்கள்
கவிதை உலகம் கெஞ்சும்
உன்னை கண்டால் கவிஞர உள்ளம் கொஞ்சும்

கொடுத்த சந்தங்களில் என் மனதில் நீ அறிய நான் உரைத்தேன்
கொடுத்த சந்தங்களில் என் மனதில் நீ அறிய நான் உரைத்தேன்

பெ: சிப்பி இருக்குது முத்தும் இருக்குது திறந்துப் பார்க்க நேரம் வந்தது இப்போது
சிந்தை இருக்குது சந்தம் இருக்குது கவிதை பாடி நேரம் கலந்திருப்பது எப்போது

உன்னைத்தானே தஞ்சம் என்று நம்பி வந்தேன் நானே

உன்னைத்தானே தஞ்சம் என்று நம்பி வந்தேன் நானே
உயிர் பூவெடுத்து ஒரு மாலையிட்டேன்
விழி நீர் தெளித்து ஒரு கோலமிட்டேன்

(உன்னைத்தானே...)

மலரின் கதவொன்று திறக்கின்றதா
மௌனம் வெளியேற தவிக்கின்றதா
பெண்மை புதிதாக துடிக்கின்றதா
உயிரில் அமுதங்கள் சுரக்கின்றதா

முத்தம் கொடுத்தானே இதழ் முத்துக்குளித்தானே
இரவுகள் இதமானதா?
கட்டிப்பிடித்தால் தொட்டு இழுத்தால்
வெட்கம் என்ன சத்தம் போடுதா?


என்னத்தானே தஞ்சம் என்று நம்பி வந்தாய் மானே
உயிர் பூவெடுத்து ஒரு மாலையிடு
விழி நீர் தெளித்து ஒரு கோலமிடு

(என்னத்தானே...)

உலகம் எனக்கென்றும் விளங்காதது
உறவே எனக்கின்று விலங்கானது
அடடா முந்தானை சிறையானது
இதுவே என் வாழ்வில் முறையானது

பாறை ஒன்றின் மேலே ஒரு பூவாய் முளைத்தாயே
உறவுக்கு உயிர் தந்தாயே
நானே எனக்கு நண்பன் இல்லையே
உன்னால் ஒரு சொந்தம் வந்தது

(என்னத்தானே...)

ராமனின் மோகனம் ஜானகி மந்திரம்

ராமனின் மோகனம்
ஜானகி மந்திரம்
ராமனின் மோகனம்
ஜானகி மந்திரம்
ராமாயணம் பாராயணம் காதல் மங்கலம்
தெய்வீகமே உறவு....
ராமனின் மோகனம்
ஜானகி மந்திரம்

இடமும் வலமும் இரண்டு உடலும் மனமும் ஒ ஒ...
இனைதோங்கி நிற்கும்போது
இதையன்றி எண்ணம் ஏது
இளவேனிர் காலம் வசந்தம்

ஒரு கோவில் மணியின் ராகம்.... லல லல லல லல லா...
ஒரு கோவில் மணியின் ராகம்
ஒரு வானில் தவழும் மேகம்
பறந்தோடும் நாள் இன்றுதான் கண்களே

ராமாயணம் பாராயணம் காதல் மங்கலம்
தெய்வீகமே உறவு.... ஹோ ஹோ...

ராமனின் மோகனம்
ஜானகி மந்திரம்

இடையும் கொடியும் குலுங்கும் நடையும் மொழியும் ஹ ஆ ஆ....
எடை போட கம்பன் இல்லை
எனக்கந்த திறனும் இல்லை
இலை மூடும் வாழை பருவம்

மடி மீது கோவில் கொண்டு.... லல லல லல லல லா...
மடி மீது கோவில் கொண்டு
மழை காலம் வெயில் கண்டு
சிலையாக நான் நிற்பதே அற்புதம்
ராமாயணம் பாராயணம் காதல் மங்கலம்
தெய்வீகமே உறவு....

ராமனின் மோகனம்
ஜானகி மந்திரம்

லா லல லா லல
லா லல லா லல

ஹேய் பாண்டியனா கொக்கா கொக்கா

ஆரம்ப இசை பல்லவி

ஆண் : ஹேய் பாண்டியனா கொக்கா கொக்கா
எனக்கு புடிக்காதே காக்கா காக்கா
பாண்டியனா கொக்கா கொக்கா
எனக்கு புடிக்காதே காக்கா காக்கா
ஐஸ்ச வைக்கிறவன் ஜால்ரா தட்டுறவன்
பாச்சா பலிக்காதே ஹோய்
நானா சிக்கிறவன் தானா நிக்கிறவன்
வேண்டாம் இளிக்காதே
மச்சான் மச்சான் மச்சான்

பெண்குழு : பாண்டியனா கொக்கா கொக்கா

ஆண் : எனக்கு

பெண்குழு : புடிக்காதே காக்கா காக்கா

ஆண் : ஆஹா

பெண்குழு : பாண்டியனா கொக்கா கொக்கா

ஆண் : எனக்கு

பெண்குழு : புடிக்காதே காக்கா காக்கா

(இசை) சரணம் - 1

ஆண் : நோட்டுக்களை நீட்டினா
நோட்டங்களை காட்டினா
ரூட்டு நான் மாறாதவன்
மாலைகளை சூட்டினா
ஆசைகளை மூட்டினா
ராங்கா நான் போகாதவன்

பெண்குழு : சார் பேரு மிஸ்டர் ரைட்டு

ஆண் : மிஸ்டர் ரைட்டு

பெண்குழு : சார் பேச்சு ரொம்ப கரெக்டு

ஆண் : ரொம்ப கரெக்டு
என் பேரு மிஸ்டர் ரைட்டு

பெண்குழு : மிஸ்டர் ரைட்டு

ஆண் : என் பேச்சு ரொம்ப கரெக்டு

பெண்குழு : ரொம்ப கரெக்டு

ஆண் : இருப்பேன் ஒரு லட்சியமா
முடிப்பேன் அதைக் கச்சிதமா
புடிச்சா நான் உடும்பாட்டம்
புடிப்பேன்டா

பெண்குழு : பாண்டியனா கொக்கா கொக்கா

ஆண் : எனக்கு

பெண்குழு : புடிக்காதே காக்கா காக்கா

ஆண் : ஆஹா

பெண்குழு : பாண்டியனா கொக்கா கொக்கா

ஆண் : எனக்கு

பெண்குழு : புடிக்காதே காக்கா காக்கா

ஆண் : ஹேய் ஐஸ்ச வைக்கிறவன் ஜால்ரா தட்டுறவன்
பாச்சா பலிக்காதே ஏ ஏ
நானா சிக்கிறவன் தானா நிக்கிறவன்
வேண்டாம் இளிக்காதே
மச்சான் மச்சான் மச்சான் ஹோய்

பெண்குழு : பாண்டியனா கொக்கா கொக்கா

ஆண் : எனக்கு

பெண்குழு : புடிக்காதே காக்கா காக்கா

ஆண் : ஆங்

பெண்குழு : சிங்கர சிங்கா சிங்கர சிங்கா
சிங்கர சிங்கா சிங்கர சிங்கா ஓஓ
சிங்கர சிங்கா சிங்கர சிங்கா
சிங்கர சிங்கா சிங்கர சிங்கா ஓஓ
சிங்கர சிங்கர சிங்கர சிங்கர
சிங்கர சிங்கர சிங்கர சிங்கர ஓஓ

(இசை) சரணம் - 2

ஆண் : பேச்சுலத்தான் ரீல் விட்டு
காதுலத்தான் பூ சுத்த
பார்த்தா நான் பொல்லாதவன்
நான் படைச்ச மூளைய
என்னுடைய வேலைய
வெளிய நான் சொல்லாதவன்

பெண்குழு : போடாதே தப்புக் கணக்கு

ஆண் : தப்புக் கணக்கு

பெண்குழு : ஏராளம் நம்ப சரக்கு

ஆண் : நம்ப சரக்கு
போடாதே தப்புக் கணக்கு

பெண்குழு : தப்புக் கணக்கு

ஆண் : ஏராளம் நம்ப சரக்கு

பெண்குழு : நம்ப சரக்கு

ஆண் : பொதுவா இதை ஒத்துக்கணும்
பயந்தா கொஞ்சம் ஒத்திக்கணும்
வலை வீசிப் பார்த்தாலும் விழ மாட்டேன்
பாண்டியனா கொக்கா கொக்கா
எனக்கு புடிக்காதே காக்கா காக்கா

பெண்குழு : பாண்டியனா கொக்கா கொக்கா

ஆண் : எனக்கு

பெண்குழு : புடிக்காதே காக்கா காக்கா

ஆண் : ஓய் ஐஸ்ச வைக்கிறவன் ஜால்ரா தட்டுறவன்
பாச்சா பலிக்காதே ஏ ஏ
நானா சிக்கிறவன் தானா நிக்கிறவன்
வேண்டாம் இளிக்காதே
மச்சான் மச்சான் மச்சான்

பெண்குழு : பாண்டியனா கொக்கா கொக்கா

ஆண் : எனக்கு

பெண்குழு : புடிக்காதே காக்கா காக்கா

ஆண் : ஆங்

பெண்குழு : பாண்டியனா கொக்கா கொக்கா

ஆண் : எனக்கு

{பெண்குழு : புடிக்காதே காக்கா காக்கா
ஆண் : காக்கா காக்கா} (ஓவர்லாப்)

முத்து மணி மாலை

முத்து மணி மாலை
உன்னை தொட்டு தொட்டு தாலாட்ட
வெட்கத்திலே சேலை
கொஞ்சம் விட்டு சிட்டு போராட
உள்ளத்திலே நீ தானே
உத்தமி உன் பேர் தானே
ஒரு நந்தவன பூ தானே
புது சந்தனமும் நீ தானே
(முத்து..)

கொலுசு தான் மௌனமாகுமா
மனசு தான் பேசுமா
மேகம் தான் நிலவு மூடுமா
மவுசு தான் குறையுமா
நேசப்பட்டு வந்த பாச கோடிக்கு
காசி பட்டு சொந்தமாகாதே
வாக்குப்பட்டு வந்த வாசமலரே
வண்ணம் கலையாத ரோசாவே
தாழம் பூவில் வீசும் காத்திலா
பாசம் தேடி மாமா வா
(முத்து..)

காலிலே போட்ட மிஞ்சி தான்
காதுல பேசுதே
கழுத்துல போட்ட தாலிதான்
காவியம் பாசுதே
நெத்திச்சுட்டி ஆடும் உச்சந்தலையில்
பொட்டு வெச்சதாரு நாந்தானே
அத்தி மரப்பூவும் அச்சப்படுமா
பக்கத்துணையாரு நீதானே
ஆசை பேச்சுல பாதி மூச்சிலே
லேசா தேகம் சூடேர
(முத்து..)

ஒரு நாளும் உனை மறவாத இனிதான வரம் வேண்டும்

கங்கணகணவென கிண்கிணி ம்ணிகளும் ஒலிக்க ஒலிக்க
எங்கெங்கிலும் மங்களம் மங்களம் எனும் மொழி முழங்க முழங்க
ஒரு சுயம்வரம் நடக்கிறதே இது சுகம் தரும் சுயம்வரமே

ஆஆஆ ஆஆஆ.

ஒரு நாளும் உனை மறவாத இனிதான வரம் வேண்டும்
உறவாலும் உடல் உயிராலும் பிரியாத வரம் வேண்டும்
ஒரு நாளும் உனை மறவாத இனிதான வரம் வேண்டும்
உறவாலும் உடல் உயிராலும் பிரியாத வரம் வேண்டும்
விழியோடு இமை போலே விலகாத நிலை வேண்டும்
எனையாளும் எஜமானே எனையாளும் எஜமானே
எனையாளும் எஜமானே எனையாளும் எஜமானே

ஆஆஆ ஆஆஆஆஆ அஅஆஆஆ ஆஆஆஆஆ

ஒரு நாளும் உனை மறவாத இனிதான வரம் வேண்டும்
உறவாலும் உடல் உயிராலும் பிரியாத வரம் வேண்டும்

தனனனனனா தனனனனனா தனனனனனா தனனனன னானானானானா

சுட்டுவிரல் நீ பார்த்து சொன்னபடி ஆடுவேன்
உன்னடிமை நான் என்று கையெழுத்துப் போடுவேன்
உன்னுதிரம் போல் நானே பொன்னுடலில் ஓடுவேன்
உன்னுடலில் நான் ஓடி உள்ளழகைத் தேடுவேன்
போதை கொண்டு நின்றாடும் செங்கரும்பு தேகம்
முந்தி வரும் தேன் வாங்கிப் பந்தி வைக்கும் நேரம்
அம்புகள் பட்டு நரம்புகள் சுட்டு வம்புகள் என்ன வரம்புகள் விட்டு?

ஆஆஆ ஆஆஆஆஆ அஅஆஆஆ ஆஆஆஆஆ

ஒரு நாளும் உனை மறவாத இனிதான வரம் வேண்டும்
உறவாலும் உடல் உயிராலும் பிரியாத வரம் வேண்டும்
விழியோடு இமை போலே விலகாத நிலை வேண்டும்
இணையான இளமானே துணையான இளமானே
இணையான இளமானே துணையான இளமானே

ஆஆஆ ஆஆஆஆஆ அஅஆஆஆ ஆஆஆஆஆ

ஒரு நாளும் உனை மறவாத இனிதான வரம் வேண்டும்
உறவாலும் உடல் உயிராலும் பிரியாத வரம் வேண்டும்

கட்டில் இடும் சூட்டோடு தொட்டில் கட்டு அன்னமே
முல்லைக் கொடி தரும் அந்தப் பிள்ளைக்கனி வேண்டுமே
உன்னை ஒரு சேய் போலே என் மடியில் தாங்கவா?
என்னுடைய தாலாட்டில் கண்மயங்கித் தூங்கவா

ஆரீராரோ நீ பாட ஆசை உண்டு மானே
ஆறு ஏழு கேட்டாலும் பெற்றெடுப்பேன் நானே
முத்தினம் வரும் முத்துதினம் என்று
சித்திரம் வரும் விசித்திரம் என்று

ஆஆஆ ஆஆஆஆஆ அஅஆஆஆ ஆஆஆஆஆ

ஒரு நாளும் உனை மறவாத இனிதான வரம் வேண்டும்
உறவாலும் உடல் உயிராலும் பிரியாத வரம் வேண்டும்
விழியோடு இமை போலே விலகாத நிலை வேண்டும்
இணையான இளமானே துணையான இளமானே
எனையாளும் எஜமானே எனையாளும் எஜமானே

ஒரு காதல் தேவதை பூமியில் வந்தாள்

ஒரு காதல் தேவதை பூமியில் வந்தாள்
ஒரு காதல் காவியம் கையோடு தந்தாள்
கள்ளூறும் காலை வேளையில்

(ஒரு காதல்......காலை வேளையில்)
ஒரு காதல் தேவதை பூமியில் வந்தாள்

பூக்களின் கருவறையில் பிறந்தவள் நீயா
பூவுக்கொரு பூஜை செய்ய பிறந்தவன் நானில்லையா
இதயத்தின் தாமரையில் இருப்பவன் நீயா
தாமரைக்குள் வீடு கட்டி தந்தவள் நானில்லையா
ஓடோடி வந்ததால் உள் மூச்சு வாங்குது
உன் மூச்சில் அல்லவா என் மூச்சும் உள்ளது
ஒன்றானது!...

(ஒரு காதல்......காலை வேளையில்)
ஒரு காதல் தேவதை பூமியில் வந்தாள்

யாருக்கு யார் உறவு யார் அறிவாரோ
என் பெயரில் உன் பெயரை இயற்கையும் எழுதியதோ
பொன் மகள் மூச்சு விட்டால் பூ மலராதோ
பூ மகளின் வாய்மொழியே பூஜைக்கு வேதங்களோ
கல்லூரி வாழ்க்கையில் காதல் ஏன் வந்தது
ஆகாயம் எங்கிலும் நீலம் யார் தந்தது
இயல்பானது!...

(ஒரு காதல்......காலை வேளையில்)
லல லால லால லா லாலல லாலா
லல லால லால லா லாலல லாலா

சிங்களத்துச் சின்னக்குயிலே

ஆண் : ஜிங்களா ஜிங்களா ஜிங்களா ஜிங்களா
ஜிங்களா ஜிங்களா ஜிங்களா ஜிங்கா

பெண் : ஜிங்களா ஜிங்கா ஜீம்பூம்பா ஜிங்களா ஜிங்கா
கண்ணம் வழிக்கும் கில்லதே கள்ளுளி மங்கா

ஆண் : கூ சிங்களத்துச் சின்னக்குயிலே எனக்கு ஒரு மந்திரத்தச் சொல்லு மயிலே
அ சிங்களத்துச் சின்னக்குயிலே எனக்கு ஒரு மந்திரத்தச் சொல்லு மயிலே

ஜிங்களா ஜிங்கா ஜீம்பூம்பா ஜிங்களா ஜிங்கா
ஜிங்களா ஜிங்கா ஜீம்பூம்பா ஜிங்களா ஜிங்கா கூ

(இசை) சரணம் - 1

ஆண் : அன்பே நீயின்றி அலைகள் ஆடாது கண்கள் சாய்ந்தாலும் இமைகள் மூடாது
பூவே நீயின்றிப் பொழுதும் போகாது காதல் இல்லாமல் கவிதை வாராது

பெண் : ஆதரிக்க நல்ல இளைஞன் மனம் விட்டு காதலிக்க நல்ல கவிஞன்

ஆண் : காதலிக்க வந்த கலைஞன் இவன் என்றும் தாவணிக்கு நல்ல தலைவன்

பெண் : தடையேது தலைவா இடை மேலே உடை நீயே பூமஞ்சம் நீ போட வா எனக்கு ஏன

சிங்களத்துச் சின்னக்குயில் நான் உனக்கு ஒரு மந்திரத்தை சொல்லும் மயில் நான்
சிங்களத்துச் சின்னக்குயில் நான் உனக்கு ஒரு மந்திரத்தை சொல்லும் மயில் நான்

ஆண் : ஜிங்களா ஜிங்கா ஜீம்பூம்பா ஜிங்களா ஜிங்கா
ஜிங்களா ஜிங்கா ஜீம்பூம்பா ஜிங்களா ஜிங்கா கூ

(இசை) சரணம் - 2

பெண் : நிலவே நாந்தானா நிஜமா வின்கேலி உந்தன் மடிதானே நிலவின் நாற்காலி
ஒரு நாள் அமர்ந்தாலும் உலகில் நான் ராணி காமன் பூச்சூடும் கலையில் நீ ஞானி

ஆண் : ஆத்திரத்தில் தொட்டு வைக்கிறேன் இருக்கட்டும் ராத்திரிக்கு விட்டுவைக்கிறேன்

பெண் : விட்டுவிடு தத்தளிக்கிறேன் என்ன விட்டு எட்டி நில்லு எச்சரிக்கிறேன்

ஆண் : பிடிவாதம் தகுமா கொடி ஒன்று கனி ரெண்டு
வாங்காமல் தாங்காதம்மா இசை தரும்

ஆண் : கூ சிங்களத்துச் சின்னக்குயிலே எனக்கு ஒரு மந்திரத்தச் சொல்லு மயிலே
சிங்களத்துச் சின்னக்குயிலே எனக்கு ஒரு மந்திரத்தச் சொல்லு மயிலே

பெண் : ஜிங்களா ஜிங்கா ஜீம்பூம்பா ஜிங்களா ஜிங்கா
கண்ணம் வழிக்கும் கில்லதே கள்ளுளி மங்கா

ஆண் : கூ ஜிங்களா ஜிங்கா ஜீம்பூம்பா ஜிங்களா ஜிங்கா
ஜிங்களா ஜிங்கா ஜீம்பூம்பா ஜிங்களா ஜிங்கா கூ

பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து வெச்சேனே என் சின்னா ராசா

பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து வெச்சேனே என் சின்னா ராசா
பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து வெச்சேனே என் சின்னா ராசா
உன் தோளுக்காகத்தான் இந்த மாலை ஏங்குது
கல்யாணம் கச்சேரி எப்போது

பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து வெச்சேனே என் சின்னா ராசா
பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து வெச்சேனே என் சின்னா ராசா
உன் தோளுக்காகத்தான் இந்த மாலை ஏங்குது
கல்யாணம் கச்சேரி எப்போது

பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து வெச்சேனே என் சின்னா ராசா
பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து வெச்சேனே என் சின்னா ராசா

காத்துல சூடம் போல கரையுரேன் உன்னால

காத்துல சூடம் போல கரையுரேன் உன்னால

கண்ணாடி வல முன்னாடி விழ என் தேகம் மெலிஞ்சாச்சு
கல்யாண வரம் உன்னால பெறும் நன்னால நெனச்சாச்சு

சின்ன வயசுப்புள்ள கன்னி மனசுக்குள்ள வன்னக்கனவு வந்ததேன்
கல்யானம் கச்சேரி எப்போது
மனசுப்

பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து வெச்சேனே என் சின்னா ராசா
பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து வெச்சேனே என் சின்னா ராசா
உன் தோளுக்காகத்தான் இந்த மாலை ஏங்குது
கல்யாணம் கச்சேரி எப்போது

பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து வெச்சேனே என் சின்னா ராசா

வாடையா வீசும் காத்து வலைக்குதே எனப்பாத்து

வாங்களேன் நேரம் பாத்து வந்து எனக் காப்பாத்து

குத்தால மழ என் மேல விழ அப்போதும் சூடாச்சு
எப்போதும் என தப்பாம அண என் தேகம் ஏடாச்சு
மஞ்சக் குளிக்கையில நெஞ்சு எரியுதுங்க கொஞ்சம் அணச்சிக் கொள்ளய்யா
கல்யாணம் கச்சேரி எப்போது
மனசுப்

பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து வெச்சேனே என் சின்னா ராசா
பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து வெச்சேனே என் சின்னா ராசா
உன் தோளுக்காகத்தான் இந்த மாலை ஏங்குது
கல்யாணம் கச்சேரி எப்போது

பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து வெச்சேனே என் சின்னா ராசா

பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து வெச்சேனே என் சின்னா ராசா
பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து வெச்சேனே என் சின்னா ராசா

விழியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலந்த உறவே

விழியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலந்த உறவே
இரவும் பகலும் உரசிக் கொள்ளும் அந்திப் பொழுதினில் வந்துவிடு
அலைகள் உரசும் கரையில் இருப்பேன் உயிரைத் திருப்பித் தந்து விடு

(விழியில்)

உன் வெள்ளிக் கொலுசொலியை வீதியில் கேட்டால் அத்தனை ஜென்னலும் திறக்கும்
நீ சிரிக்கும்போது பௌளர்ணமி நிலவு அத்தனை திசையும் உதிக்கும்
நீ மல்லிகைப் பூவை சூடிக் கொண்டல் ரோஜாவுக்கு காய்ச்சல் வரும்
நீ பட்டுப் புடவை கட்டிக் கொண்டல் பட்டுப் பூச்சிகள் மோட்சம் பெறும்

(விழியில்)

கல்வி கற்க காலை செல்ல அண்ணன் ஆணையிட்டான்
காதல் மீன்கள் இரண்டில் ஒன்றைத் தரையில் தூக்கிப் போட்டான்

விழியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலந்த உறவே
இரவும் பகலும் உரசிக் கொள்ளும் அந்திப் பொழுதின் போது
அலையின் கரையில் காத்திருப்பேன் அழுத விழிகளோடு
எனக்கு மட்டும் சொந்தம் உனது இதழ் கொடுக்கும் முத்தம்
எனக்கு மட்டும் கேட்கும் எனது உயிர் கொதிக்கும் சத்தம்

ஏ துஷ்யந்தா ஏ துஷ்யந்தா

ஏ துஷ்யந்தா ஏ துஷ்யந்தா
உன் சகுந்தலா தேடி வந்தா
ஏ துஷ்யந்தா நீ மறந்ததை
உன் சகுந்தலா மீண்டும் தந்தா

கள்ள பெண்ணே
என் கண்ணை கேட்கும் கண்ணே
என் கற்பை திருடும் முன்னே
நான் தப்பை விட்டு தப்பி வந்தேன்
மீண்டும் நீ நேரில் வந்து நின்றாய்
என் நெஞ்சை கொத்தி தின்றாய்
எனக்கு உன்னை நினைவில்லையே

பூங்காவில் மழை வந்ததும்
புதர் ஒன்று குடை ஆனதும்
மழை வந்து நனைக்காமலே
மடி மட்டும் நனைந்தாய்
மறந்தது என்ன கதை

ஏ துஷ்யந்தா ஏ துஷ்யந்தா
உன் சகுந்தலா தேடி வந்தா

அழகான பூக்கள் பூக்கும்
தேன் ஆற்றங்கரையில்
அடையாளம் தெரியாத
ஆல மரத்திருட்டில்
இருள் கூட அறியாத
இன்பங்களின் முகத்தில்
இரு பேரும் கைதானோம்
முத்தங்களின் திருட்டில்
வருடித் தந்தாய் மனதை
திருடி கொண்டாய் வயதை
அது கிளையோடு வேர்களும்
பூத்த கதை ஆளாலன் காட்டுக்குள்
ஒரு ஓட்டு வீட்டுக்குள்ளே
உன்னை போர்த்திக் கொண்டு படுத்தேன்
பால் ஆற்றில் நீட் ஆடும்
போது துவட்ட துண்டு இல்லை
கூந்தல் கொண்டு உன்னை துடைத்தேன்

அந்த நீல நதிக்கரை ஓரம்
நீ நின்றுருந்தாய் அந்தி நேரம்
நான் பாடி வந்தேன் ஒரு ராகம்
நாம் பழகி வந்தோ சில நேரம்

ஏ துஷ்யந்தா ஏ துஷ்யந்தா
உன் சகுந்தலா தேடி வந்தா

மான் ஆடும் மலை
பக்கம் ஏரிக்கரை அருகில்
மயில் ஆடும் ஜன்னல்
கொண்ட மாளிகையில் அறையில்
கண்ணாடி பார்த்துக்கொண்டே
கலை யாவும் பயின்றோம்
கரு நீல போர்வைக்குள்ளே
இரு நாட்கள் இருந்தோம்
பகலில் எத்தனை கனவு
இரவில் எத்தனை நனவு
தூங்காத கண்ணுக்குள்ளே சுக நினைவு
சம்மதம் கேளாமல்
என்னை சாய்த்து சாய்த்து கொண்டு
சட்டென்று சட்டென்றூ முத்தம் தந்தாய்
மாந்தோப்பில் மாந்தோப்பில் என்னை
மடியில் போட்டுக்கொண்டு
புல் இல்லா தேகத்தில் கொஞ்சம் மேய்ந்தாய்

அந்த நீல நதிக்கரை ஓரம்
நீ நின்றுருந்தாய் அந்தி நேரம்
நான் பாடி வந்தேன் ஒரு ராகம்
நாம் பழகி வந்தோ சில நேரம்

பார்த்த ஞாபகம் இல்லையோ
பருவ நாடகம் தொல்லையோ
வாழ்ந்த காலங்கள் கொஞ்சமோ
மறந்ததே இந்த நெஞ்சமோ

ஏ துஷ்யந்தா..ஏ துஷ்யந்தா..
ஏ துஷ்யந்தா..ஏ துஷ்யந்தா..

ஆட்டுக்குட்டி முட்டையிட்டு கோழிக்குஞ்சு வந்ததுன்னு

ஆட்டுக்குட்டி முட்டையிட்டு கோழிக்குஞ்சு வந்ததுன்னு
யானைக்குஞ்சு சொல்லக்கேட்டு பூனைக்குஞ்சு சொன்னதுண்டு
கதையிலதானே இப்போ காணுது பூமி
இது மட்டும்தானா இன்னும் இருக்குது சாமி

கூத்து மேடை ராஜாவுக்கு நூற்றிரெண்டு பொண்டாட்டியாம்
நூற்றிரெண்டு பெண்டாட்டியும் வாத்து முட்டை போட்டதுவாம்
பட்டத்துராணி அதுல பதினெட்டு பேரு
பதினெட்டு பேர்க்கும் வயசு இருபத்து ஆறு
மொத்தம் இருபத்து ஆறு
சின்ன குட்டிகளின் மேல் ஆணை புது சட்டிகளின் மேல் ஆணை
இரு வள்ளுவன் பாட்டிலுண்டு
பரம்பரை கதையிலுண்டு கதையல்ல மகராசி
காக்கையில்லா சீமையிலே காட்டெறுமை மேய்க்கையிலே
பாட்டெடுத்து பாடிப்புட்டு நோட்டமிட்ட சின்னப் பொண்ணு
சந்தைக்கு போனா நானும் சாப்பிட்டு வர வா
சம்பந்தம் பண்ணா உனக்கு சம்மதம்தானா
காக்கையில்லா சீமையே ஏ...

காக்கையில்லா சீமையிலே காட்டெறுமை மேய்க்கையிலே
பாக்கு வச்சி நேரம் பாத்து வச்ச ஆசை மச்சான்
சந்தைக்கு போறேன் நீங்க சாப்பிட்டு வாங்க
சம்பந்தம் பண்ண எனக்கு சம்மதம் தாங்க
அட இந்த பக்கம் பாருங்களே
என் கன்னி மனம் கேளுங்களே
அட ஏண்டி என்ன மஞ்சளுக்கு கேக்குறீயா
பழைய நெனப்புதான் பேராண்டி பழைய நெனப்புதான்
கிட்டப்பாவின் பாட்டை கேட்டு சின்னப்பாவை நேரில் பார்த்தேன்
கொட்ட கொட்ட வருகுதம்மா சங்கீதமா பெருகுதம்மா
மேடைக்கு போனா எனக்கு வீட்டுல பொண்ணு
பாட்டுல நின்னா நானும் நூத்துல ஒன்னு
என் திறமையை காட்டட்டுமா
இரண்டு சங்கதியை போடட்டுமா

சின்னச் சின்ன தூறல் என்ன

சின்னச் சின்ன தூறல் என்ன
என்னைக் கொஞ்சும் சாரல் என்ன
சிந்தச் சிந்த ஆவல் பின்ன
நெஞ்சில் பொங்கும் பாடல் என்ன

சின்னச் சின்ன தூறல் என்ன
என்னைக் கொஞ்சும் சாரல் என்ன
சிந்தச் சிந்த ஆவல் பின்ன
நெஞ்சில் பொங்கும் பாடல் என்ன
சின்னச் சின்ன ..

(இசை) சரணம் - 1

உனது தூறலும் இனிய சாரலும்
தீண்டும் மேகம் சிலிர்க்குதம்மா

பெண் : ஹஹா..அது தீண்டும் மேகமில்ல
தேகம் சிலிர்க்குதம்மா..

உனது தூறலும் இனிய சாரலும்
தீண்டும் தேகம் சிலிர்க்குதம்மா
நனைந்த பொழுதிலும் குளிர்ந்த மனதினில்
ஏதோ ஆசை துடிக்குதம்மா
மனித ஜாதியின் பசியும் தாகமும்
உன்னால் என்றும் தீருமம்மா
வாரித் தந்த வள்ளல் என்று
பாரில் உன்னைச் சொல்வதுண்டு
இனமும் குலமும் இருக்கும் உலகில்
அனைவரும் இங்கு சரிசமம் என
உணர்த்திடும் மழையே..

சின்னச் சின்ன
சின்னச் சின்ன தூறல் என்ன
என்னைக் கொஞ்சும் சாரல் என்ன
சிந்தச் சிந்த ஆவல் பின்ன
நெஞ்சில் பொங்கும் பாடல் என்ன
சின்னச் சின்ன தூறல் என்ன

(இசை) சரணம் - 2

பிழைக்கு யாவரும் தவிக்கும் நாட்களில்
நீயோ இங்கே வருவதில்லை

பெண் : படிச்சவன் பாட்டை கெடுத்த கதையால்ல இருக்கு
பிழைக்கும்ன்னு எழுதலையே
மழைக்குன்னுதானே எழுதியிருக்கேன்

ஓஹோ..மழைக்கு யாவரும் தவிக்கும் நாட்களில்
நீயோ இங்கே வருவதில்லை
வெடித்த பூமியும் மானம் பார்க்கையில்
நீயோ கண்ணில் தெரிவதில்லை
உனது சேதியை பொழியும் தேதியை
முன்னால் இங்கே யாரறிவார்
நஞ்சை மண்ணும் புஞ்சை மண்ணும்
நீயும் வந்தால் பொன்னாய் மின்னும்
உனது பெருமை உலகம் அறியும் இடியென்னும்
இசை முழங்கிட வரும் மழையெனும் மகளே

சின்னச் சின்ன
சின்னச் சின்ன தூறல் என்ன
என்னைக் கொஞ்சும் சாரல் என்ன
சிந்தச் சிந்த ஆவல் பின்ன
நெஞ்சில் பொங்கும் பாடல் என்ன

சின்னச் சின்ன தூறல் என்ன
என்னைக் கொஞ்சும் சாரல் என்ன
சிந்தச் சிந்த ஆவல் பின்ன
நெஞ்சில் பொங்கும் பாடல் என்ன
சின்னச் சின்ன

அடி ஆத்தாடி

பெண் : அடி ஆத்தாடி...

இசை பல்லவி

பெண் : அடி ஆத்தாடி...
{இள மனசொண்ணு ரெக்கக்கட்டி பறக்குது சரிதானா}
ஆண் &
பெண்குழு :{இள மனசொண்ணு ரெக்கக்கட்டி பறக்குது சரிதானா} {ஓவர் லாப்}

பெண் : அடி அம்மாடி...
{ஒரு அல வந்து மனசுல அடிக்குது அதுதானா}
ஆண் &
பெண்குழு :{ஒரு அல வந்து மனசுல அடிக்குது அதுதானா} {ஓவர் லாப்}

ஆண் : உயிரோடு
பெண் : உறவாடும்
ஆண் : ஒரு கோடி ஆனந்தம்
பெண் : இவன் மேகம் ஆக யாரோ காரணம்
ஆண் : ஆ...ஆ...ஆ...

ஆண் : அடி ஆத்தாடி...
இள மனசொண்ணு ரெக்கக்கட்டி பறக்குது சரிதானா
ஆண் &
பெண்குழு :{இள மனசொண்ணு ரெக்கக்கட்டி பறக்குது சரிதானா} {ஓவர் லாப்}

ஆண் : அடி அம்மாடி...

இசை சரணம் - 1

பெண் : மேலே போகும் மேகம் எல்லாம்
கட்டுப் பட்டு ஆடாதோ
உன்னப் பாத்து அலைகள் எல்லாம்
மெட்டுக் கட்டி பாடாதோ
ஆண் : இப்படி நான் ஆனதில்ல புத்தி மாறி போனதில்ல
முன்னப் பின்ன நேர்ந்ததில்ல மூக்கு நுனி வேர்த்ததில்ல
பெண் : கன்னிப் பொண்ணு கண்ணுக்குள்ள
கத்திச் சண்ட கண்டாயோ
படபடக்கும் நெஞ்சுக்குள்ள படாம்பூச்சி பார்த்தாயோ
எச கேட்டாயோ...ஓ...ஓ...ஓ... (இசை)


பெண் : லல லல {லா... லலலல லலலல லா...
லல லல லா லல லல லா
லல லல லா லல லல லல லல லல லல ல}
ஆண் &
பெண்குழு :{லா... லாலல லல லா...
லா... லல லல லா
லா லல லல லல லல லல லல ல} {ஓவர் லாப்}

இசை சரணம் - 2

ஆண் : தாகப்பட்ட நெஞ்சுகுள்ளே ஏகப்பட்ட சந்தோசம்
உண்மை சொல்லு பொண்ணே என்ன
என்ன செய்ய உத்தேசம்
பெண் : வார்த்த ஒண்ணு வாய் வரைக்கும்
வந்து வந்து போவதென்ன
கட்டு மரம் பூ பூக்க ஆசப் பட்டு ஆவதென்ன
ஆண் : கட்டுத்தறி காள நானே கண்ணுக்குட்டி ஆனேனே
தொட்டு தொட்டு தென்றல் பேச
தூக்கம் கெட்டு போனேனே
சொல் பொன் மானே...ஏ...ஏ...ஏ...

பெண் : அடி ஆத்தாடி...
{இள மனசொண்ணு ரெக்கக்கட்டி பறக்குது சரிதானா}
ஆண் &
பெண்குழு :{இள மனசொண்ணு ரெக்கக்கட்டி பறக்குது சரிதானா} {ஓவர் லாப்}

பெண் : அடி அம்மாடி...
{ஒரு அல வந்து மனசுல அடிக்குது அதுதானா}
ஆண் &
பெண்குழு :{ஒரு அல வந்து மனசுல அடிக்குது அதுதானா} {ஓவர் லாப்}

ஆண் : உயிரோடு
பெண் : உறவாடும்
ஆண் : ஒரு கோடி ஆனந்தம்
பெண் : இவன் மேகம் ஆக யாரோ காரணம்
ஆண் : ஆ...ஆ...ஆ...

ஆண் : அடி ஆத்தாடி...
இள மனசொண்ணு ரெக்கக்கட்டி பறக்குது சரிதானா
ஆண் &
பெண்குழு :{இள மனசொண்ணு ரெக்கக்கட்டி பறக்குது சரிதானா} {ஓவர் லாப்}

ஆண் : அடி ஆத்தாடி...

கடவுள் உள்ளமே ஒரு கருணை இல்லமே

பெ: கடவுள் உள்ளமே ஒரு கருணை இல்லமே
அடைக்கலம் கொடுத்தவன் அருளை பாடவோ
தந்தை இல்லை தாயும் இல்லை தெய்வமன்றி யாரும் இல்லை

குழு: தந்தை இல்லை தாயும் இல்லை
தெய்வமன்றி யாரும் இல்லை
(கடவுள்

பெ: சின்ன சின்ன பூக்கள் சிந்திய வேளை
அன்பு என்னும் நூலில் ஆக்கிய மாலை
பாதம் செல்லும் பாதை காட்டிடும் தலைவா என் தலைவா

குழு: ஊனம் உள்ள பேரை காத்திடும்
இறைவா என் இறைவா

பெ: ஜீவன் யாரும் ஒன்று
இங்கு யாரும் சொந்தமே

குழு: ஜீவன் யாரும் ஒன்று
இங்கு யாரும் சொந்தமே

பெ: இது தான் இயற்கை
தந்த பாசபந்தமே

(கடவுள்

பெ: கண்ணிழந்த பிள்ளை
ஆனால் உன்னை
கண்ணீருக்கும் பேர்கள்
கண்டது இல்லை
ஊருக்கொரு வானம் இல்லையே
இறைவா உன் படைப்பில்

குழு: ஆளுக்கொரு ஜாதியில்லையே
அது போல் உயிர் பிறப்பில்

பெ: உண்ணும் உணவும் நீரும்
தினம் தந்த தெய்வமே

குழு: உண்ணும் உணவும் நீரும்
தினம் தந்த தெய்வமே

பெ: என்றும் உனக்கே நாம் நன்றி சொல்லுவோம்

ஒரு பெண்ணைப் பார்த்து நிலவைப் பார்த்தேன்

ஒரு பெண்ணைப் பார்த்து நிலவைப் பார்த்தேன்
நிலவில் குளிரில்லை

அவள் கண்ணைப் பார்த்து மலரைப் பார்த்தேன்

மலரில் ஒளியில்லை (2)
அவளில்லாமல் நானில்லை
நானில்லாமல் அவளில்லை(2)

ல ல லல்ல லா ல ல லல்ல ல ல ல லல்ல ல ல ல ல

கொடி மின்னல் போல் ஒரு பார்வை
மானோ மீனோ என்றிருந்தேன்
குயிலோசை போல் ஒரு வார்த்தை
குழலோ யாழோ என்றிருந்தேன்
நெஞ்சொடு நெஞ்சை சேர்த்தாள்
தீயொடு பஞ்சை சேர்த்தாள்(2)
இன்று காதல் ஏக்கம் தந்தாள் சென்றாள்
நாளை என் செய்வாளோ
.
………..ஒரு பெண்ணைப் ………….

கலை அன்னம் போலவள் தோற்றம்
இடையோ இடையில் கிடையாது
சிலை வண்ணம் போலவள் தேகம்
இதழில் மதுவோ குறையாது
என்னோடு தன்னை சேர்த்தாள்…
தன்னோடு என்னை சேர்த்தாள் (2)
இன்று காதல் ஏக்கம் தந்தாள் சென்றாள்
நாளை என் செய்வாளோ

நெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு

நெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு
சொன்னால் புரியுமா
அது கொஞ்சி கொஞ்சி
பேசுறது கண்ணில் தெரியுமா
உலகே அழிஞ்சாலும்
உன் உருவம் அழியாதே
உயிரே பிரிஞ்சாலும்
உறவேதும் பிரியாதே
உண்ணாமல் உறங்காமல்
உன்னால் தவிக்கும் பொன்னுமணி

ஏக்கப் பட்டு பட்டு நானிளைத்தேனே
அககா கா கா கக கா கா
ஏட்டுக்கல்வி கேட்டு நான் சலித்தேனே
ஒகோ கோ ஓகோ கோ கோ
தூக்கம் கெட்டு கெட்டு
துடிக்கும் முல்லை மொட்டு
தேக்கு மரத் தேகம் தொட்டு
தேடி வந்து தாளம் தட்டு
என் தாளம் மாறதய்யா
உண்ணாமல் உறங்காமல்
உன்னால் தவிக்கும் சிந்தாமணி

நெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு
சொன்னால் புரியுமா
அது கொஞ்சி கொஞ்சி பேசுறது
கண்ணில் தெரியுமா
உலகே அழிஞ்சாலும்
உன் உருவம் அழியாதே
உயிரே பிரிஞ்சாலும்
உறவேதும் பிரியாதே
உண்ணாமல் உறங்காமல்
உன்னால் தவிக்கும் சிந்தாமணி

நெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு
சொன்னால் புரியுமா
அது கொஞ்சி கொஞ்சி பேசுறது
கண்ணில் தெரியுமா

காஞ்சிபட்டு ஒண்ணு நான் கொடுப்பேனே
ஒகோ கோ ஓகோ கோ கோ கொய் கொய்
காலமெல்லாம் உன்னை நான் சுமப்பேனே
அககா கா கா கக கா கா
மாமன் உன்னைக் கண்டு ஏங்கும் அல்லி தண்டு
தோளில் என்னை அள்ளிக்கொண்டு
தூங்க வைப்பாய் அன்பே என்று
என் கண்ணில் நீ தானம்மா
உண்ணாமல் உறங்காமல்
உன்னால் தவிக்கும் பொன்னுமணி

நெஞ்சுக்குள்ளே இன்னாருனு
சொன்னால் புரியுமா
அது கொஞ்சி கொஞ்சி பேசுறது
கண்ணில் தெரியுமா
உலகே அழிஞ்சாலும்
உன் உருவம் அழியாதே
உயிரே பிரிஞ்சாலும்
உறவேதும் பிரியாதே
உண்ணாமல் உறங்காமல்
உன்னால் தவிக்கும் சிந்தாமணி

நியூயார்க் நகரம் உறங்கும் நேரம்

பல்லவி :-

ம்ம்ம் .ம் ...ம்ம்ம்ம் ..ம்ம்ம்ம்

நியூயார்க் நகரம் உறங்கும் நேரம்
தனிமை அடர்ந்தது பனியும் படர்ந்தது
கப்பல் இறங்கியே காற்றும் கரையில் நடந்தது
நான்கு கண்ணாடி சுவர்களுக்குள்ளே
நானும் மெழுகுவர்த்தியும்
தனிமை தனிமையோ கொடுமை கொடுமையோ

ம்ம் ...ம்..ம்ம்ம் .....ம்ம்ம்ம்

நியூயார்க் நகரம் உறங்கும் நேரம்
தனிமை அடர்ந்தது பனியும் படர்ந்தது..
கப்பல் இறங்கியே காற்றும் கரையில் நடந்தது
நான்கு கண்ணாடி சுவர்களுக்குள்ளே
நானும் மெழுகுவர்த்தியும்
தனிமை தனிமையோ
தனிமை தனிமையோ..கொடுமை கொடுமையோ

ஓஒ .ஒ ..ஒ ஒ ..ஓஹோ ..ஒ



சரணம் 1

பேச்செல்லாம் தாலாட்டு போல
என்னை உறங்க வைக்க நீ இல்லை
தினமும் ஒரு முத்தம் தந்து
காலை காபி கொடுக்க நீ இல்லை
விழியில் விழும் தூசி தன்னை
எடுக்க நீ இங்கு இல்லை
மனதில் எழும் குழப்பம் தன்னை
தீர்க்க நீ இங்கு இல்லை
நான் இங்கே நீயும் அங்கே
இந்த தனிமை நிமிஷங்கள் வருஷம்
ஆனதேனோ
வான் இங்கே நீளம் அங்கே
இந்த உவமைக்கு இருவரும் விளக்கம்
ஆனதேனோ

ஒ .ஒ .ஒ .ஓஹோ ..ஒ ..ஒ ஒ ..ஓஹோ ..ஒ

நியூயார்க் நகரம் உறங்கும் நேரம்
தனிமை அடர்ந்தது பனியும் படர்ந்தது..

ஒ .ஒ .ஒ .ஒ ...ஒ .ஒ .ஒ . ஒ ...

சரணம் 2


நாட்குறிப்பில் நூறு தடவை
உந்தன் பெயரை எழதும் என் பேனா
எழுதியதும் எறும்பு மொய்க்க
பெயரின் ஓரமென்ன தேனா .
ஒ .ஒ .ஒ .ஒ ...ஜில்லென்று பூமி இருந்தும்
இந்த தருணத்தில் குளிர்காலம்
கோடை ஆனதேனோ
ஒ .ஒ.ஒ .ஒ ...
நான் அங்கே நீயும் வந்தால்
செந்தணல் கூட பனிக்கட்டி
போல மாறுமே ..ஒ..ஒ ..

நியூயார்க் நகரம் உறங்கும் நேரம்
தனிமை அடர்ந்தது பனியும் படர்ந்தது
கப்பல் இறங்கியே காற்றும் கரையில் நடந்தது
நான்கு கண்ணாடி சுவர்களுக்குள்ளே
நானும் மெழுகுவர்த்தியும்
தனிமை தனிமையோ
தனிமை தனிமையோ..கொடுமை கொடுமையோ

சொல்லாமல் தொட்டு செல்லும் தென்றல்

பல்லவி :-

சொல்லாமல் தொட்டு செல்லும் தென்றல்
என் காதல் தேவதையின் கண்கள்
நெஞ்சத்தில் கொட்டிச் செல்லும் மின்னல்
கண்ணோரம் மின்னும் அவள் காதல்
ஒரு நாளைக்குள்ளே மெல்ல மெல்ல
உன் மௌனம் என்னைக் கொல்ல கொல்ல
இந்தக் காதலினால் காற்றில் பறக்கும் காகிதம் ஆனேன்

சொல்லாமல் தொட்டு...

சரணம் 1

ஓ காதலின் அவஸ்தை
எதிரிக்கும் வேண்டாம்
நரக சுகம் அல்லவா
நெருப்பை விழுங்கி விட்டேன்
ஓ அமிலம் அருந்திவிட்டேன்
நோயாய் நெஞ்சில் நீ நுழைந்தாய்
மருந்தை ஏனடி தர மறந்தாய்
வாலிபத்தின் சோலையிலே ரகசியமாய்
பூ பறித்தவள் நீதானே


சொல்லாமல் தொட்டு...

சரணம் 2

ஏ பெண்களின் உள்ளம் படு குழி என்பேன்
விழுந்து எழுந்தவன் யார் ?
ஆழம் அளந்தவன் யார்?ஓ
கரையைக் கடந்தவன் யார்?
காதல் இருக்கும் பயத்தினில் தான்
கடவுள் பூமிக்கு வருவதில்லை
மீறி அவன் பூமி வந்தால்
தாடியுடன் தான் அலைவான் வீதியிலே

சொல்லாமல் தொட்டு..

விழிகளில் ஒரு வானவில்

விழிகளில் ஒரு வானவில்
இமைகளைத் தொட்டுப் பேசுதே
இது என்ன புது வானிலை
மழை வெயில் தரும்
உன்னிடம் பார்க்கிறேன்
நான் பார்க்கிறேன்
என் தாய் முகம் அன்பே
உன்னிடம் தோற்கிறேன்

நான் தோற்கிறேன்
என்னாகுமோ இங்கே
முதன் முதலாய் மழங்குகிறேன்
கண்ணாடிப் போலத் தோன்றினாய்
என் முன்பு என்னைக் காட்டினாய்
கனா எங்கும் வினா

விழிகளில் ஒரு வானவில் ....

நீ வந்தாய் என் வாழ்விலே
பூ பூத்தாய் என் வேரிலே
மாலையே நீ போகலாம்
என் ஞாபகம் நீ ஆகலாம்
தேர் சென்றப் பின்னாலே
வீதி என்னாகுமோ
யார் இவன் ..யார் இவன்
ஓர் மாயவன்
மெய்யானவன் அன்பில்
யார் இவன் ..யார் இவன்
நான் நேசிக்கும் கண்ணீர்
இவன் நெஞ்சில்
இனம் புரியா உறவிதுவோ ..
என் தேதிப் பூத்த பூவிது
என் நெஞ்சில் வாசம் தூவுது
மனம் எங்கும் மனம்

விழிகளில் ....

நான் unakkaagap பேசினேன்
நீ எனக்காகப் பேசுவாய்
மௌனமாய் நான் பேசினேன்
கைகளில் மை பூசினேன்
நீ வந்தக் கனவேங்கே
காற்றில் கை வீசினேன்
அன்பென்னும் தூண்டிலை நீ வீசினால்
மீன் ஆகிறேன் அன்பே
உன் முன் தான் அட இப்போது நான்
பெண் ஆகிறேன் இங்கே
தயக்கங்களால் திணறுகிறேன்
நில்லென்று சொன்ன போதிலும்
நில்லாமல் நெஞ்சம் ஓடுதே
இதோ உந்தன் வழி

சுந்தரி கண்ணால் ஒரு சேதி

ஆண் : சுந்தரி கண்ணால் ஒரு சேதி சொல்லடி இந்நாள் நல்ல தேதி

பெண் : என்னையே தந்தேன் உனக்காக ஜென்மமே கொண்டேன் அதற்காக

ஆண் : நான் உனை நீங்க மாட்டேன் நீங்கினால் தூங்க மாட்டேன்
சேர்ந்ததே நம் ஜீவனே

ஆண் : சுந்தரி கண்ணால் ஒரு சேதி சொல்லடி இந்நாள் நல்ல தேதி

பெண் : என்னையே தந்தேன் உனக்காக ஜென்மமே கொண்டேன் அதற்காக

(இசை) சரணம் - 1

ஆண்குழு : ஓ...ஓ...ஓ...ஓ... ஓ...ஓ...ஓ...ஓ...

{பெண்குழு : ஒவர்லாப் ஆ...ஆ...ஆ...ஆ....
ஓ...ஓ...ஓ...ஓ... ஓ...ஓ...ஓ...ஓ...
ஆ...ஆ...ஆ...ஆ...ஆ...ஆ...ஆ...ஆ...ஆ...ஆ...
ஓ...ஓ...ஓ...ஓ... ஓ...ஓ...ஓ...ஓ...
ஆ...ஆ...ஆ...ஆ...ஆ...ஆ...ஆ...ஆ... ஆ...ஆ...}

பெண் : வாய் மொழிந்த வார்த்தை யாவும் காற்றில் போனால் நியாயமா
பாய் விரித்து பாவை பார்த்த காதல் இன்பம் மாயமா

ஆண் : ஆ...ஆ...வாள் பிடித்து நின்றால் கூட நெஞ்சில் உந்தன் ஊர்வலம்
போர்க்களத்தில் சாய்ந்தால் கூட ஜீவன் உன்னை சேர்ந்திடும்

பெண் : தேனிலவு நான் வாட ஏனிந்த சோதனை

ஆண் : வானிலவை நீ கேளு கூறும் என் வேதனை

பெண் : எனைத்தான் அன்பே மறந்தாயோ

ஆண் : மறப்பேன் என்றே நினைத்தாயோ

பெண் : என்னையே தந்தேன் உனக்காக ஜென்மமே கொண்டேன் அதற்காக

ஆண் : சுந்தரி கண்ணால் ஒரு சேதி சொல்லடி இந்நாள் நல்ல தேதி

ஆண் : நான் உனை நீங்க மாட்டேன் நீங்கினால் தூங்க மாட்டேன்
சேர்ந்ததே நம் ஜீவனே

பெண் : என்னையே தந்தேன் உனக்காக ஜென்மமே கொண்டேன் அதற்காக

(இசை) சரணம் - 2

ஆண்குழு : ஆ...ஆ...ஆ...ஆ...

{பெண்குழு: ஒவர்லாப் ஓ...ஓ...
ஆ...ஆ...ஆ...ஆ..
ஓ...ஓ... ஓ...ஓ...ஓ...ஓ...}

பெண் : சோலையிலும் முட்கள் தோன்றும் நானும் நீயும் நீங்கினால்
பாலையிலும் பூக்கள் பூக்கும் நான் உன் மார்பில் தூங்கினால்

ஆண் : ஆ...ஆ...மாதங்களும் வாரம் ஆகும் நானும் நீயும் கூடினால்
வாரங்களும் மாதமாகும் பாதை மாறி ஓடினால்

பெண் : கோடி சுகம் வாராதோ நீ எனை தீண்டினால்

ஆண் : காயங்களும் ஆறாதோ நீ எதிர் தோன்றினால்

பெண் : உடனே வந்தால் உயிர் வாழும்

ஆண் : வருவேன் அந்நாள் வரக் கூடும்

ஆண் : சுந்தரி கண்ணால் ஒரு சேதி சொல்லடி இந்நாள் நல்ல தேதி

பெண் : என்னையே தந்தேன் உனக்காக ஜென்மமே கொண்டேன் அதற்காக

ஆண் : நான் உனை நீங்க மாட்டேன் நீங்கினால் தூங்க மாட்டேன்
சேர்ந்ததே நம் ஜீவனே

ஆண் : சுந்தரி கண்ணால் ஒரு சேதி சொல்லடி இந்நாள் நல்ல தேதி

பெண் : என்னையே தந்தேன் உனக்காக ஜென்மமே கொண்டேன் அதற்காக

ரகசியமானது காதல்

பாடல் : ரகசியமானது காதல்
இசை : சிற்பி
பாடலாசிரியர்: விஜய் சாகர்
பாடியவர்கள் : ஹரணி, ஹரிஷ் ராகவேந்திரா
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

ரகசியமானது காதல்
மிக மிக ரகசியமானது காதல்
ரகசியமானது காதல்
மிக மிக ரகசியமானது காதல்
முகவரி சொல்லாமல் முகம் தன்னை மறைக்கும்
ஒருதலையாகவும் சுகம் அனுபவிக்கும்
ஸ்வரசியமானது காதல்
மிக மிக ஸ்வரசியமானது காதல்

சொல்லாமல் செய்யும் காதல் கனமானது
சொல்லச் சொன்னாலும் சொல்வதுமில்லை மரபானது
சொல்லும் சொல்லை தேடி தேடி யுகம் போனது
இந்த சோகம் தானே காதலிலே சுகமானது
வாசனை,வெளிச்சத்தை போல
அது சுதந்தரமானது அல்ல
ஈரத்தை இருட்டினை போல
அது ஒளிந்திடும் வெளி வரும் மெல்ல

ரகசியமானது காதல்
மிக மிக ரகசியமானது காதல்
முகவரி சொல்லாமல் முகம் தன்னை மறைக்கும்
ஒருதலையாகவும் சுகம் அனுபவிக்கும்
ஸ்வரசியமானது காதல்
மிக மிக ஸ்வரசியமானது காதல்

கேட்காமல் காட்டும் அன்பு உயர்வானது
கேட்டுக் கொடுத்தாலே காதல் அங்கு உயிரானது
கேட்கும் கேள்விக்காகதானே பதில் வாழுது
காதல் கேட்டு வாங்கும் பொருளும் அல்ல இயல்பானது
நீரினை நெருப்பினைப் போல
விரல் தோடுதலில் புரிவதும் அல்ல
காதலும் கடவுளை போல
அதை உயிரினில் உணரனும் மெல்ல

ரகசியமானது காதல்
மிக மிக ரகசியமானது காதல்
ரகசியமானது காதல்
மிக மிக ரகசியமானது காதல்
முகவரி சொல்லாமல் முகம் தன்னை மறைக்கும்
ஒருதலையாகவும் சுகம் அனுபவிக்கும்
ஸ்வரசியமானது காதல்
மிக மிக ஸ்வரசியமானது காதல்

பிறை தேடும் இரவிலே உயிரே

பாடல் : பிறை தேடும் இரவிலே உயிரே

படம்: மயக்கம் என்ன‌

இசை: ஜி.வி.பிரகாஷ்

பாடியவர்கள்: ஜி.வி.பிரகாஷ், சைந்தவி


பிறை தேடும் இரவிலே உயிரே
எதை தேடி அலைகிறாய்
கதை சொல்ல அழைக்கிறேன் உயிரே
அன்பே நீ வா
பிறை தேடும் இரவிலே உயிரே
எதை தேடி அலைகிறாய்
கதை சொல்ல அழைக்கிறேன் உயிரே
அன்பே நீ வா
இருளில் கண்ணீரும் எதற்கு..
மடியில் கண்மூட வா..
அழகே இந்த சோகம் எதற்கு..
நான் உன் தாயும் அல்லவா..
"உனக்கென என மட்டும் வாழும் இதயமடி
உயிர் உள்ள வரை நான் உன் அடிமையடி"
பிறை தேடும் இரவிலே உயிரே
எதை தேடி அலைகிறாய்
கதை சொல்ல அழைக்கிறேன் உயிரே
அன்பே நீ வா
====
அழுதால் உன் பார்வையும்
அயந்தால் உன் கால்களும்
அதிகாலையில் கூடலில் சோகம் தீர்க்கும் போதுமா
நிழல் தேடிடும் ஆண்மையும்
நிஜம் தேடிடும் பெண்மையும்
ஒரு போர்வையில் வாழும் இன்பம்
தெய்வம் தந்த சொந்தமா
"என் ஆயுள் ரேகை நீயடி
என் ஆணி வேரடி
சுமை தாங்கும் எந்தன் கண்மணி
எனை சுடும் பனி..
உனக்கென என மட்டும் வாழும் இதயமடி
உயிர் உள்ள வரை நான் உன் அடிமையடி"

பிறை தேடும் இரவிலே உயிரே
என்னை தேடி அலைகிறாய்
கதை சொல்ல அழைக்கிறேன் உயிரே
அன்பே நீ வா..


விழியின் அந்த தேடலும்
அலையும் உந்தன் நெஞ்சமும்
புரிந்தாலே போதுமே
ஏழு ஜென்மம் தாங்குவேன்
அனல் மேலே வாழ்கிறாய்
நதி போலே பாய்கிறாய்
ஒரு காரணம் இல்லையே
மீசை வைத்த பிள்ளையே
"இதை காதல் என்று சொல்வதா?
நிழல் காய்ந்து கொள்வதா
தினம் கொள்ளும் இந்த பூமியில்,
நீ வரும் வரும் இடம்..."

நண்பனே எனது உயிர் நண்பனே

இந்த பாடல் எனது நட்புகளுக்காக
படம் : சட்டம் ( Sattam )
பாடல் : நண்பனே எனது உயிர் நண்பனே..... ( Nanbane Enathuyir Nanbane )
பாடியவர் : திரு.S.P.பாலசுப்ரமணியம் , மலேசியா வாசுதேவன்
இசை : கங்கை அமரன்
வருடம் : 21 May 1983

நண்பனே எனது உயிர் நண்பனே
நீண்ட நாள் உறவிது
இன்று போல் என்றுமே தொடர்வது

நண்பனே எனது உயிர் நண்பனே
நீண்ட நாள் உறவிது
இன்று போல் என்றுமே தொடர்வது

ஒரு கிளையில் ஊஞ்சாலடும்
இரு மலர்கள் நீயும் நாணும்
பிரியாமல் நாம் உறவாடலாம்

ஒரு விழியில் காயம் என்றால்
மறு விழியும் கண்ணீர் சிந்தும்
உனக்காக நான் எனக்காக நீ

இரண்டு கைகள் இணைந்து வழங்கும்
இனிய ஒசை
இன்றும் என்றும் கேட்க வேண்டும்
எனது ஆசை ஹேய்.. ஹேய்..

நண்பனே எனது உயிர் நண்பனே
நீண்ட நாள் உறவிது
இன்று போல் என்றுமே தொடர்வது
நண்பனே எனது உயிர் நண்பனே

யாரும் உன்னை சொந்தம் கொண்டால்
இடையில் வந்த உரிமை என்றாய்
அதற்காக நான் வழக்காடுவேன்

யாரும் உன்னை திருடி செல்ல
பார்த்திருக்கும் தோழன் அல்ல
உனக்காக நான் காவல் நிற்பேன்

எனது மனமும் எனது னினைவும்
உனது வாசமே

நமக்கு யேது பிரித்து பார்க்க
இரண்டு மனமே ஹேய்.. ஹேய்..

நண்பனே எனது உயிர் நண்பனே
நீண்ட நாள் உறவிது
இன்று போல் என்றுமே தொடர்வது

நான் சொன்னதும் மழை வந்துச்சா

படம்: மயக்கமென்ன
இசை: ஜி.வி.பிரகாஷ்
பாடலசிரியர்: செல்வராகவன்
பாடியவர்கள்: நரேஷ் ஐயர்
====
நான் சொன்னதும் மழை வந்துச்சா
நான் சொல்லல வெயில் வந்துச்சா
அடி ரெண்டுமே இதம் தந்துச்சா
முத்து முத்து பேச்சி

என் கண்ணுல பொய் இருக்கா
உன் கண்ணோட மைக்கிறுக்கா
அடி கள்ளியே அறிவிருக்கா
என் மூச்சி நின்னு போச்சு

காத்தோடு காத்தாக உள்ள வந்தியா
காட்டோட காடாக கட்டிபோட்டியா
ஊத்தாத ஊத்தேல்லாம் உள்ள ஊத்துது
என் பேச்சல்லாம் நின்னு போய் மூல சுத்துது

நான் சொன்னதும் மழை வந்துச்சா
நான் சொல்லல வெயில் வந்துச்சா
அடி ரெண்டுமே இதம் தந்துச்சா
முத்து முத்து பேச்சி
====
கருவாட்டு கொழம்பா நீயும் ருசி ஏத்துற
ஒரு வாட்டி தின்னு பாக்க உசுபெத்துற
அடி போடி போடி போடி போட்ட மயிலே
ஓலை ஏதும் வந்துச்சா
உன்ன துக்கி போக தான் வருவேன்னு
கிளி வந்து பதில் சொல்லுச்சா

கரு நாக்கு கார புள்ள
கருப்பட்டி நெறத்து முல்ல
எடுவட்ட நெனப்பு தொல்ல
நீ களவாணி

ஓ கருவாட்டு கொழம்பா நீயும் ருசி ஏத்துற
ஒரு வாட்டி தின்னு பாக்க உசுபெத்துற
====
நான் சொன்னதும் மழை வந்துச்சா
நான் சொல்லல வெயில் வந்துச்சா
அடி ரெண்டுமே இதம் தந்துச்சா
முத்து முத்து பேச்சி
====
ஆடு .. ஆடு ..

ஆத்தாடி ஆடு மேய்க ராசா வந்தாரா
எங்க -ஆடு தின்ன எச்சி புல்ல மேய்ய வந்தாரா

அடி போடி போடி போடி முட்ட கன்னி
கட்டம் கட்டி பாஞ்சேன்
அட கண்ணா முடி கொஞ்ச சாஞ்ச போதும்
கனுவுல தீ மிதிச்சேன்
கண்ணாடி வளையல் தாரேன்
காதுக்கு ஜிமிக்கி தாரேன்
கழுத்துக்கு தாலி தாரேன்

நீ வரையாடி

கருவாட்டு கொழம்பா நீயும் ருசி ஏத்துற
====
நான் சொன்னதும் மழை வந்துச்சா
நான் சொல்லல வெயில் வந்துச்சா
அடி ரெண்டுமே இதம் தந்துச்சா
முத்து முத்து பேச்சி

என் கண்ணுல பொய் இருக்கா
உன் கண்ணோட மைக்கிறுக்கா
அடி கள்ளியே அறிவிருக்கா
என் மூச்சி நின்னு போச்சு

காத்தோடு காத்தாக உள்ள வந்தியா
காட்டோட காடாக கட்டிபோட்டியா
ஊத்தாத ஊத்தேல்லாம் உள்ள ஊத்துது
என் பேச்சல்லாம் நின்னு போய் மூல சுத்துது

Thursday, January 26, 2012

இதழில் கதை எழுதும் நேரமிது

படம் : உன்னால் முடியும் தம்பி (1988)
பாடிவர்கள் : பாலசுப்ரமண்யம் SP, ஜானகி S
இசை : இளையராஜா


இதழில் கதை எழுதும் நேரமிது
இன்பங்கள் அழைக்குது ஆஆ
மனதில் சுகம் மலரும் மாலையிது
மான்விழி மயங்குது ஆஆ

இளமை அழகை அள்ளி அணைப்பதற்கே (2)
இருகரம் துடிக்குது தனிமையும் நெருங்கிட இனிமையும் பிறக்குது
(இதழில் )

காதல் கிளிகள் ரெண்டு ஜாடை பேசக்கண்டு
ஏதேதோ எண்ணம் என் நெஞ்சில் உதிக்கும்
நானும் நீயும் சேர்ந்து ராகம் பாடும்போது
நீரோடை போல என் நெஞ்சம் இனிக்கும்
இனிய பருவமுள்ள இளங்குயிலே ()
ஏன் இன்னும் தாமதம் மன்மதக் காவியம் என்னுடன் எழுத

நானும் எழுதிட இளமையும் துடிக்குது
நாணம் அதை வந்து இடையினில் தடுக்குது
ஏங்கித் தவிக்கையில் நாணங்கள் எதற்கடி
ஏக்கம் தணிந்திட ஒரு முறை தழுவடி
காலம் வரும் வரை பொறுத்திருந்தால்
கன்னி இவள் மலர்க்கரம் தழுவிடுமே
காலம் என்றைக்குக் கனிந்திடுமோ
காலை மனம் அதுவரை பொறுத்திடுமோ
மாலை மலர் மாலை இடும் வேலைதனில்
தேகம் இது விருந்துகள் படைத்திடும்

தோகை போலே மின்னும் பூவாய் உந்தன் கூந்தல்
கார்மேகம் என்றே நான் சொல்வேன் கண்ணே
பாவை எந்தன் கூந்தல் வாசம் யாவும் அந்த
மேகம்தனில் ஏது நீ சொல்வாய் கண்ணா
அழகைச் சுமந்து வரும் அழகரசி ()
ஆனந்த பூமுகம் அந்தியில் வந்திடும் சுந்தர நிலவோ

நாளும் நிலவது தேயுது மறையுது
நங்கை முகமென யாரதைச் சொன்னது
மங்கை உன் பதில் மனதினைக் கவருது
மாறன் கணை வந்து மார்பினில் பாயுது
காமன் கணைகளைத் தடுத்திடவே
காதல் மயில் துணை என வருகிறது
மையல் தந்திடும் வார்த்தைகளே
மோகம் எனும் நெருப்பினைப் பொழிகிறது
மோகம் நெருப்பாக அதைத் தீர்க்குமொரு
ஜீவா நதி அருகினில் இருக்குது

புஞ்சை உண்டு நஞ்சை உண்டு

புஞ்சை உண்டு நஞ்சை உண்டு
பாடல்: புஞ்சை உண்டு நஞ்சை உண்டு
குரல்: எஸ் பி பாலசுப்ரமணியம்
வரிகள்:

புஞ்சை உண்டு நஞ்சை உண்டு பொங்கிவரும் கங்கை உண்டு
வஞ்சம் மட்டும் இன்னும் இங்கு மாறவில்ல - இந்த
பாரதத்தில் சோத்துச்சண்ட தீரவில்ல
வீதிக்கொரு கட்சியுண்டு சாதிக்கொரு சங்கமுண்டு
நீதி சொல்ல மட்டும் இங்கு நாதியில்ல - மனம்
நிம்மதியா வாழ ஒரு நாளுமில்ல - இது
நாடா இல்ல வெறும் காடா - இதைக்
கேட்க யாரும் இல்ல தோழா

(புஞ்சை உண்டு)

வானத்தை எட்டி நிற்கும் உயர்ந்த மாளிகை
யாரிங்கு கட்டிவைத்துக் கொடுத்தது
ஊருக்குப் பாடுபட்டு உழைக்கும் கூட்டமே
வீடின்றி வாசலின்றித் தவிக்குது
எத்தனை காலம் இப்படிப் போகும் என்றொரு கேள்வி நாளை வரும்
உள்ளவை எல்லாம் யாருக்கும் சொந்தம் என்றிங்கு மாறும் வேளை வரும்
ஆயிரம் கைகள் கூடட்டும் ஆனந்த ராகம் பாடட்டும்
நாளைய காலம் நம்மோடு நிச்சயம் உண்டு போராடு
வானகமும் வையகமும் எங்கள் கைகளில் என்றாடு

(புஞ்சை உண்டு)

ஆற்றுக்குப் பாதை இங்கு யாரு தந்தது
தானாகப் பாதை கண்டு நடக்குது
காற்றுக்குப் பாட்டுச் சொல்லி யாரு தந்தது
தானாகப் பாட்டு ஒண்ணு படிக்குது
????? நம்பிக்கை வேண்டும் நெஞ்சுக்குள்ளே
காலையில் தோன்றும் சூரியன் போலே தண்ணொளி வேண்டும் கண்ணுக்குள்ளே
சேரியில் தென்றல் வீசாதா ஏழையை வந்து தீண்டாதா
?????
பாடுபடும் தோழர்களின் தோள்களில் மாலை சூடாதா

(புஞ்சை உண்டு)

ஏன் பெண்ணென்று பிறந்தாய்?

இசை : சிவா
வரிகள் : வைரமுத்து
குரல் : உன்னி கிருஷ்ணன்
-------------------------------------
ஏன் பெண்ணென்று பிறந்தாய்?
ஏன் என் கண்ணில் விழுந்தாய்?
ஏன் ஒரு பாதி சிரித்தாய்?
என் உயிர் பூவை எரித்தாய்?
முதல் நாள் பார்த்தாய்... உறக்கம் கெடுத்தாய்!
முறையா என்றேன், கண்கள் பறித்தாய்!
என் வலி தீர ஒரு வழி என்ன?
என் பனிப் பூவே மீண்டும் பார்த்தால் என்ன?
(ஏன்)
நீ சூடும் ஒரு பூ தந்தால்,
என் ஆஸ்தி எல்லாம் கொடுப்பேன்!
உன் வாயால் என் பேர் சொன்னால்,
உன் காலடியில் கிடப்பேன்!
தூக்கத்தை தொலைத்தேனே, துடிக்குது நெஞ்சம்!
தலை போன சேவல் போல், தவிக்குது அங்கம்!
இரண்டில் ஒன்று சொல்லிவிடு!
இல்லை நீயே கொள்ளியிடு...!
(ஏன்)
நோகாமல், பிறர் காணாமல்,
உந்தன் ஆடை நுனி தொடுவேன்!
என்ன ஆனாலும், உயிர் போனாலும்,
ஒரு தென்றல் என்றே வருவேன்!
நீ என்னைப் பார்த்தால் தான் துடிக்குது உள்ளம்!
நீ என்னைப் பிரிந்தாலோ உள்ளம் வெறும் பள்ளம்!
இமயம் கேட்கும் என் துடிப்பு!
ஏனோ உனக்குள் கதவடைப்பு!
(ஏன்)

அது சுகம் சுகம் அது வேண்டும் வேண்டும்

பாடல்:அது சுகம் சுகம் அது வேண்டும் வேண்டும்
படம்: வண்டிச்சோலை சின்னராசு
நடிகர்: சத்யராஜ், சுகன்யா
இசை: ஏ.ஆர்.ரஹ்மான்


அது சுகம் சுகம் அது வேண்டும் வேண்டும்
அது தினம் தினம் வரும் மீண்டும் மீண்டும்
கூடும் நேரம் பல யுகங்கள் கனங்கள் ஆகும்
நீங்கும் நேரம் சில கனங்கள் யுகங்கள் ஆகும்
வா வா மீண்டும் மீண்டும் தாலாட்ட

அது சுகம் சுகம் அது வேண்டும் வேண்டும்
அது தினம் தினம் வரும் மீண்டும் மீண்டும்
கூடும் நேரம் பல யுகங்கள் கனங்கள் ஆகும்
நீங்கும் நேரம் சில கனங்கள் யுகங்கள் ஆகும்
வா வா மீண்டும் மீண்டும் தாலாட்ட

வானம் எந்தன் தோளோடு
சாய்ந்தது என்ன உன்னோடு
பஞ்சு வண்ண நெஞ்சோடு
படுக்கை ஒன்னு நீ போடு

சாம வேதம் நீ ஓது
வாடை குயிலும் தூங்கும் போது??
பாயுது தாங்காது தாங்காது
கண்ணோரம் இந்நேரம் செந்தூரம் உன்னோடு

அது சுகம் சுகம் அது வேண்டும் வேண்டும்
அது தினம் தினம் வரும் மீண்டும் மீண்டும்
கூடும் நேரம் பல யுகங்கள் கனங்கள் ஆகும்
நீங்கும் நேரம் சில கனங்கள் யுகங்கள் ஆகும்
வா வா மீண்டும் மீண்டும் தாலாட்ட

கள்ளூம் தேனும் ஒன்னாச்சு
காதல் நெஞ்சில் உண்டாச்சு
கண்ணில் இன்று உண்டாச்சு
அதிலே தூக்கம் போயாச்சு

பாரிஜாத உன் தேகம்
பார்க்க பார்க்க போதை ஏறும்
நீ கொடு பேரின்பம் கையோடு கைசேர
மெய்யோடு மெய்சேர

அது சுகம் சுகம் அது வேண்டும் வேண்டும்
அது தினம் தினம் வரும் மீண்டும் மீண்டும்
கூடும் நேரம் பல யுகங்கள் கனங்கள் ஆகும்
நீங்கும் நேரம் சில கனங்கள் யுகங்கள் ஆகும்
வா வா மீண்டும் மீண்டும் தாலாட்ட

அது சுகம் சுகம் அது வேண்டும் வேண்டும்
அது தினம் தினம் வரும் மீண்டும் மீண்டும்
கூடும் நேரம் பல யுகங்கள் கனங்கள் ஆகும்
நீங்கும் நேரம் சில கனங்கள் யுகங்கள் ஆகும்
வா வா மீண்டும் மீண்டும் தாலாட்ட

ஆலோலம் பாடி அசைந்தாடும்

ஆலோலம் பாடி அசைந்தாடும் காற்றே…அதை கேட்டு தூங்கும் ஆவாரம் பூவே….
தனியானால் என்ன துணை இங்கே நான் பாடும் பாட்டுண்டு….
அமுதே என்கண்ணே பசும்பொன்னே….இனி துன்பம் ஏன் இங்கு….
ஆலோலம் பாடி அசைந்தாடும் கா….ற்றே…அதை கேட்டு தூங்கும் ஆவாரம் பூ……வே….

ஆ…ஆ… மண்ணுலகில் வந்தோர்க்கெல்லாம் இன்பதுன்பம் என்றும் உண்டு…
தாயிழந்த துன்பம் போலே ….துன்பம் அது ஒன்றும் இல்லை….
பூமி என்ற தாயும் உண்டு….வானம் என்ற தந்தை உண்டு….
நீங்கிடாத சொந்தம் என்று….நீரும் காற்றும் எங்கும் உண்டு…
பூபாளம் பாடும் காலை வந்து வரவேற்கும்…
தாயின்றி நின்றபிள்ளை தன்னை என்றும் காக்கும்….
நீகாணும் எல்லாம் உன்சொந்தம்….ம்…ம்…ம்…ம்…ம்

ஆலோலம் பாடி அசைந்தாடும் கா….ற்றே…அதை கேட்டு தூங்கும் ஆவாரம் பூவே….
தனியானால் என்ன துணை இங்கே நான் பாடும் பாட்டுண்டு….
அமுதே என்கண்ணே பசும்பொன்னே….இனி துன்பம் ஏன் இங்கு….
ஆலோலம் பா…டி அசைந்தாடும் கா.ற்றே…அதை கேட்டு தூங்கும் ஆவாரம் பூ……வே….

சோகமெதும் சுமையே இல்லை….சுகங்கள் கூட சுகமே இல்லை…
ஆதரவை தந்தால் கூட அதையும் இங்கு அறிந்தா இல்லை….
வந்ததுண்டு போனதுண்டு உன்கணக்கில் ரெண்டும் ஒன்று
வரவும் உண்டு செலவும் உண்டு உன்கணக்கில் வரவே உண்டு…
ஊர் எங்கள் பிள்ளை என்று இன்று சொல்லக்கூடும்…
உலகமெந்தன் சொந்தம் என்று உந்தன் உள்ளம் பாடும்…
நீயாரோ அன்பே….அமுதே……எ…எ…எ…எ…

ஆலோலம் பாடி அசைந்தாடும் கா….ற்றே…அதை கேட்டு தூங்கும் ஆவாரம் பூ….வே….
தனியானால் என்ன துணை இங்கே நான் பாடும் பாட்டுண்டு….
அமுதே என்கண்ணே பசும்பொன்னே….இனி துன்பம் ஏன் இங்கு….
ஆலோலம் பா.டி அசைந்தாடும் காற்றே…அதை கேட்டு தூங்கும் ஆவாரம் பூ……வே….

சங்கே முழங்கு

படம் : கலங்கரை விளக்கம்
இசை : எம்.எஸ். விஸ்வநாதன்
பாடியவர் :சீர்காழி கோவிந்தராஜன்,பி. சுசீலா
வரிகள் :பாவேந்தர் பாரதிதாசன்


சங்கே முழங்கு சங்கே முழங்கு
எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழ் என்று
சங்கே முழங்கு சங்கே முழங்கு
எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு

எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்
இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டு
பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால்
பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால்
சங்காரம் நிசமென்று சங்கே முழங்கு
சங்கே முழங்கு சங்கே முழங்கு
சங்கே முழங்கு

திங்களோடும் செழும் பருதி தன்னோடும்
விண்ணோடும் உடுக்களோடும்
மங்கு கடல் இவற்றோடும்
பிறந்த தமிழுடன் பிறந்தோம் நாங்கள்
தமிழுடன் பிறந்தோம் நாங்கள்

ஆண்மை சிங்கத்தின் கூட்டமென்றும்
சிறியோர்க்கு ஞாபகம் செய் முழங்கு
சங்கே சங்கே முழங்கு


வெங்க்கொடுமை சாக்காட்டில் விளையாடும் தோள்
எங்கள்வெற்றித் தோள்கள்
கங்கையைப் போல் காவிரிப் போல்
கருத்துக்கள் ஊரும் உள்ளம் எங்கள் உள்ளம்
வெங்குருதி தனில் கமழ்ந்து
வீரம் செய்கின்ற தமிழ் எங்கள்
மூச்சாம் தமிழ் எங்கள் மூச்சாம்