Saturday, May 30, 2009

ஒரு வார்த்தை இரு பொருள்

ஒரு ‌சில வா‌ர்‌த்தைக‌ள் இர‌ண்டு அ‌ர்‌த்த‌ங்களை‌க் கொடு‌க்கு‌ம். பய‌ன்படு‌த்து‌ம் இட‌த்‌தி‌ற்கே‌ற்ப அத‌ன் பொரு‌ள் அமையு‌ம்.

திங்கள்: மாதம், நிலவு, கிழமை.

ஆறு: நதி, எண்ணின் பெயர்.

இசை: சம்மதித்தல், சங்கீதம்.

மாலை: பூமாலை, பொழுது.

நகை: புன்சிரிப்பு, அணிகலன்.

மதி: அறிவு, நிலவு, மதித்தல்.

வேழம்: யானை, மூங்கில், கரும்பு.

மெய்: உண்மை, உடம்பு.

உடுக்கை: ஆடை, இசைக்கருவி.

அன்னம்: சோறு, பறவை.

நாண்: கயிறு, வெட்கப்படுதல்.

வேங்கை: புலி, ஒரு வகை மரம்.

ஞா‌யிறு : ‌கிழமை, சூ‌ரிய‌ன்

Thursday, May 28, 2009

உனது வெற்றி

வெற்றியை மட்டும் முரசு கொட்டிவிட்டு,
தோல்வியை கண்டு வெறுப்படைய வேண்டாம்..
தோல்வி தான் வெற்றிக்கு முதற்படி என்று சொல்வார்கள்..
ஆனால் தோல்வியின் காரணத்தை கண்டு அதை சரி செய்..
அது தான் வெற்றிக்கு முதற்படி...
தோல்வியை வெல்பவனே வெற்றியாளன் ஆகிறான்..
உனது வெற்றியை நீயே உனக்கு பரிசளித்து கொள்

உண்மை

தங்கள் கால்களால்
பறவை சிக்கிக் கொள்ளும்;
தன் நாவினால்
மனிதன் சிக்கிக் கொள்வான்
-தாமஸ் புல்லர்


உண்மை உன் பக்கமெனில் வெற்றியும் நிச்சயம்
உன் பக்கம் தான்....
-நேரு-இந்திரா கடித்தத்தில்

Wednesday, May 27, 2009

பயத்தை வெற்றி கொள்

வாழ்வில்
ஒரே ஒரு முறை தான் மரணம்...
ஏன் தினம் தினம் மரணிக்கிறாய் பயம் என்ற செயலால்..
ஒவ்வொரு நாளும் ஒரு போராட்டம் தான்
ஆம், வாழ்க்கை என்னும் போராட்டம்
துணிந்து நில் வெற்றி கொள் புதிய உலகை படைப்போம்.
பெரியவர்கள் தோள் கொடுத்து துணை நிற்பார்கள்.
வா தோழா புதிய உலகை படைக்க.

Monday, May 25, 2009

வாழ்க்கை

வாழ்க்கையில் வெற்றி பெற
மூன்று வழிகள் உள்ளன.
பிறரைக்காட்டிலும் அதிகமாக
அறிந்து கொள்ள முயலுங்கள்.
பிறரைக்காட்டிலும் அதிகமாக
உழைக்கக் கற்றுக்கொள்ளுங்கள்
பிறரைக் காட்டிலும் குறைவாக
பிறரிடமிருந்து பெற முயலுங்கள்.
-வில்லியம் ஷேக்ஸ்பியர்

Sunday, May 24, 2009

எழு தோழா!

எத்துனை நாளைக்கு தான் சிலந்தியையும்,முஹம்மத் கஜினியையும் விடாமுயற்சிக்கு
வித்தாய் சொல்லி கொண்டிருப்பது,பல பல முஹம்மத் கஜினிகள் வர வேண்டாமா?
முயற்சி பாதையில் முத்து குளித்து முன்னேற்ற பாதையில் முத்தெடுப்போம் வா
தடை கற்களை தகர்த்து விட்டு முன்னேற்ற கனியை எட்டி பறிக்க வேண்டாமா ?
போதும் பொங்குமா கடலாய் பொறுத்திருந்தது..

வீறு கொண்டு எழு தோழா !
உலகை முன்னேற்றுவோம்,இந்தியாவை முன்னேற்றுவோம்..

முயற்சி எனும் கல்லை,
பதமாய் தட்டி தட்டி செதுக்க முன்னேற்றமெனும்
சிலை மெய் காணும் காலம் முன்னேறி கொண்டு இருக்கிறது,
இன்ன பிற படைப்புகள் எல்லாம் முன்னேறி கொண்டு இருக்கிறது.
நாமும் முன்னேறுவோம் வா ..

சிந்தனையை பாங்காய் தீட்டி செயலாய் கொண்டு வா ,தடைகளை தடைபடுதிவிட்டு,
முன்னேற்ற பாதையில் வீறு கொண்டு முன்னேறுவோம்.
ஏறி சுடராய் இருந்தது போதும்,தீ சுடராய் வா ..

அலுத்து விட்டது பனிமலையாய் படுத்திருந்தது..
எழுந்து வா....
எரிமலையாய் முன்னேற்ற சிகரத்தில் மகுடம் சூடுவோம் ......

Wednesday, May 20, 2009

இன்றைய சிந்தனை

பேசும்முன் கேளுங்கள்,
எழுதுமுன் யோசியுங்கள்,
செலவழிக்கும்முன் சம்பாதியுங்கள்

கவனமாய் இருங்கள்

"எண்ணத்தில் கவனமாய் இருங்கள்,
ஏனெனில் எண்ணங்கள்தான் சொற்களாகின்றன.
சொல்லில் கவனமாய் இருங்கள்,
ஏனெனில் சொற்கள்தான் செயல்களாகின்றன.
செயலில் கவனமாய் இருங்கள்,
ஏனெனில் செயல்கள்தான் பழக்கங்களாகின்றன.
பழக்கத்தில் கவனமாய் இருங்கள்,
ஏனெனில் பழக்கங்கள்தான் ஒழுக்கங்களாகின்றன.
ஒழுக்கத்தில் கவனமாய் இருங்கள்,
ஏனெனில் ஒழுக்கம்தான் உங்கள் வாழ்வை வடிவமைக்கின்றது!”
-அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி

ஏறுமுக இலக்கங்கள்

கிறிஸ்துவுக்கும் முன்னால் மூன்றாம் நூற்றாண்டில் நாம் இப்போது எழுதும் நம் தமிழ் எழுத்துருக்கள் எப்படி இருந்தன என பார்த்தபோது மிகவும் ஆச்சரியமாக இருந்தது.


ஏறுமுக இலக்கங்கள்
1 = ஒன்று -one
10 = பத்து -ten
100 = நூறு -hundred
1000 = ஆயிரம் -thousand
10000 = பத்தாயிரம் -ten thousand
100000 = நூறாயிரம் -hundred thousand
1000000 = பத்துநூறாயிரம் - one million
10000000 = கோடி -ten million
100000000 = அற்புதம் -hundred million
1000000000 = நிகர்புதம் - one billion
10000000000 = கும்பம் -ten billion
100000000000 = கணம் -hundred billion
1000000000000 = கற்பம் -one trillion
10000000000000 = நிகற்பம் -ten trillion
100000000000000 = பதுமம் -hundred trillion
1000000000000000 = சங்கம் -one zillion
10000000000000000 = வெல்லம் -ten zillion
100000000000000000 = அன்னியம் -hundred zillion
1000000000000000000 = அர்த்தம் -?
10000000000000000000 = பரார்த்தம் —?
100000000000000000000 = பூரியம் -?
1000000000000000000000 = முக்கோடி -?
10000000000000000000000 = மஹாயுகம் -????????????????

இறங்குமுக இலக்கங்கள்
1 - ஒன்று
3/4 - முக்கால்
1/2 - அரை கால்
1/4 - கால்
1/5 - நாலுமா
3/16 - மூன்று வீசம்
3/20 - மூன்றுமா
1/8 - அரைக்கால்
1/10 - இருமா
1/16 - மாகாணி(வீசம்)
1/20 - ஒருமா
3/64 - முக்கால்வீசம்
3/80 - முக்காணி
1/32 - அரைவீசம்
1/40 - அரைமா
1/64 - கால் வீசம்
1/80 - காணி
3/320 - அரைக்காணி முந்திரி
1/160 - அரைக்காணி
1/320 - முந்திரி
1/102400 - கீழ்முந்திரி
1/2150400 - இம்மி
1/23654400 - மும்மி
1/165580800 - அணு
1/1490227200 - குணம்
1/7451136000 - பந்தம்
1/44706816000 - பாகம்
1/312947712000 - விந்தம்
1/5320111104000 - நாகவிந்தம்
1/74481555456000 - சிந்தை
1/489631109120000 - கதிர்முனை
1/9585244364800000 - குரல்வளைப்படி
1/575114661888000000 - வெள்ளம்
1/57511466188800000000 - நுண்மணல்
1/2323824530227200000000 - தேர்த்துகள்

அளவைகள்

நீட்டலளவு

10 கோன் - 1 நுண்ணணு
10 நுண்ணணு - 1 அணு
8 அணு - 1 கதிர்த்துகள்
8 கதிர்த்துகள் - 1 துசும்பு
8 துசும்பு - 1 மயிர்நுணி
8 மயிர்நுணி - 1 நுண்மணல்
8 நுண்மணல் - 1 சிறுகடுகு
8 சிறுகடுகு - 1 எள்
8 எள் - 1 நெல்
8 நெல் - 1 விரல்
12 விரல் - 1 சாண்
2 சாண் - 1 முழம்
4 முழம் - 1 பாகம்
6000 பாகம் - 1 காதம்(1200 கெசம்)
4 காதம் - 1 யோசனை

பொன்நிறுத்தல்

4 நெல் எடை - 1 குன்றிமணி
2 குன்றிமணி - 1 மஞ்சாடி
2 மஞ்சாடி - 1 பணவெடை
5 பணவெடை - 1 கழஞ்சு
8 பணவெடை - 1 வராகனெடை
4 கழஞ்சு - 1 கஃசு
4 கஃசு - 1 பலம்

பண்டங்கள் நிறுத்தல்

32 குன்றிமணி - 1 வராகனெடை
10 வராகனெடை - 1 பலம்
40 பலம் - 1 வீசை
6 வீசை - 1 தூலாம்
8 வீசை - 1 மணங்கு
20 மணங்கு - 1 பாரம்

முகத்தல் அளவு

5 செவிடு - 1 ஆழாக்கு
2 ஆழாக்கு - 1 உழக்கு
2 உழக்கு - 1 உரி
2 உரி - 1 படி
8 படி - 1 மரக்கால்
2 குறுணி - 1 பதக்கு
2 பதக்கு - 1 தூணி

பெய்தல் அளவு

300 நெல் - 1 செவிடு
5 செவிடு - 1 ஆழாக்கு
2 ஆழாக்கு - 1 உழக்கு
2 உழக்கு - 1 உரி
2 உரி - 1 படி
8 படி - 1 மரக்கால்
2 குறுணி - 1 பதக்கு
2 பதக்கு - 1 தூணி
5 மரக்கால் - 1 பறை
80 பறை - 1 கரிசை
48 96 படி - 1 கலம்
120 படி - 1 பொதி

வியர்வையில் வீரம்

வியர்வையில் வீரம்
பெரியவர்கள் சிறகடித்து போய் உலகபிரசித்தி என்னும் முகிலை எட்டிப்பிடித்து விட்டார்கள் என்று எண்ணுகிறாயோ? இல்லை.பிறர் துயிலும் பொழுது இவர்கள் கால்கடுக்க ஏறினார்கள்
-ஹென்றி லாங் பெல்லோ

Tuesday, May 19, 2009

வெற்றி

வெற்றிக்குப் பிறகு
தொடர்ந்து உழைப்பதை நிறுத்த வேண்டாம்;
தோல்விக்குப் பிறகு
தொடர்ந்து முயல்வதை நிறுத்த வேண்டாம்!

வெற்றி என்பது யாதெனில்

வெற்றி என்பது யாதெனில்
ஓயாத புன்முறுவலுடன்
பல் அறிஞர்களின் மரியாதைகளையை அள்ளிக்கொண்டு
சிறுகுழந்தையோடு குழந்தையாய் கூத்தாடி
உண்மையான விமர்ச்சனங்களை வாங்கிக்கொண்டு
காட்டிக்கொடுக்கும் நண்பர்களைத் தாங்கிக்கொண்டு
அழகை ஆராதித்து
அடுத்தவர் திறனை வெளிக்கொணர்ந்து
வாழும்பூமியை இன்னும் வளமாக்க
துடிப்பான குழந்தையையோ-இல்லை
செழிப்பான துறவையோ-இல்லை
சுதந்திரமான ஒரு சமூகத்தையோ உருவாக்கி
உன் வாழ்வால் இன்னொரு உயிர் நிம்மதியாய் மூச்சுவிடுகிறது என்றால்
அதுவே உன் வாழ்வின் வெற்றியாகும்
-ரால்ப் வால்டொ எமெர்சன்

புறப்படு தமிழா

நீ மற்றவருக்கு வழிகாட்டி ஆவதற்காகப்
பிறந்திருக்கிறாய்.
ஏன் மற்றவர்களிடம் உன் வழிகாட்டியைத்
தேடிக் கொண்டிருக்கிறாய்?
இந்த உலகம்
உன் வெற்றிக் கதையைப் படிக்கக்
காத்துக்கொண்டிருக்கிறது.