Wednesday, September 16, 2009

கண்ணின் மணியே கண்ணின் மணியே போராட்டமா

படம்: மனதில் உறுதி வேண்டும்

கண்ணின் மணியே கண்ணின் மணியே போராட்டமா
உன் கண்களில் என்ன கண்களில் என்ன நீரோட்டமா
பெண் முன்னேற்றம் எல்லாம் வெறும் பேச்சோடுதானா
பழம் பாட்டோடுதானா அது ஏட்டோடுதானா
நாள் தோறும் பாடும் ஊமைகள் தானா

கண்ணின் மணியே கண்ணின் மணியே போராட்டமா
உன் கண்களில் என்ன கண்களில் என்ன நீரோட்டமா

சாத்திரங்கள் பெண் இனத்தை மூடி மறைத்ததம்மா
அந்த ஆத்திரத்தில் பாரதிக்கும் மீசை துடித்ததம்மா
சாத்திரங்கள் பெண் இனத்தை மூடி மறைத்ததம்மா
அந்த ஆத்திரத்தில் பாரதிக்கும் மீசை துடித்ததம்மா

வீடாளும் பெண்மை இங்கே நாடாளும் காலம் வந்தும்
ஊமைகள் போலவே என்றும் ஓயாமல் கண்ணீர் சிந்தும்
ஏனென்று கேட்கத்தான் இப்போதும் ஆளில்லை
சமநீதி சேர்க்கின்ற சட்டங்கள் ஏன் இல்லை
உலகமெல்லாம் விடிந்த பின்னும் உங்களின் இரவுகள் விடியவில்லை

கண்ணின் மணியே கண்ணின் மணியே போராட்டமா
உன் கண்களில் என்ன கண்களில் என்ன நீரோட்டமா
பெண் முன்னேற்றம் எல்லாம் வெறும் பேச்சோடுதானா
பழம் பாட்டோடுதானா அது ஏட்டோடுதானா
நாள் தோறும் பாடும் ஊமைகள்தானா

கண்ணின் மணியே கண்ணின் மணியே போராட்டமா
உன் கண்களில் என்ன கண்களில் என்ன நீரோட்டமா

பாய் விரிக்கும் பாவை என்ன காதல் பதுமைகளா
தினம் ஏவல் செய்ய ஆடவர்க்கு காதல் அடிமைகளா
பாய் விரிக்கும் பாவை என்ன காதல் பதுமைகளா
தினம் ஏவல் செய்ய ஆடவர்க்கு காதல் அடிமைகளா

பொன் அள்ளி வைத்தால்தானே பூமாலை தோளில் ஏறும்
இல்லாத ஏழையர்க்கெல்லாம் பொல்லாத தனிமைக் கோலம்
எரிகின்ற நேரத்தில் அணைக்கின்ற கையில்லை
சொல்கின்ற வார்த்தைகள் ஒவ்வொன்றும் பொய்யில்லை
கனவுகளில் மிதந்த படி கலங்குது மயங்குது பருவக்கொடி…

கண்ணின் மணியே கண்ணின் மணியே போராட்டமா
உன் கண்களில் என்ன கண்களில் என்ன நீரோட்டமா
பெண் முன்னேற்றம் எல்லாம் வெறும் பேச்சோடுதானா
பழம் பாட்டோடுதானா அது ஏட்டோடுதானா
நாள் தோறும் பாடும் ஊமைகள்தானா

கண்ணின் மணியே கண்ணின் மணியே போராட்டமா
உன் கண்களில் என்ன கண்களில் என்ன நீரோட்டமா

Monday, September 7, 2009

அகரம் இப்போ சிகரம் ஆச்சு

படம் - சிகரம்
பாடியவர் -K.J.Jesuthas
வரிகள் -
இசை - S.P. Balasubramaniam

அகரம் இப்போ சிகரம் ஆச்சு
தகரம் இப்போ தங்கம் ஆச்சு
காட்டு மூங்கில் பாட்டுப் பாடும்
புல்லாங்குழல் ஆச்சு

சங்கீதமே சந்நிதி
சந்தோசம் சொல்லும் சங்கதி

கார்காலம் வந்தால் என்ன?
கடும் கோடை வந்தால் என்ன?
மழை வெள்ளம் போகும்
கரை இரண்டும் வாழும்
காலங்கள் போனால் என்ன?
கோலங்கள் போனால் என்ன?
பொய் அன்பு போகும்
மெய்யன்பு வாழும்

அன்புக்கு உருவமில்லை
பாசத்தில் பருவமில்லை
வானோடு முடிவுமில்லை
வாழ்வோடு விடையுமில்லை

இன்றென்பது உண்மையே
நம்பிக்கை உங்கள் கையிலே

தண்ணீரில் மீன்கள் வாழும்
கண்ணீரில் காதல் வாழும்
ஊடல்கள் எல்லாம் தேடல்கள்தானே
பசியாற பார்வைபோதும்
பரிமாற வார்த்தை போதும்
கண்ணீரில் பாதி காயங்கள் ஆறும்

தலைசாய்க்க இடமாயில்லை
தலை கோத விரலாயில்லை
இளங்காற்று வரவாயில்லை
இளைப்பாறு பரவாயில்லை

நம்பிக்கையே நல்லது
எறும்புக்கும் வாழ்க்கை உள்ளது

நானாக நான் இல்லை தாயே நல்வாழ்வு தந்தாயே நீயே

நானாக நான் இல்லை தாயே நல்வாழ்வு தந்தாயே நீயே
பாசம் ஒரு நேசம் பாசம் ஒரு நேசம்
கண்ணார கண்டான் உன் சேயே

(நானாக)

கீழ்வானிலே ஒளி வந்தது கூட்டை விட்டு கிளி வந்தது
நான் பார்க்கும் ஆகாயம் எங்கும் நீ பாடும் பூபாளம்
நான் பார்க்கும் ஆகாயம் எங்கும் நீ பாடும் பூபாளம்
வாடும் பயிர் வாழ நீ தானே நீர் வார்த்த கார்மேகம்

(நானாக)

மணி மாளிகை மாடங்களும் மலர் தூவிய மஞ்சங்களும்
தாய் வீடு போல் இல்லை அங்கு தாலாட்ட ஆள் இல்லை
தாய் வீடு போல் இல்லை அங்கு தாலாட்ட ஆள் இல்லை
கோயில் தொழும் தெய்வம் நீ இன்றி நான் காண வேறில்லை

(நானாக)

Wednesday, September 2, 2009

கிழக்கே பார்த்தேன் விடியலாய் இருந்தாய் அன்பு தோழி

கிழக்கே பார்த்தேன் விடியலாய் இருந்தாய் அன்பு தோழி
என் ஜன்னலின் ஓரம் தென்றலாய் வந்தாய் அன்பு தோழி
தனிமையில் இருந்தால் நினைவாய் இருப்பாய் அன்பு தோழி
நான் இறந்தோ பிறந்தோ புதிதாய் ஆனேன் உன்னால் தோழி
தோழி உந்தன் வருகையால் நெஞ்சம் தூய்மையாய் ஆனதடி
நல்ல தோழி நல்ல நூலகம் உன்னால் புரிந்ததடி

Well My Friend
I have something to say
I want you to listen
Listen to me
This is what I have to say
Here It Goes..

தாகம் என்று சொல்கிறேன்
மரக் கன்று ஒன்றை தருகிறாய்
பசிக்குது என்று சொல்கிறேன்
நெல்மனி ஒன்றை தருகிறாய்
உந்தன் கை விரல் பிடிக்கையில்
புதிதாய் நம்பிக்கை பிறக்குது
உந்தன் கூட நடக்கையில்
ஒன்பதாம் திசையும் திறக்குது
என் பயணத்தில் எல்லாம் நீ
கைக்காட்டி மரமாய் முளைத்தாய்
என் மனதை உழுது
நீ நல்ல விதைகளை விதைத்தாய்
என்னை நானே செதுக்க
நீ உன்னையே உலியாய் தந்தாய்
என் பலம் என்னவென்று எனக்கு
நீ இன்றுதான் உணர வைத்தாய்

கிழக்கே..

மழையோ உந்தன் புன்னகை
மனசெல்லாம் மெல்ல நனையுதே
வேருக்குள் விழுந்த நீர் துளி
பூவுக்கும் புத்துயிர் கொடுக்குதே
உனக்குள் ஏற்ப்படும் உத்சவம்
என்னையும் குதூகலப் படுத்துதே
தோழி ஒருத்தி கிடைத்தால்
இங்கு இன்னொரு பிறவி கிடைக்கும்
இதுவரை இந்த உண்மை
ஏன் தெரியவில்லை எவர்க்கும்
மாற்றங்கள் நிறைந்ததே வாழ்க்கை
அதை உன்னால் உணர்ந்தேன் தோழி
படைத்தவன் கேட்டால் கூட
உன்னை கொடுத்திடமாட்டேன் தோழி

கிழக்கே..

சங்கீத மேகம் தேன் சிந்தும் நேரம்

சங்கீத மேகம் தேன் சிந்தும் நேரம்
ஆகாயம் பூக்கள் தூவும் காலம்
நாளை என் கீதமே எங்கும் உலாவுமே
நாளை என் கீதமே எங்கும் உலாவுமே
என்றும் விழாவே என் வாழ்விலே

சங்கீத மேகம்..

போகும் பாதை தூரமே வாழும் காலம் கொஞ்சமே
ஜீவ சுகம் பெற ராக நதியினில் நீ நீந்தவா .. (2)
இந்தத் தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்
இந்தத் தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்
கேளாய் பூமனமே

சங்கீத மேகம்..

உள்ளம் என்னும் ஊரிலே பாடல் என்னும் தேரிலே
நாளும் கனவுகள் ராக பாவனைகள் போகின்றதே .. (2)
எந்தன் மூச்சும் இந்தப் பாட்டும் அணையா விளக்கே
எந்தன் மூச்சும் இந்தப் பாட்டும் அணையா விளக்கே
கேளாய் பூமனமே

சங்கீத மேகம்..