Wednesday, August 24, 2011

வெள்ளி நிலவே வெள்ளி நிலவே

வெள்ளி நிலவே வெள்ளி நிலவே ....
வெள்ளி நிலவே வெள்ளி நிலவே வீண் சோகம் ஏனடி மானே ஏனடி
முல்லை மலரே முல்லை மலரே உன் பாரம் தீர்ப்பவர் யாரு கூறடி
மின்னும் சிலையே அன்னை போல் வரவா நானும் சோருட்ட
உண்ணாதிருந்தால் இங்கே யார் வருவார் உன்னை சீராட்ட


(வெள்ளி நிலவே வெள்ளி நிலவே)


விண்ணில் ஓடி தன்னால் வாடும் நிலவே நாளும் உருகாதே
உன்னை பாடி மண்ணில் கோடி கவிதை வாழும் மறவாதே
நிலா சோறு நிலா சோறு தரவா நாளும் பசியாற
குயில் பட்டு குயில் பாட்டு தருவோம் நாங்கள் குஷியாக
வானவில்லும் தானிறங்கி பாய் போடும் நீயும் தூங்க
ஆடும் மயில் தொகை எல்லாம் தாலாட்டியே காத்து வீச
தேவ கனியே தெய்வதென்ன நீ தன்னாலே


(வெள்ளி நிலவே வெள்ளி நிலவே)


முல்லை மலரே முல்லை மலரே உன் பாரம் தீர்ப்பவர் யாரு கூறடி
சொந்தம் யாரு பந்தம் யாரு நிலவே பாரு எனை பாரு
நெஞ்சில் வாழும் கண்ணில் ஈரம் துடைப்பார் யாரு பதில் கூறு
உள்ளம் தோறும் கள்ளம் நூறு அதை நீ பார்த்து எடை போடு
உன்னை காக்க தொல்லை தீர்க்க வருவோம் நாங்கள் துணிவோடு
வானத்தோடு கோவம் கொண்டு நீ போவதேன் பால் நிலாவே
வானம் காக்க நாங்கள் உண்டு நீ நம்பியே பார் நிலாவே
தேவ கன்னியே ,,,தெய்வதென்ன நீ தன்னாலே


வெள்ளி நிலவு வெள்ளி நிலவு உன்னோடு சேர்ந்திட தானே பாடுது
உள்ளம் திறந்து உள்ளம் திறந்து தன் சோகம் தீர்ந்திட தானே தேடுது
மின்னும் நிலவே உன்னாலே வருதே பாடி சோறூட்ட
தள்ளி நடந்தால் வேறாரு வருவார் என்னை காப்பாற்ற
வெள்ளி நிலவு வெள்ளி நிலவு உன்னோடு சேர்ந்திட தானே பாடுது

தன் நன் நானா தன் நன் நானா தன் நன் நானா தன் நன் நானா தன் நன் நானா [3]

ஒ நெஞ்சே நெஞ்சே

ஒ நெஞ்சே நெஞ்சே...ரா ரா ரா
ஒ நெஞ்சே நெஞ்சே(2)
நீ வெள்ளை சந்திர வீதியில் உலாப் போகிறாய்
நீ நட்சத்திரங்களில் வாழவே கனாக் காண்கிறாய்
நெஞ்சே நீ விண்ணை சுற்றி பறந்தாலும்
உன் காலை மண்ணில் ஊன்றி நில் நில் நில் நில்


அன்பே அன்பே உன் துக்கத்தை விட்டு
விண்ணைத் தொட்டு உன் பேரை நிலவில் வெட்டு ...
காற்றெல்லாம் இனிக்கும்படி கண்ணால காதுக்குள் பாட்டுபாடி
என் காலம் நடக்கட்டுமே என் தேவா உன் மார்பில் சாய்ந்தபடி
ஒரு பார்வை சிறு வார்த்தை எந்தன் உயிருக்கு கவசமடி
இறந்தாலும் உயிரூட்டும் உந்தன் விரல்களின் ச்பரிசமடி
நான் சொல்லும் சொல்லைக் கேளாய் நாளைக்கு நீயே வெல்வாய்
சங்கீத நாதங்களுக்கு வேதம் சொல்வாய் வேதம் சொல்வாய்
பெண்ணே பெண்ணே உன் ஒற்றை சொல்லுக்கு
பொன்னும் முத்தும் நான் கொட்டித் தரவேண்டும்
அன்பே அன்பே உன் அன்பு சொல்வேண்டும்
இன்னும் சொல்லு என் ரத்தம் ஊற வேண்டும் ................


(ஒ நெஞ்சே நெஞ்சே)சந்தர்பம் அமைந்து விட்டால் பெண்பூவே சங்கீதம் மாற்றி வைப்பேன் காலங்கள் கனியும் வரை பேசாமல் காற்றுக்கு இசைஅமைப்பேன்
கலங்காதே மயங்காதே உன் கனவுக்கு துணையிருப்பேன்
இந்த பூமி உடைந்தாலும் உன்னை உள்ளங்கையில் ஏந்தி பறப்பேன்
என் நெஞ்சில் சொதுக்குள்ளே இதயத்தின் ஓசை கேளு
என் நெஞ்சில் ஓட்டிச்செல்லும் பாட்டுக்கேத்த மெட்டுப் போடு
பூவே பூவே உன் மூச்சே சங்கீதம்
சத்தம் சிந்தும் உன் முத்தம்கூட நாதம்
வாழ்வின் தீபம் அடி நீதான் எப்போதும்
வெல்லும் போதும் நீ சொல்லும் சொல்லே வேதம் ............

அச்சம் என்பது மடமையடா

அச்சம் என்பது மடமையடா
அஞ்சாமை திராவிடர் உடமையடா(2)

அச்சம் என்பது மடமையடா
அஞ்சாமை திராவிடர் உடமையடா (அச்சம்)
ஆறிலும் சாவு நூறிலும் சாவு
தாயகம் காப்பது கடமையடா(2) (அச்சம்)

கனகவிசயரின் முடிதலை நெரித்து
கல்லினை வைத்தான் சேரமகன் ஆஆஆஆஆ (கனகவிசயரின்)
இமயவரம்பினில் மீன் கொடி ஏற்றி
இசைபட வாழ்ந்தான் பாண்டியனே ( அச்சம்)

கருவினில் வளரும் மழலையின் உடலில்
தைரியம் வளர்ப்பாள் தமிழன்னை ஆஆஆ (கருவினில்)
களங்கம் பிறந்தால்
பெற்றவள் மானம் காத்திட எழுவான் அவள் பிள்ளை (அச்சம்)

வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி
மக்களின் மனதில் நிற்பவர் யார்
மாபெரும் வீரர் மானம் காப்போர்
சரித்திரம் தனிலே நிற்கிறார்.
(அச்சம்)

கண்ணதாசன் காரைக்குடி

கண்ணதாசன் காரைக்குடி
பெயரை சொல்லி ஊத்தி குடி
குன்னக்குடி மச்சான போல் பாட போறேன் டா
கண்ணாடி கோப்பையில் கண்ண மூடி நீச்சல் அடி
ஊறுகாய்யா தொட்டுக்கிட்டா ஒடி போகும் காய்ச்சலடி
போதை என்பது ஒரு பாம்பு விஷம் தான்
சேர்ந்து குடிச்சா அது ஒரு சோசியலிசம் தான்

பொண்டாட்டி பிள்ளைங்க தொல்லைங்க
இல்லா இடம் இந்த இடம் தானே
இந்த இடம் இல்லையினா சாமி மடம் தானே
மேஸ்திரி கலவை கலந்து குடிக்கிறாரே
சித்தாளு பொண்ண நினைச்சு இடிக்கிறாரே
இயக்குனர் யாரு அங்கு பாரு புலம்புறார்
நூறு மில்லிய அடிச்சா போதை இல்லையே
நூறு தாண்டுனா நடக்க பாதை இல்லையே

அண்ணனும் தம்பியும் எல்லாரும்
இங்க வந்தா டப்பாங்குத்து தானே
ஒவரா ஆச்சுதுனா வெட்டுக்குத்து தானே
எங்களுக்கு தண்ணியில் கண்டம் இல்லை
எங்களுக்குள் சாதி மதம் இரண்டும் இல்லை
கட்சிக்கார மச்சி என்ன ஆச்சி வேட்டி அவுந்து போச்சு
ரோடுக்கு கடையில் மனுசன் ஜாலிய பாரு
சேட்டு கடையில் மனைவி தாலிய பாரு

உயிரிலே எனது உயிரிலே

உயிரிலே எனது உயிரிலே
ஒரு துளி தீயை உதறினாய்
உணர்கிறேன் எனது உணர்விலே
அணுவென உடைந்து சிதறினாய்
ஏன் என்னை மறுத்துப் போகிறாய்
கானல் நீரோடு சேர்கிறாய்
கொடுத்ததாய் சொன்ன இதயத்தை
திருப்பி நான் வாங்க மாட்டேனே....
(உயிரிலே..........)

அருகினில் உள்ள தூரமே
அலைகடல் தீண்டும் வானமே
நேசிக்க நெஞ்சம் ரெண்டு
போதாதா போதாதா நீ சொல்லு
நேசமும் ரெண்டாம் முறை
வாராதா கூடாதா நீ சொல்லு
இது நடந்திடக் கூடுமா
இரு துருவங்கள் சேருமா
உச்சரித்தே நீயும் விலக
தத்தளித்தே நானும் மருக
என்ன செய்வேனோ...?
(உயிரிலே...........)

ஏதோ ஒன்று என்னைத் தடுக்குதே
பெண்தானே நீ என்று முறைக்குதே
என்னுள்ளே காயங்கள்
ஆறாமல் தீராமல் நின்றேனே
விசிறியாய் உன் கைகள்
வந்தாலும் வாங்காமல் சென்றேனே
வா வந்து என்னை சேர்ந்திடு
என் தோள்களில் தேய்ந்திடு
சொல்ல வந்தேன்
சொல்லி முடித்தேன்
வரும் திசை பார்த்து இருப்பேன்
நாட்கள் போனாலும்.......
(உயிரிலே..........)

திமு திமு தீம் தீம் தினம்

திமு திமு தீம் தீம் தினம்
தள்ளாடும் மனம் கண்ணில் காதல் வரம்
தம தம தம் தம் சுகம்
உன்னாலே தினம் நெஞ்சில் கூடும் மனம்
ஒ அன்பே! நீ சென்றால் கூட வாசம் வீசும் வீசும் வீசும் வீசும்
என் அன்பே! என் நாட்கள் என்றும் போலே போகும் போகும் போகும் போகும்
என் உள்ளே என் உள்ளே தன்னாலே காதல் கனம் கொண்டேன்

திமு திமு தீம் தீம் தினம்
தள்ளாடும் மனம் கண்ணில் காதல் வரம்
தம தம தம் தம் சுகம்
உன்னாலே தினம் நெஞ்சில் கூடும் மணம்

உள்ளமே உள்ளமே உள்ளே உன்னைக் காண வந்தேனே
உண்டாகிறாய் துண்டாகிறாய் உன்னால் காயம் கொண்டேனே
காயத்தை நேசித்தேனே என்ன சொல்ல நானும் இனி
நான் கனவிலும் வசித்தேனே என்னுடைய உலகம் தனி

கொஞ்சம் கனவுகள் கொஞ்சம் நினைவுகள்
நெஞ்சை நஞ்சாக்கி செல்லும்
கொஞ்சும் உறவுகள் கெஞ்சும் பிரிவுகள்
கண்ணைத் துண்டாக்கி துள்ளும் (கொஞ்சம்)

சந்தோசமும் சோகமும் சேர்ந்து வந்து தாக்கக் கண்டேனே
சந்தேகமாய் என்னையே நானும் பார்த்துக் கொண்டேனே
ஜாமத்தில் விழிக்கிறேன் ஜன்னல் வழி தூங்கும் நிலா
ஒ காய்ச்சலில் கொதிக்கிறேன் கண்ணுக்குள்ளே காதல் விழா விழா

திமு திமு தீம் தீம் தினம்
தள்ளாடும் மனம் கண்ணில் காதல் வரம்
தம தம தம் தம் சுகம்
உன்னாலே தினம் நெஞ்சில் கூடும் மணம்
ஒ! அன்பே! நீ சென்றால் கூட வாசம் வீசும் வீசும் வீசும் வீசும்
என் அன்பே! என் நாட்கள் என்றும் போலே போகும் போகும் போகும் போகும்
என் உள்ளே என் உள்ளே தன்னாலே காதல் கனம் கொண்டேன்

கொஞ்சம் கனவுகள் கொஞ்சம் நினைவுகள்
நெஞ்சை நஞ்சாக்கி செல்லும்
கொஞ்சும் உறவுகள் கெஞ்சும் பிரிவுகள்
கண்ணை துண்டாக்கி துள்ளும்
கொஞ்சம் கனவுகள் கொஞ்சம் நினைவுகள்
கொஞ்சும் உறவுகள் கெஞ்சும் பிரிவுகள்

மழை வரும் அறிகுறி

மழை வரும் அறிகுறி, என் விழிகளில் தெரியுதே
மனம் இன்று நனையுதே இது என்ன காதலா ? சாதலா?
பழகிய காலங்கள், என் பார்வையில் விரியுதே
பாதைகள் நழுவுதே இது ஏனோ ஏனோ ?

உன் தோளில் சாயும்போது , உற்சாகம் கொள்ளும் கண்கள்
நீ எங்கேயெங்கே என்று உன்னை தேடித் தேடி பார்க்கிறது
உன்னோடு போகும் போது பூ பூக்கும் சாலையாவும்
நீ எங்கே என்று என்னை கேட்ட பின்பு வாடிடிடுதே

அறியாதொரு வயதில் விதைத்தது …ஒ ஒ ஒஒஹோஅதுவாகவே தானாய் வளர்ந்தது … ஓஒ
புதிதாய் ஒரு பூவும் பூக்கையில் ..ஒ ஓ ஓ ஓஹோ
அட யாரது யாரதை பறித்தது? ஒஹோஒ ஒஹோ .

உன் கால் தடம் சென்ற வழி பார்த்து நானும் வந்தேனே
அது பாதியில் தொலைந்ததடா

நான் கேட்டது அழகிய நேரங்கள் ஒ ஒ ஒஒஹோ
யார் தந்தது விழிகளில் ஈரங்கள் ஓஒ
நான் கேட்டது வானவில் மாயங்கள் .ஒ ஓ ஓ ஓஹோ
யார் தந்தது வழிகளில் காயங்கள்
இந்த காதலும் ஒரு வகை சித்ரவதைதான்
அது உயிருடன் எரிக்குதுடா! (மழை வரும் அறிகுறி)

உன் தோளில் சாயும்போது , உற்சாகம் கொள்ளும் கண்கள்
நீ எங்கே எங்கே என்று உன்னை தேடி தேடி பார்க்கிறது
உன்னோடு போகும் போது பூ பூக்கும் சாலையாவும்
நீ எங்கே என்று என்னை கேட்ட பின்பு வாடிடிடுதே

யார் சொல்வதோ

யார் சொல்வதோ ,யார் சொல்வதோ?
பதில் யார் சொல்வதோ , யார் சொல்வதோ?

மொட்டு ஒன்று மலர்ந்திட மறுக்கும் ,
முட்டும் தென்றல் தொட்டு தொட்டு திறக்கும் ,
அது மலரின் தோல்வியா இல்லை காற்றின் வெற்றியா ?
அது மலரின் தோல்வியா இல்லை காற்றின் வெற்றியா?

கல்லுக்குள்ளே சிற்பம் தூங்கி கிடக்கும் ,
சின்ன உளி தட்டி தட்டி எழுப்பும் ,
அது கல்லின் தோல்வியா இல்லை உளியின் வெற்றியா ?

யார் சொல்வதோ, யார் சொல்வதோ ,
பதில் யார் சொல்வதோ, யார் சொல்வதோ ,

மேகம் என்பது அட மலை முடிச்சி,
காற்று மொட்டினால் அவிழ்ந்துக்கொள்ளும் ,

காதல் என்பது இரு மனமுடிச்சி ,
கண்கள் மொட்டினால் அவிழ்ந்துக்கொள்ளும் ,

மேகங்கள் மொட்டிகொள்வதாலே ,
சண்டை என்று பொருள் இல்லை ,

தேகங்கள் மொட்டிகொள்வதாலே ,
ஊடல் என்று பொருள் இல்லை ,

இதழ்கள் பொய் சொல்லும் ,இமைகள் மெய் சொல்லும் ,
தெரியாதா , உண்மை தெரியாதா ?


காதல் விதைபோல மௌனம் மண்மூலம் ,
முளைக்காதா , மண்ணை துளைக்காதா ?


யார் சொல்வதோ, யார் சொல்வதோ ,
பதில் யார் சொல்வதோ , யார் சொல்வதோ ?


பனிகுடங்கள் மெல்ல உடைந்துவிட்டால் ,
உயிர் ஜனிக்கும் , உயிர் ஜனிக்கும் ,


மௌன குடங்கள் மெல்ல உடைந்துவிட்டால் ,
காதல் பிறக்கும் , காதல் பிறக்கும் ,


உள்ளத்தை மூடி மூடி தைத்தால் ,
கலை இல்லை , காதல் இல்லை ,

உள்ளங்கை போலே உள்ளம் வைத்தால் ,
பயம் இல்லை , பாரம் இல்லை ,

நாணல் காணமல் , மூடல் கொண்டாலும் ,
நனைக்காதா , நதி நனைக்காதா ?
கவனம் நீரோடு , கவிழ்ந்தே நின்றாலும் ,
திறக்காதா , கதிர் திறக்காதா ?

யார் சொல்வதோ , யார் சொல்வதோ ,
பதில் யார் சொல்வதோ , யார் சொல்வதோ ,

மொட்டு ஓன்று மலர்ந்திட மறுக்கும்,
முட்டும் தென்றல் தொட்டு தொட்டு திறக்கும்,
அது மலரின் தோல்வியா இல்லை காற்றின் வெற்றியா?
அது மலரின் தோல்வியா இல்லை காற்றின் வெற்றியா?

கல்லுக்குள்ளே சிற்பம் தூங்கி கிடக்கும்,
சின்ன உளி தட்டி தட்டி எழுப்பும்,
அது கல்லின் தோல்வியா இல்லை? உளியின் வெற்றியா?

யார் சொல்வதோ , யார் சொல்வதோ ,
பதில் யார் சொல்வதோ , யார் சொல்வதோ ?

Monday, August 22, 2011

மல்லிகை முல்லை

மல்லிகை முல்லை பொன்மொழிக்கிள்ளை
அன்புக்கோர் எல்லை உன்னைப்போல் இல்லை
பொன் வ‌ண்ண‌ ர‌தமேறி இம்மண்ணில் எங்கும் ஓடி
பொன் வ‌ண்ண‌ ர‌தமேறி இம்மண்ணில் எங்கும் ஓடி
நல் அன்பத்துணை தேடி நான் த‌ருவேன்
மல்லிகை முல்லை பொன்மொழிக்கிள்ளை

சூடிக் கொடுத்தாள் பாவை ப‌டித்தாள்
சுட‌ராக‌ என்னாலும் தமிழ் வானில் ஜொலித்தாள்
கோதை ஆண்டாள் தமிழை ஆண்டாள்
கோபால‌ன் இல்லாம‌ல் க‌ல்யாண‌ம் வேண்டாள்
கன்னிதமிழ் தேவி மைகண்ணண் அவ‌ள் ஆவி
தன் காத‌ல் ம‌ல‌ர் தூவி மாலையிட்டாள்

தோகை மீனாள் பூவையானாள்
சொக்கேச‌ன் துணையோடு ஊர்கோல‌ம் போனாள்
மாலை க‌ண்டாள் கோவில் கொண்டாள்
மாணிக்க‌ மூக்குத்தி ஒளிவீச‌ நின்றாள்
தென்றல் தொட்டு ஆட‌
கண் சங்கத்தமிழ் பாட
தன் மக்கள் வெள்ளம் கூட
காவல் கொண்டாள்
மல்லிகை முல்லை பொன்மொழிக்கிள்ளை
அன்புக்கோர் எல்லை உன்னைப்போல் இல்லை

மாலை சூடி வாழ்ந்த‌ வேளை வ‌ன‌வாச‌ம் போனாலும்
பிரியாத‌ சீதை
ராம‌நாமம் த‌ந்த‌ ராக‌ம் ந‌வ‌னாக‌ குக‌னாக‌
ஒரு வான‌ கீத‌ம்
மாம‌ன் என்று சொல்ல‌ ஒர் அண்ண‌ண் இல்லை அங்கே
அந்த‌ அண்ண‌ண் உண்டு இங்கே அள்ளி வ‌ழ‌ங்க‌