Sunday, December 18, 2011

கல்யாணமாலை கொண்டாடும் பெண்ணே

கல்யாணமாலை கொண்டாடும் பெண்ணே!
என் பாட்டைக் கேளு உண்மைகள் சொன்னேன்!
சுதியோடு லயம் போலவே,
இணையாகும் துணையாகும் சம்சார சங்கீதமே!
(கல்யாணமாலை)

வாலிபங்கள் ஓடும், வயதாகக்கூடும்,
ஆனாலும் அன்பு மாறாதது!
மாலையிடும் சொந்தம், முடிபோட்ட பந்தம்,
பிரிவென்னும் சொல்லே அறியாதது!
அழகான மனைவி, அன்பான துணைவி
அமைந்தாலே பேரின்பமே!
மடிமீது துயில சரசங்கள் பயில
மோகங்கள் ஆரம்பமே!
நல்ல மனையாளின் நேசம் ஒரு கோடி!
நெஞ்சம் எனும் வீணை பாடுமே தோடி!
சந்தோஷ சாம்ராஜ்யமே!
(கல்யாணமாலை)

கூவுகின்ற குயிலைக் கூட்டுக்குள் வைத்து,
பாடென்று சொன்னால் பாடாதம்மா!
தோகை மயில் தன்னைச் சிறை வைத்துப் பூட்டி,
ஆடென்று சொன்னால் ஆடாதம்மா!
நாள்தோறும் ரசிகன், பாராட்டும் கலைஞன்,
காவல்கள் எனக்கில்லையே!
சோகங்கள் எனக்கும், நெஞ்சோடு இருக்கும்,
சிரிக்காத நாளில்லையே!
துக்கம் சில நேரம் பொங்கி வரும்போதும்
மக்கள் மனம் போலே பாடுவேன் கண்ணே!
என் சோகம் என்னோடுதான்!

விழிகளில் ஒரு வானவில்

விழிகளில் ஒரு வானவில்
இமைகளை தொட்டு பேசுதே
இது என்ன புது வானிலை
மழை வெயில் தரும்

உன்னிடம் பார்க்கிறேன் நான் பார்க்கிறேன்
என் தாய்முகம் அன்பே
உன்னிடம் தோற்கிறேன் நான் தோற்கிறேன்
என்னாகுமோ இங்கே
முதன் முதலாய் மயங்குகிறேன்
கண்ணாடி போல தோன்றினாய்
என் முன்பு என்னை காட்டினாய்
கனா எங்கும் வினா

விழிகளில் ஒரு வானவில்
இமைகளை தொட்டு பேசுதே
இது என்ன புது வானிலை
மழை வெயில் தரும்

நீ வந்தாய் எ ந் வாழ்விலே
பூப்பூத்தாய் என் வேரிலே
நாளையே நீ போகலாம்
என் ஞாபகம் நீ ஆகலாம்
தேர் சென்ற பின்னாலே வீதி என்னாகுமோ
யார் இவன் யார் இவன்
நான் நேசிக்கும் கண்ணீர் இவன் நெஞ்சில்
இனம் புரியா உறவிதுவோ
என் தீவில் பூத்த பூவிது
என் நெஞ்சில் வாசம் தூவுது
மனம் எங்கும் மனம்

விழிகளில் ஒரு வானவில்
இமைகளை தொட்டு பேசுதே
இது என்ன புது வானிலை
மழை வெயில் தரும்

நான் உனக்காக பேசினேண்
யார் எனக்காக பேசுவார்
மௌனமாய் நான் பேசினேன்
கைகளில் மை பூசினேன்
நீ வந்த கனவெங்கே காற்றில் கை வீசினேன்
அன்பெனும் தூண்டிலை நீ வீசினால்
மீன் ஆகிறேன் அன்பே
உன் முன்பு தானடா இப்போது நான்
பெண்ணாகிறேன் இங்கே
தயக்கங்களால் திணறுகிறேன்
நில்லென்று சொன்ன போதிலும்
நில்லாமல் நெஞ்சம் ஓடுதே
இதோ உந்தன் வழி

தேடும் கண் பார்வை தவிக்க துடிக்க

தேடும் கண் பார்வை தவிக்க துடிக்க
சொன்ன வார்த்தை காற்றில் போனதோ
வெறும் மாயமானதோ...

தேடும் பெண் பாவை வருவாள் தொடுவாள்
கொஞ்ச நேரம் நீயும் காத்திரு
வரும் பாதை பார்த்திரு...

தேடும் கண் பார்வை தவிக்க...துடிக்க...

காண வேண்டும் சீக்கிரம்... என் காதல் ஓவியம்
வாராமலே என்னாவதோ... என் ஆசை காவியம்
வாழும் காலம் ஆயிரம் நம் சொந்தம் அல்லவா
கண்ணாளனே நல் வாழ்த்துகள் என் பாட்டில் சொல்லவா...
கனிவாய்...மலரே... உயிர் வாடும் போது ஊடலென்ன
பாவம் அல்லவா...

தேடும் பெண் பாவை வருவாள் தொடுவாள்

தேடி தேடி பார்க்கிறேன் என் கால்கள் ஓய்ந்ததே
காணாமலே இவ்வேளையில் என் ஆவல் தீருமோ
காற்றில் ஆடும் தீபமோ உன் காதல் உள்ளமே...
நீ காணலாம் இந்நாளிலே என் மேனி வண்ணமே
பிரிந்தோம்... இணைவோம்...
இனி நீயும் நானும் வாழ வேண்டும்
வாசல் தேடி வா...

தேடும் கண் பார்வை தவிக்க துடிக்க
தேடும் பெண் பாவை வருவாள் தொடுவாள்
சொன்ன வார்த்தை காற்றில் போகுமோ
வெறும் மாயமாகுமோ...

தேடும் கண் பார்வை தவிக்க... துடிக்க...

படம்: மெல்ல திறந்தது கதவு
இசை: MS விஸ்வநாதன், இளையராஜா
பாடியவர்கள்: SP பாலசுரமணியம், S ஜானகி

கண்ணாலே பேசி பேசி கொல்லாதே

கண்ணாலே பேசி பேசி கொல்லாதே
காதாலே கேட்டு கேட்டு செல்லாதே
காதல் தெய்வீக ராணி
போதை உண்டாகுதே நீ
கண்ணே , என் மனதை விட்டு துள்ளாதே

(கண்ணாலே )

பாசம் மீறி சித்தம் தாளம் போடுதே - உன்
பக்தன் உள்ளம் நித்தம் ஏங்கி வாடுதே
ஆசை வெட்கம் அறியாமல் ஓடுதே
என் அன்னமே உன் பின்னல் ஜடை ஆடுதே
காதல் தெய்வீக ராணி
போதை உண்டாகுதே நீ
கண்ணே , என் மனதை விட்டு துள்ளாதே

(கண்ணாலே )

பதுமை போல காணும் உந்தன் அழகிலே
நான் , படகு போல தத்தளிக்கும் நிலையிலே
மதுவை ஏந்தி கொந்தளிக்கும் மலரிலே
என் மதி மயங்கி வீழ்ந்தேன் உன் வலையிலே
காதல் தெய்வீக ராணி
போதை உண்டாகுதே நீ
கண்ணே , என் மனதை விட்டு துள்ளாதே

(கண்ணாலே )