Sunday, March 3, 2013

எனக்குப் பிடித்த பாடல் அது உனக்கும் பிடிக்குமே

எனக்குப் பிடித்த பாடல் அது உனக்கும் பிடிக்குமே
உன் மனது போகும் வழியை எந்தன் மனது அறியுமே
என்னைப் பிடித்த நிலவு அது உன்னை பிடிக்குமே
காதல் நோய்க்கு மருந்து தந்து நோயைக் கூட்டுமே
உதிர்வது பூக்களா? மனது வளர்த்த சோலையில் காதல் பூக்கள் உதிருமா?(2)


மெல்ல நெருங்கிடும் போது நீ தூரப் போகிறாய்
விட்டு விலகிடும் போது நீ நெருங்கி வருகிறாய்
காதலின் திருவிழா கண்களில் நட‌க்குதே
குழந்தையைப் போலவே இதயமும் தொலையுதே
வானத்தில் பறக்கிறேன்...மோகத்தில் மிதக்கிறேன்
காதலால் நானுமோ காற்றாடி ஆகிறேன்
எனக்குப் பிடித்த பாடல் அது உனக்கும் பிடிக்குமே
உன் மனது போகும் வழியை எந்தன் மனது அறியுமே
என்னைப் பிடித்த நிலவு அது உன்னை பிடிக்குமே
காதல் நோய்க்கு மருந்து தந்து நோயைக் கூட்டுமே

வெள்ளிக் கம்பிகளைப் போல ஒரு தூறல் போடுதோ
விண்ணும்,மண்ணில் வந்து சேர‌ அது பாலம் போடுதோ...ஓ
நீர்த்துளி நீந்தினால் நீ தொடும் ஞாபகம்
நீ தொட்ட இட‌மெல்லாம் வீணையின் தரிச‌னம்
ஆயிர‌ம் அருவியாய்,அன்பிலே நட‌க்கிறாய்
வேகம் போல எனக்குள்ளே மோக மழைக்குள் நனைகிறாய்
எனக்குப் பிடித்த பாடல் அது உனக்கும் பிடிக்குமே
உன் மனது போகும் வழியை எந்தன் மனது அறியுமே
என்னைப் பிடித்த நிலவு அது உன்னை பிடிக்குமே
காதல் நோய்க்கு மருந்து தந்து நோயைக் கூட்டுமே
உதிர்வது பூக்களா? மனது வளர்த்த சோலையில் காதல் பூக்கள் உதிருமா?
எனக்குப் பிடித்த பாடல் அது உனக்கும் பிடிக்குமே
உன் மனது போகும் வழியை எந்தன் மனது அறியுமே
பூ மலர்ந்தது பூமிக்குதானே
நாம் பிறந்தது வாழ்ந்திடதானே.
பாலை வனத்திலும் சோலை இல்லையா
பறவைக்கும் சிறு எறும்புக்கும் இன்பம் இருக்கும்
என்ன தயக்கம் மனமே.....
(பூ மலர்ந்தது)

முள்ளிலும் பூவொன்று இயற்கை அன்று கொடுத்தது.
பூவிலே முள்ளென்று மனித ஜாதி மறந்தது
வேர்கள் கொஞ்சம் ஆசை பட்டால் பாறையிலும் பாதையுண்டு
வெற்றி பெற ஆசைப்பட்டால் விண்ணில் ஒரு வேறு உண்டு
துயரமென்பது சுகத்தின் தொடக்கமே,
எரிக்கும் தீயை செறிக்கும் போது
சுகம் சுகம் சுபமே...
(பூ மலர்ந்தது)

கண்களே கண்களே கனவு காணத்தடையில்லை
நெஞ்சமே நினைவு ஒன்றும் சுமையில்லை
உள்ளம் மட்டும் ஓங்கி நின்றால் ஊனம் ஒரு பாவமில்லை
உன்னைச்சுற்றி வாழ்க்கையுண்டு ஓய்வுகொள்ள நேரமில்லை
கவலை என்பது மனதின் ஊணமே,
புதிய வாழ்க்கை தொடங்கும்போது
பூமி கைகள் தட்டுமே....
(பூ மலர்ந்தது) 

கவிதை பாடு குயிலே

பாடல்: கவிதை பாடு குயிலே
படம்: தென்றலே என்னைத்தொடு
நடிகர்கள்: மோகன், ஜெயஸ்ரீ
இசை: இளையராஜா


கவிதை பாடு குயிலே இனி வசந்தமே
இளமை ராகம் இதுவே இதுவே இனி இனிமையே
உதயமானதே புதிய கோலமே
விழிகள் யாவிலும் வர்ண ஜாலமே
நான் நினைத்த திருநாள் ஒருநாள் இதுதானே

கவிதை பாடு குயிலே இனி வசந்தமே
இளமை ராகம் இதுவே இதுவே இனி இனிமையே

நூறு வண்ணங்களில் சிரிக்கும் தூங்கும் புஷ்பங்களே
ஆசை என்னங்களில் மிதக்கும் அடியேனை வாழ்த்துங்களே
வானவெளியில் வலம் வரும் பறவை
நானும் அதுபோல் எனக்கென்ன கவலை
காற்று என்பக்கம் வீசும் போது
காலம் என் பெயரை பேசும் போது
வாழ்வு எனது வாசல் வருது
நேரம் இனிதாக யாவும் சுகமாக

கவிதை பாடு குயிலே இனி வசந்தமே
இளமை ராகம் இதுவே இதுவே இனி இனிமையே
உதயமானதே புதிய கோலமே
விழிகள் யாவிலும் வர்ண ஜாலமே
நான் நினைத்த திருநாள் ஒருநாள் இதுதானே

கவிதை பாடு குயிலே இனி வசந்தமே
இளமை ராகம் இதுவே இதுவே இனி இனிமையே

கோயில் சிற்பங்களை பழிக்கும்
அழகான பெண் சித்திரம்
கோடி மின்னல்களில் பிறந்து
ஒளி வீசும் நட்ச்சத்திரம்
கூட எனது நிழல் என வருமோ
நாளும் இனிய நினைவுகள் தருமோ
பாவை பெண் கொண்ட பாசம் என்ன
பார்வை சொல்கின்ற பாடம் என்ன
நீல மலராய் மேனி மலர
நாளூம் தடுமாற நெஞ்சம் இடம் மாற

கவிதை பாடு குயிலே இனி வசந்தமே
இளமை ராகம் இதுவே இதுவே இனி இனிமையே
உதயமானதே புதிய கோலமே
விழிகள் யாவிலும் வர்ண ஜாலமே
நான் நினைத்த திருநாள் ஒருநாள் இதுதானே

கவிதை பாடு குயிலே இனி வசந்தமே
இளமை ராகம் இதுவே இதுவே இனி இனிமையே
ரபப்பா பப்பா பப்பா பவ் பவ் பப்பா
ரபப்பா பவ் பவ் பவ் பவ் பப்பா

மரணம் என்னும் தூது வந்தது

மரணம் என்னும் தூது வந்தது
அது மங்கை என்னும் வடிவில் வந்தது
சொர்கமாக நான் நினைத்தது
இன்று நரகமாக மாறிவிட்டது

யாருக்காக இது யாருக்காக இந்த மாளிகை
வசந்த மாளிகை காதல் ஓவியம் கலைந்த மாளிகை
யாருக்காக இது யாருக்காக

கண்கள் தீண்டும் காதல் என்பது அது கண்ணில் நீரை வரவழைப்பது
பெண்கள் காட்டும் அன்பு என்பது நம்மை பித்தனாக்கி அலையவைப்பது

எழுதுங்கள் என் கல்லறையில் அவள் இரக்கம் இல்லாதவள் என்று
பாடுங்கள் என் கல்லறையில் இவன் பைத்தியக்காரன் என்று

யாருக்காக இது யாருக்காக இந்த மாளிகை
வசந்த மாளிகை காதல் ஓவியம் கலைந்த மாளிகை
யாருக்காக இது யாருக்காக