காற்று புதிதாய் வீச கண்டேன்
காதல் கவிதை பேச கண்டேன்
ஸ்நேகம் இனிதாய் சேர கண்டேன்
நான் கண்டேன்..
காலம் செய்யும் மாயம் கண்டேன்
கால்கள் நான்கை மாற கண்டேன்
உள்ளம் கையில் உலகம் கண்டேன்
நான் கண்டேன்..
(காற்று புதிதாய் வீச கண்டேன்..)
தொல்லைகளே இனி இல்லை என இளவேனில் ராகம் பாடும்
எல்லைகளே இனி இல்லை என திசை யாவும் கையில் சேரும்
புதிர் போல தோன்றினாலும் புது பாதை இன்பம் ஆகும்
இல நெஞ்சிலே இசை தென்றலே
அதை நான் கண்டேன்..
சுகம் நான் கண்டேன்..
(காற்று புதிதாய் வீச கண்டேன்..)
கொஞ்சுவதும் எனை மிஞ்சுவதும் சிறு குழந்தை போல தோன்றும்
அஞ்சுவதும் அதில் எஞ்சுவதும் இலவயதை தூளி ஆட்டும்
விளையாடும் அன்பினாலே நடை போட நாட்கள் பூக்கும்
உணதன்பிலே பல மின்னலே
அதை நான் கண்டேன்.. ஓஹ்..
எனை நான் கண்டேன்..
(காற்று புதிதாய் வீச கண்டேன்..)
Sunday, December 12, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment