Monday, August 22, 2011

மல்லிகை முல்லை

மல்லிகை முல்லை பொன்மொழிக்கிள்ளை
அன்புக்கோர் எல்லை உன்னைப்போல் இல்லை
பொன் வ‌ண்ண‌ ர‌தமேறி இம்மண்ணில் எங்கும் ஓடி
பொன் வ‌ண்ண‌ ர‌தமேறி இம்மண்ணில் எங்கும் ஓடி
நல் அன்பத்துணை தேடி நான் த‌ருவேன்
மல்லிகை முல்லை பொன்மொழிக்கிள்ளை

சூடிக் கொடுத்தாள் பாவை ப‌டித்தாள்
சுட‌ராக‌ என்னாலும் தமிழ் வானில் ஜொலித்தாள்
கோதை ஆண்டாள் தமிழை ஆண்டாள்
கோபால‌ன் இல்லாம‌ல் க‌ல்யாண‌ம் வேண்டாள்
கன்னிதமிழ் தேவி மைகண்ணண் அவ‌ள் ஆவி
தன் காத‌ல் ம‌ல‌ர் தூவி மாலையிட்டாள்

தோகை மீனாள் பூவையானாள்
சொக்கேச‌ன் துணையோடு ஊர்கோல‌ம் போனாள்
மாலை க‌ண்டாள் கோவில் கொண்டாள்
மாணிக்க‌ மூக்குத்தி ஒளிவீச‌ நின்றாள்
தென்றல் தொட்டு ஆட‌
கண் சங்கத்தமிழ் பாட
தன் மக்கள் வெள்ளம் கூட
காவல் கொண்டாள்
மல்லிகை முல்லை பொன்மொழிக்கிள்ளை
அன்புக்கோர் எல்லை உன்னைப்போல் இல்லை

மாலை சூடி வாழ்ந்த‌ வேளை வ‌ன‌வாச‌ம் போனாலும்
பிரியாத‌ சீதை
ராம‌நாமம் த‌ந்த‌ ராக‌ம் ந‌வ‌னாக‌ குக‌னாக‌
ஒரு வான‌ கீத‌ம்
மாம‌ன் என்று சொல்ல‌ ஒர் அண்ண‌ண் இல்லை அங்கே
அந்த‌ அண்ண‌ண் உண்டு இங்கே அள்ளி வ‌ழ‌ங்க‌

1 comment: