Wednesday, August 24, 2011

மழை வரும் அறிகுறி

மழை வரும் அறிகுறி, என் விழிகளில் தெரியுதே
மனம் இன்று நனையுதே இது என்ன காதலா ? சாதலா?
பழகிய காலங்கள், என் பார்வையில் விரியுதே
பாதைகள் நழுவுதே இது ஏனோ ஏனோ ?

உன் தோளில் சாயும்போது , உற்சாகம் கொள்ளும் கண்கள்
நீ எங்கேயெங்கே என்று உன்னை தேடித் தேடி பார்க்கிறது
உன்னோடு போகும் போது பூ பூக்கும் சாலையாவும்
நீ எங்கே என்று என்னை கேட்ட பின்பு வாடிடிடுதே

அறியாதொரு வயதில் விதைத்தது …ஒ ஒ ஒஒஹோஅதுவாகவே தானாய் வளர்ந்தது … ஓஒ
புதிதாய் ஒரு பூவும் பூக்கையில் ..ஒ ஓ ஓ ஓஹோ
அட யாரது யாரதை பறித்தது? ஒஹோஒ ஒஹோ .

உன் கால் தடம் சென்ற வழி பார்த்து நானும் வந்தேனே
அது பாதியில் தொலைந்ததடா

நான் கேட்டது அழகிய நேரங்கள் ஒ ஒ ஒஒஹோ
யார் தந்தது விழிகளில் ஈரங்கள் ஓஒ
நான் கேட்டது வானவில் மாயங்கள் .ஒ ஓ ஓ ஓஹோ
யார் தந்தது வழிகளில் காயங்கள்
இந்த காதலும் ஒரு வகை சித்ரவதைதான்
அது உயிருடன் எரிக்குதுடா! (மழை வரும் அறிகுறி)

உன் தோளில் சாயும்போது , உற்சாகம் கொள்ளும் கண்கள்
நீ எங்கே எங்கே என்று உன்னை தேடி தேடி பார்க்கிறது
உன்னோடு போகும் போது பூ பூக்கும் சாலையாவும்
நீ எங்கே என்று என்னை கேட்ட பின்பு வாடிடிடுதே

No comments:

Post a Comment