அந்தி நேரத் தென்றல் காற்று
அள்ளித் தந்தத் தா...லாட்டு
அந்தி நேரத் தென்றல் காற்று
அள்ளித் தந்தத் தாலாட்டு
தங்க மகன் வரவைக் கேட்டுத்
தந்தை உள்ளம் பாடும் பாட்டு
தங்க மகன் வரவைக் கேட்டுத்
தந்தை உள்ளம் பாடும் பாட்டு
- அந்தி நேரத் தென்றல் காற்று...
உயிர் கொடுத்தத் தந்தை இங்கே
உரு கொடுத்த அன்னை அங்கே
இன்ப துன்பம் எது வந்தாலும்
பங்கு கொள்ளும் சொந்தம் எங்கே?
தாலாட்ட அன்னை உண்டு!
சீராட்டத் தந்தை உண்டு!
இன்ப துன்பம் எது வந்தாலும்
பங்கு கொள்ள நண்பன் உண்டு!
ஒரு தாயின் பிள்ளை போல
உருவான சொந்தம் உண்டு!
வரும் காலம் யாவும் வெல்ல
இணைந்த கைகள் என்றும் உண்டு!
- அந்தி நேரத் தென்றல் காற்று...
உன் மகனைத் தோளில் கொண்டு
உரிமையோடு பாடுவதென்று
அந்நாளில் துணையாய் நின்று
அன்பு கொள்ள நானும் உண்டு!
தத்துப் பிள்ளை இவனைக் கண்டேன்
தாய்மை நெஞ்சம் நானும் கொண்டேன்!
பத்துத் திங்கள் முடிந்த பின்னே
முத்துப் பிள்ளை அவனைக் காண்பேன்!
உறங்காத விழியில் இன்று
ஒளி வந்து சேரக் கண்டேன்!
பரிவான நண்பன் தந்த
கனிவான தோள்கள் கண்டேன்!
அந்தி நேரத் தென்றல் காற்று...
Monday, July 13, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment