Sunday, July 18, 2010

தேன் தேன் தேன் உனை தேடி அலைந்தேன்

தேன் தேன் தேன் உனை தேடி அலைந்தேன்
உயிர் தீயை அளந்தேன் சிவந்தேன்
தேன் தேன் தேன் எனை நானும் மறந்தேன்
உனை காண பயந்தேன் கரைந்தேன்
என்னோவோ சொல்ல துணிந்தேன்
ஏதேதோ செய்ய துணிந்தேன்
உன்னோட சேரத்தானே நானும் அலைந்தேன்

அள்ள வரும் கையை ரசித்தேன்
ஆழ வரும் கண்ணை ரசித்தேன்
அடங்காமல் தாவும் உந்தன் அன்பை ரசித்தேன்
முட்ட வரும் பொய்யை ரசித்தேன்
மோத வரும் மெய்யை ரசித்தேன்
உறங்காமல் எங்கும் உந்தன் உள்ளம் ரசிப்பேன்

நீ சொல்லும் சொல்லை ரசித்தேன் இதழ் சொல்லாதத்தையும் ரசித்தேன்
நீ செய்யும் யாவும் ரசித்தேன் நித்தம் செய்யாதததையும் ரசித்தேன்
உன்னாலே தானே நானும் என்னை ரசித்தேன்



சேலையின் நிலவை அறிந்தேன்
காலிலே சிறகை அறிந்தேன்
கனவிலே காதல் என்று நேரில் அறிந்தேன்

திருடனே உன்னை அறிந்தேன்
திருடினாய் என்று அறிந்தேன்
இன்னும் நீ திருட தானே ஆசை அறிந்தேன்

என் பக்கம் உன்னை அறிந்தேன்
பல சிக்கல் உன்னால் அறிந்தேன்
ஆண் தென்றல் உன்னை அறிந்தேன்
அதில் சுவாசம் பெண்மை அறிந்தேன்

நீ நடமாடும் திராட்சை தோட்டம்
எதிரில் அறிந்தேன்

சின்னம்மா சிலககம்மா நில்லு நில்லு நில்லு

சின்னம்மா சிலககம்மா நில்லு நில்லு நில்லு
செல்லம்மா சிலையம்மா சொல்லு சொல்லு சொல்லு
சின்னம்மா சிலககம்மா நில்லு நில்லு நில்லு
செல்லம்மா சிலையம்மா சொல்லு சொல்லு சொல்லு

அம்மம்மா அழகம்மா அடி நெஞ்சில் யாரம்மா
விழியம்மா மொழியம்மா விருப்பம் தான் எவரம்மா

சின்னம்மா சிலககம்மா

ஜல் ஜலக்கு ஜலக்கு உன் கொஞ்சல்
சொல் எதுக்கு எதுக்கு விழி கெஞ்சல்
நீ சிரிக்க சிரிக்க கொட்டும் கிழிஞ்சல்
வெட்கம் ஒதுக்கு ஒதுக்கு அது இடைஞ்சல்

கண்ணாலே அனுப்பினா அஞ்சல்
இரவாக போனதென் மஞ்சள்
இனி உனக்கும் எனக்கும் முத்த காய்ச்சல்
அடி துவங்கு துவங்கு வெட்க கூச்சல்

வேயிலா தோட்டானே சூடு சூடு சூட
மழையாய் பட்டானே கொடு கொடு கொடை

யார் யாரோ அவன் யாரோ என் பேர் தான் கேட்பபரோ
என் பரொ உன் பரொ ஒன்றென்று அறிவாரோ
சின்னம்மா சிலககம்மா சின்னம்மா சிலககம்மா


உம்மா உம்மா அய்யோ கசக்கும்
சும்மா சும்மா கேட்டால் இனிக்கும்
காதல் கணக்கே வித்தியாசம்

சுடுமா சுடுமா நெருப்பை தீயே?
சுகமா சுகமா
காதல் கனவே உயிர் வாசம்

நீ உருகி வழிந்திடும் தங்கம்
உன்னை பார்த்த கண்ணில் ஆதங்கம்
உன் எடையும் இடையும் தான் கொஞ்சம்
உன் வீட்டில் உணவுக்கா பஞ்சம்

சின்னம்மா சிலககம்மா நில்லு நில்லு நில்லு
செல்லம்மா சிலையம்மா சொல்லு சொல்லு சொல்லு
சின்னம்மா சிலககம்மா நில்லு நில்லு நில்லு
செல்லம்மா சிலையம்மா சொல்லு சொல்லு சொல்லு

அம்மம்மா அழகம்மா அடி நெஞ்சில் யாரம்மா
விழியம்மா மொழியம்மா விருப்பம் தான் எவரம்மா


வெள்ளை இரவே இரவின் குளிரே
நெளியும் நதியெ நதியின் கரையே
நீயோ அழகின் ரசவாகம்

கொஞ்சல் மொழியே
மொழியின் உயிர் நீ
உரையா பனியே

நீ என் நூறு சதவிகிதம்
நீ பூக்கள் பொத்திய படுக்கை
உன் உதடு தேன்களின் இருக்கை
நின் உடலின் பயிழ்கிறென் கணக்கை
உனை பாட ஏதடி தணிக்கை

ஜல் ஜலக்கு ஜலக்கு உன் கொஞ்சல்
சொல் எதுக்கு எதுக்கு விழி கெஞ்சல்
நீ சிரிக்க சிரிக்க கொட்டும் கிழிஞ்சல்
வெட்கம் ஒதுக்கு ஒதுக்கு அது இடைஞ்சல்

கண்ணாலே அனுப்பினா அஞ்சல்
இரவாக போனதென் மஞ்சள்
இனி உனக்கும் எனக்கும் முத்த காய்ச்சல்
அடி துவங்கு துவங்கு வெட்க கூச்சல்

வேயிலா தோட்டானே சூடு சூடு சூட
மழையாய் பட்டானே கொடு கொடு கொடை

யார் யாரோ அவன் யாரோ என் பேர் தான் கேட்பபரோ
என் பரொ உன் பரொ ஒன்றென்று அறிவாரோ
சின்னம்மா சிலககம்மா சின்னம்மா சிலககம்மா

சின்னம்மா சிலககம்மா நில்லு நில்லு நில்லு
செல்லம்மா சிலையம்மா சொல்லு சொல்லு சொல்லு
சின்னம்மா சிலககம்மா நில்லு நில்லு நில்லு
செல்லம்மா சிலையம்மா சொல்லு சொல்லு சொல்லு

அம்மம்மா அழகம்மா அடி நெஞ்சில் யாரம்மா
விழியம்மா மொழியம்மா விருப்பம் தான் எவரம்மா

மருதாணி மருதாணி மருதாணி விழியில் ஏன்

மருதாணி மருதாணி மருதாணி விழியில் ஏன்
அடி போடி தீபாளி
கங்கை என்று கானலை காட்டும்
காதல் கானல் என்று கங்கை காட்டும்
வாழும் பயிற்க்கு தண்ணீர் வேண்டும்
காதல் கதைக்கும் கண்ணீர் வேண்டும்
மருதாணி விழியில் என் அடி போடி தீபாளி
ஆகாயம் மண் மீது சாயாது
நிஜமான காதல் தான் நிலையான பாடல் தான்
காதல் ஓசை எந்நாளும் ஓயாது

அவன் இதய வீட்டில் வாழும் அவள் தேகம் வெந்து போகும்
என அவன் அருந்திட மாட்டான் சூடும் நீரும் சூடு சோறும்
காதலி கை நகம் எல்லாம் பொக்கிஷம் போலே அவன் சேமிப்பன்
ஒருத்திக்காக வாழ்கிற ஜாதிஉணரவில்லை இன்னொரு பாதி

அவள் அவன் காதல் நெஞ்சில் கண்டாலே சிறு குற்றம்
அவன் நெஞ்சம் தாய் பால் போலேஎந்நாளும் பரிசுத்தம்
ஆத்திரம் நேத்திரம் மூட
பாலையும் கள்ளாய் அவள் பார்க்கிறாள்
ஆக மொத்தம் அவசர கோலம் அவளுக்கு இது காட்டிடும் காலம்

மருதாணி மருதாணி மருதாணி விழியில் ஏன்
அடி போடி தீபாளி
கங்கை என்று கானலை காட்டும்
காதல் கானல் என்று கங்கை காட்டும்
வாழும் பயிற்க்கு தண்ணீர் வேண்டும்
காதல் கதைக்கும் கண்ணீர் வேண்டும்

நெஞ்சம் எனும் ஊரினிலே

நெஞ்சம் எனும் ஊரினிலே
காதல் எனும் தெருவினிலே
கனவு எனும் வாசலிலே
என்னை விட்டு விட்டு போனாயே

வாழ்க்கை எனும் வீதியிலே
மனசு எனும் தேறினிலே
ஆசை எனும் போதையிலே
என்னை விட்டு விட்டு போனாயே

நான் தனியாய் தனியாய் நடந்தேனே
சிறு பனியாய் பனியாய் கரைந்தேனே
ஒரு நுறையாய் நுறையாய் உடைந்தேனே
காதலாலே

நெஞ்சம் எனும் ஊரினிலே
காதல் எனும் தெருவினிலே
கனவு எனும் வாசலிலே
என்னை விட்டு விட்டு போனாயே

சுடிதார் அணிந்து வந்த சொற்க்கமே

சுடிதார் அணிந்து வந்த சொற்க்கமே
என் மீது காதல் வந்தது
எப்போது எங்கு கொஞ்சம் நீ சொல்வாயா
நீ சொல்வாயா நீ சொல்வாயா

விழிகள் பார்த்து கொஞ்சம் வந்தது
விரல் சேர்த்து கொஞ்சம் வந்தது
முழு காதல் என்று வந்தது தெரியாதே
அது தெரியாதே அது தெரியாதே

உன் மேல் நான் கொண்ட காதல்
என்மேல் நீ கொண்ட காதல்
எதை நீ உயர்வாக சொல்வாயோ

போட பொல்லாத பையா
நம்மேல் நான் கொண்ட காதல்
அதை நீ ரெண்டாக பார்பாயா

உன் பேரை சொன்னாலே நான் திரும்பி பார்க்கிறேன்
உன் பேரை மட்டும் நான் நான் விரும்பி கேட்கிறேன்

இருவர் ஒன்றாக இணைந்து விட்டோம் இரண்டு பெயர் ஏனடி
உனக்குள் நான் என்னை தொலைத்து விட்டேன் உன்னையே கேளு நீ
அட உன்னை நான் மறந்த வேளையில் உன் காதல் மாறுமா
விடி காலை தாமரை பூவிது விண்மீனை பார்க்குமா

உன் மேல் நான் கொண்ட காதல்
என்மேல் நீ கொண்ட காதல்
எதை நீ உயர்வாக சொல்வாயோ

போட பொல்லாத பையா
நம்மேல் நான் கொண்ட காதல்
அதை நீ ரெண்டாக பார்பாயா

பலகோடி பெண்களிலே எதற்கு என்னை தேடினாய்
நான் தேடும் பெண்ணாக நீ தானே தோன்றினாய்
நரை கூடும் நாட்களிலே என்னை க் தோன்றுமா
அடி போ டீ காதலிலே நரை கூட தோன்றுமா

உன் கண்ணில் உண்டான காதல் இது
முடிவிலும் நிற்குமோ
என் நெஞ்சில் உண்டான காதல் இது
நெஞ்சை விட்டு போகுமா ?

உன் மேல் நான் கொண்ட காதல்
என்மேல் நீ கொண்ட காதல்
எதை நீ உயர்வாக சொல்வாயோ

போட பொல்லாத பையா
நம்மேல் நான் கொண்ட காதல்
அதை நீ ரெண்டாக பார்பாயா

சுடிதார் அணிந்து வந்த சொற்க்கமே
என் மீது காதல் வந்தது
எப்போது எங்கு கொஞ்சம் நீ சொல்வாயா
நீ சொல்வாயா நீ சொல்வாயா

விழிகள் பார்த்து கொஞ்சம் வந்தது
விரல் சேர்த்து கொஞ்சம் வந்தது
முழு காதல் என்று வந்தது தெரியாதே
அது தெரியாதே அது தெரியாதே

தங்கமகன் இன்று சிங்க நடை போட்டு

தங்கமகன் இன்று சிங்க நடை போட்டு
அருகில் அருகில் வந்தான்
ரெண்டு புறம் பற்றி எரியும் மெழுகாக
மங்கை உருகி நின்றாள்

தங்கமகன் இன்று சிங்க நடை போட்டு
அருகில் அருகில் வந்தான்
ரெண்டு புறம் பற்றி எரியும் மெழுகாக
மங்கை உருகி நின்றாள்
கட்டும் ஆடை என் காதலன் கண்டதும் நழுவியதே
வெட்கத் தாழ்ப்பாள் அது வேந்தனைக் கண்டதும் விலகியதே
ரத்தத்தாமரை முத்தம் கேட்குது வா... என் வாழ்வே வா

தங்கமகன் இன்று சிங்க நடை போட்டு
அருகில் அருகில் வந்தான்
ரெண்டு புறம் பற்றி எரியும் மெழுகாக
மங்கை உருகி நின்றாள்

சின்னக் கலைவாணி நீ வண்ணச் சிலை மேனி
அது மஞ்சம்தனில் மாறன் தலை வைக்கும் இன்பத் தலகாணி
ஆசைத் தலைவன் நீ நான் அடிமை மஹராணி
மங்கை இவள் அங்கம் எங்கும் பூச நீதான் மருதாணி
திறக்காத பூக்கள் வெடித்தாக வேண்டும்
தென்பாண்டித் தென்றல் திறந்தாக வேண்டும்
என்ன சம்மதமா............இன்னும் தாமதமா

தங்கமகன் இன்று சிங்க நடை போட்டு
அருகில் அருகில் வந்தான்
ரெண்டு புறம் பற்றி எரியும் மெழுகாக
மங்கை உருகி நின்றாள்

தூக்கம் வந்தாலே மனம் தலயணைத் தேடாது
தானே வந்து காதல் கொள்ளும் உள்ளம் ஜாதகம் பார்காது
மேகம் மழை தந்தால் துளி மேலே போகாது
பெண்ணின் மனம் ஆணில் விழ வேண்டும் விதிதான் மாறாது
என் பேரின் பின்னே நீ சேர வேண்டும்
கடல் கொண்ட கங்கை நிறம் மாற வேண்டும்
என்னை மாற்றி விடு.............இதழ் ஊற்றிக்கொடு

தங்கமகன் இன்று சிங்க நடை போட்டு
அருகில் அருகில் வந்தான்
ரெண்டு புறம் பற்றி எரியும் மெழுகாக
மங்கை உருகி நின்றாள்

தங்கமகன் இன்று சிங்க நடை போட்டு
அருகில் அருகில் வந்தான்
ரெண்டு புறம் பற்றி எரியும் மெழுகாக
மங்கை உருகி நின்றாள்
கட்டும் ஆடை உன் காதலன் கண்டதும் நழுவியதோ
வெட்கத் தாழ்ப்பாள் அது வேந்தனைக் கண்டதும் விலகியதோ
முத்தம் என்பதன் அர்த்தம் பழகிட வா என் வாழ்வே வா

புத்தம் புது காலை பொன்னிற வேளை

புத்தம் புது காலை
பொன்னிற வேளை
என் வாழ்விலே
தினந்தோறும் தோன்றும்
சுகராகம் கேட்கும்
எந்நாளும் ஆனந்தம்
(புத்தம்...)

பூவில் தோன்றும் வாசம்
அதுதான் ராகமோ
இளம் பூவை நெஞ்சில் தோன்றும்
அதுதான் தாளமோ
மனதின் ஆசைகள்
மலரின் கோலங்கள்
குயிலோசையின் பரிபாஷைகள்
அதிகாலையின் வரவேற்புகள்
(புத்தம்....)

வானில் தோன்றும் கோலம்
அது யார் போட்டதோ
பனி வாடை வீசும் காற்றின்
சுகம் யார் தந்ததோ
வயதில் தோன்றிடும்
நினைவில் ஆனந்தம்
வளர்ந்தாடுது இசைபாடுது
வழிந்தோடுது சுவைகூடுது
(புத்தம்...)

படம்: அலைகள் ஓய்வதில்லை
இசை: இளையராஜா
பாடியவர்: S ஜானகி
பாடலாசிரியர்: வைரமுத்து

உயிரிலே எனது உயிரிலே

உயிரிலே எனது உயிரிலே
ஒரு துளி தீயை உதறினாய்
உணர்கிறேன் எனது உணர்விலே
அணுவென உடைந்து சிதறினாய்
ஏன் என்னை மறுத்துப் போகிறாய்
கானல் நீரோடு சேர்கிறாய்
கொடுத்ததாய் சொன்ன இதயத்தை
திருப்பி நான் வாங்க மாட்டேனே....
(உயிரிலே..........)

அருகினில் உள்ள தூரமே
அலைகடல் தீண்டும் வானமே
நேசிக்க நெஞ்சம் ரெண்டு
போதாதா போதாதா நீ சொல்லு
நேசமும் ரெண்டாம் முறை
வாராதா கூடாதா நீ சொல்லு
இது நடந்திடக் கூடுமா
இரு துருவங்கள் சேருமா
உச்சரித்தே நீயும் விலக
தத்தளித்தே நானும் மருக
என்ன செய்வேனோ...?
(உயிரிலே...........)

ஏதோ ஒன்று என்னைத் தடுக்குதே
பெண்தானே நீ என்று முறைக்குதே
என்னுள்ளே காயங்கள்
ஆறாமல் தீராமல் நின்றேனே
விசிறியாய் உன் கைகள்
வந்தாலும் வாங்காமல் சென்றேனே
வா வந்து என்னை சேர்ந்திடு
என் தோள்களில் தேய்ந்திடு
சொல்ல வந்தேன்
சொல்லி முடித்தேன்
வரும் திசை பார்த்து இருப்பேன்
நாட்கள் போனாலும்.......
(உயிரிலே..........)

படம்: வேட்டையாடு விளையாடு
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்
பாடியவர்கள்: மகாலட்சுமி, ஸ்ரீநிவாஸ்

நிழலினை நிஜமும் பிரிந்திடுமா

நிழலினை நிஜமும் பிரிந்திடுமா
உடலின்றி உயிரும் வாழ்ந்திடுமா
கருவறை உனக்கும் பாரமா அம்மா
மீண்டும் என்னை ஒரு முறை சுமப்பாய் அம்மா

(நிழலினை)

நடமாடும் சாபமா நான் இங்கே இருக்க
விதி செய்த சதியா தெரியலம்மா
கடல் தூக்கும் அலையும் கடலில் தான் சேரும்
அது போல என்னையும் சேத்துக்கம்மா
உன் பிள்ளை என்று ஊர் சொல்லும் பொது
எனக்கே நான் யாரோ என்றாகி போனேன்
ஒத்த சொந்தம் நீயிருந்தால் போதுமம்மா
மொத்த பூமி எனக்கே தான் சொந்தமம்மா
பத்து மாசம் உள்ளிருந்தேன் பக்குவமா
பூமிக்கு நான் வந்ததென்ன குத்தமம்மா

திசை எல்லாம் எனக்கு இருளாகி கிடக்கு
எங்கேயோ பயணம் தொடருதம்மா
என்னோட மனசும் பழுதாகிப் போச்சு
சரி செய்ய வழியும் தெரியலம்மா
சூரியன் உடஞ்சா பகலில்ல அம்மா
ஆகாயம் மறஞ்சா அகிலமே சும்மா
என்ன சுத்தி என்னன்னமோ நடக்குதம்மா
கண்டதெல்லாம் கனவாகி போயிடுமா
தூக்கத்தில உன்னை நானும் தொலைச்சேன் அம்மா
தேடி தர தெய்வம் வந்து உதவிடுமா

(நிழலினை)

படம்: ராம்
பாடகர்: விஜய் ஜெசுதாஸ்
இசை: யுவன் சங்கர்ராஜா

செம்பூவே பூவே உன் மேகம் நான் வந்தால் ஒரு வழியுண்டோ

ஆண்: செம்பூவே பூவே உன் மேகம் நான் வந்தால் ஒரு வழியுண்டோ
பெண்: சாய்ந்தாடும் சங்கில் துளி பட்டாலும் முத்தாகிடும் முத்துண்டே
ஆண்: படை கொண்டு நடக்கும் மன்மதச் சிலையோ
பெண்: மன்னவன் விரலகள் பல்லவன் உளியோ
ஆண்: இமைகளும் உதடுகள் ஆகுமோ
பெண்: வெட்கத்தின் விடுமுறை ஆயுளின் வரைதானோ

(செம்பூவே பூவே)

ஆண்: அந்திச் சூரியனும் குன்றில் சாய மேகம் வந்து கச்சையாக காமன் தங்கும் மோகப் பூவில் முத்தக் கும்மாளம்
பெண்: தங்கத் திங்கள் நெற்றிப் பொட்டும் இட்டு வெண்ணிலாவின் கன்னம் தொட்டு நெஞ்சில் ஆடும் சுவாசச்சூட்டில் காதல் குற்றாலம்
ஆண்: தேன் தெளிக்கும் தென்றலாய் நின்னருகில் வந்து நான் சேலை நதியோரமாய் நீந்தி விளையாடவா
பெண்: நாளும் மின்னல் கொஞ்சும் தாழம்பூவைச் சொல்லி
ஆண்: ஆசைக் கேணிக்குள்ளே ஆடும் மீன்கள் துள்ளி
பெண்: கட்டிலும் கால்வலி கொள்ளாதோ கைவளை கைகளை கீறியதோ

(செம்பூவே பூவே)

பெண்: இந்த தாமரைப்பூ தீயில் இன்று காத்திருக்கு உள்ளம் நொந்து கண்கள் என்னும் பூந்தேன் தும்பி பாடிச் செல்லாதோ
ஆண்: அந்த காமன் அம்பு என்னைச் சுட்டு பாவை நெஞ்சின் நாணம் சுட்டு மேகலையின் நூலறுக்கும் சேலைப் பொன் பூவே
பெண்: விம்மியது தாமரை வண்டு தொடும் நாளிலோ பாவை மயில் சாயுதே மன்னவனின் மார்பிலோ
ஆண்: முத்தத்தாலே பெண்ணே சேலை நெய்வேன் கண்ணே
பெண்: நாணத்தாலோர் ஆடை சூடிக் கொள்வேன் நானே
ஆண்: பாயாகும் வழி சொல்லாதே பஞ்சணை புதையல் ரகசியமே

(செம்பூவே பூவே)

படம்: சிறைச்சாலை
பாடியவர்கள்: S.P.பாலசுப்ரமணியம், சித்ரா
வரிகள்: அறிவுமதி (இவரது முதல் பாடல்)
இசை: இளையராஜா

சின்னத் தாயவள் தந்த ராசாவே

சின்னத் தாயவள் தந்த ராசாவே
முள்ளிள் தோன்றிய சின்ன ரோசாவே

சின்னத் தாயவள் தந்த ராசாவே
முள்ளிள் தோன்றிய சின்ன ரோசாவே

சொல்லவா ஆராரோ
நம் சொந்தங்கள் யாராரோ
உந்தன் கண்ணில் வேண்டாம் நீரோ

சின்னத் தாயவள் தந்த ராசாவே
முள்ளிள் தோன்றிய சின்ன ரோசாவே

தாயழுதாளே நீ வர
நீ அழுதாயே தாய் வர
தேய்பிறை காணும் வெண்ணிலா
தேய்வது உண்டோ என் நிலா
உன்னை நானிந்த நெஞ்சில் வாங்கிட
மெத்தை போலுன்னை மெல்லத் தாங்கிட
விழி மூடாதோ

சின்னத் தாயவள் தந்த ராசாவே
முள்ளிள் தோன்றிய சின்ன ரோசாவே
சின்னத் தாயவள் தந்த ராசாவே
முள்ளிள் தோன்றிய சின்ன ரோசாவே


**

இசை: இளையராஜா
பாடல்: வாலி
பாடியவர்:எஸ்.ஜானகி
படம்: தளபதி

நீ கோபப்பட்டால் நானும் கோபப்படுவேன்

நீ கோபப்பட்டால் நானும் கோபப்படுவேன்
நீ பார்க்காவிட்டால் நானும் பார்க்கமாட்டேன்
நீ திட்டி முறைத்தால் நானும் திட்டி முறைப்பேன்
சண்டை பிடித்தால் நானும் சண்டை பிடிப்பேன்
நீ பேசாவிட்டால் நானும் பேசமாட்டேன்

நீ என்னை மறந்தால் மட்டும் உயிரை விடுவேன்
நீ கேட்காமல் போனாலும் கத்தி சொல்லுவேன்
Baby I Love You
நீ நிற்காமல் போனாலும் துரத்திச்சொல்லுவேன்
Baby I Love You

நீ பேசும் வார்த்தை கவிதை என்று விடமாட்டேன்
நீ பேரழகி என்று பொய்யை சொல்லமாட்டேன்
நீ குளிக்கும்போது எட்டி எட்டி பார்க்கமாட்டேன்
நீ எச்சில் செய்த எதையும் கேட்கமாட்டேன்
நீ ஒப்பனைகள் செய்யும்போது பார்க்கமாட்டேன்
நீ கனவில் வந்தால் கூட கண்ணால் காண மாட்டேன்
என் சுற்றும்பூமி நீதான் என்று சுத்தமாட்டேன்

நீ என்னை மறந்தால் மட்டும் உயிரை விடுவேன்
நீ கேட்காமல் போனாலும் கத்தி சொல்லுவேன்
Baby I Love You
நீ நிற்காமல் போனாலும் துரத்திச்சொல்லுவேன்
Baby I Love You

உன் கன்னக்குழியை முத்தங்களால் வீங்க வைப்பேன்
உன் நெஞ்சுக்குழியில் மீசை முடி நட்டுவைப்பேன்
உன்னை உப்பு மூட்டை கட்டிக்கொண்டு தூங்கவைப்பேன்
அடி புன்னகைக்கும் சத்தத்தில் நான் ஆறவைப்பேன்
அட சண்டே கூட காதலுக்கு வேலை வைப்பேன்
நீ வலி கொடுத்தாலும் தாங்கிக்கொள்வேன்

நீ என்னை மறந்தால் மட்டும் உயிரை விடுவேன்
நீ கேட்காமல் போனாலும் கத்தி சொல்லுவேன்
Baby I Love You
நீ நிற்காமல் போனாலும் துரத்திச்சொல்லுவேன்
Baby I Love You

படம்: வில்லு
இசை: தேவிஸ்ரீ பிரசாத்
பாடியவர்: சாகர்

மலரே மலரே மலரே மலரே முகவரி என்ன?

மலரே மலரே மலரே மலரே முகவரி என்ன?
உன் மனத்தில் மனத்தில் மனத்தில் உள்ள முதல் வரி என்ன?

குல்முஹர் மலரே குல்முஹர் மலரே கொல்லப் பார்க்காதே
உன் துப்பட்டாவில் என்னை கட்டி
தூக்கில் போடாதே தூக்கில் போடாதே தூக்கில் போடாதே
(குல்முஹர் மலரே..)

மலரின் தொழிலே உயிரை கொல்லுதல் இல்லையடி
மனிதன் உயிரை கொன்றால் அதன் பெயர் மலரே இல்லையடி
அதன் பெயர் மலரே இல்லையடி
(குல்முஹர் மலரே..)
(மலரே மலரே..)

உயிரை திரிகி உந்தன் கூந்தல் சூடிக்கொள்ளாதே
என் உதிரம் கொண்டு உதட்டு சாயம் பூசி கொள்ளாதே
விண்மீன் பறிக்க வழியில்லை என்று கண்களை பறிக்காதே
என் இரவை எரித்து குழைத்து குழைத்து கண் மை பூசாதே
என்னை விடவும் என்னை அறிந்தும் யார் நீ? என்று கேட்காதே
இருக்கும் கவிஞர்கள் இம்சை போதும் என்னையும் கவிஞன் ஆக்காதே
(குல்முஹர் மலரே..)

உடைந்த வார்த்தையில் உன் பெயர் சொல்லி உடனே ஓடுகிறாய்
என் ரத்த குழாயில் புகுந்து கொண்டு சத்தம் போடுகிறாய்
கண்ணாடி நெஞ்சில் கல்லை எறிந்து கலகம் மூட்டுகிறாய்
இன்று இந்தரை மணிக்குள் காதல் வருமென அறிகுறி காட்டாதே
மௌனம் என்பது உறவா பகையா வயது தீயில் வாட்டு கிறாய்
ஏற்கனவே மனம் எரிமலை தானே ஏனடி பெட்ரோல் ஊற்றுகிறாய்
ஏனடி பெட்ரோல் ஊற்றுகிறாய்
(மலரே மலரே..)

மலரே மலரே குல்முஹர் மலரே கொல்லப் பார்க்காதே
உன் துப்பட்டா வில் என்னை கட்டி
தூக்கில் போடாதே தூக்கில் போடாதே
தூக்கி எரியாதே........ தூக்கில் போடாதே

முகவரி என்ன?
முகவரி என்ன?
முகவரி என்ன?
தூக்கில் போடாதே

முகவரி என்ன?
முகவரி என்ன?
முகவரி என்ன?
தூக்கில் போடாதே

படம்: மஜுனு
இசை: ஹாரீஸ் ஜெயராஜ்
பாடியவர்கள்: ஹரிஹரன், திப்பு

தமிழென்றால் நான் ஒரு தமிழன்டா

தமிழென்றால் நான் ஒரு தமிழன்டா
எனக்கு பலம் என் இரசிகன்டா
கெட்டவன்னு பேரெடுத்த நல்லவன்டா
என் வெற்றிக்கு காரணம் ஆண்டவன்டா
(தமிழென்றால்..)

படைபலம் விட்டவன்டா
தலைகனம் விட்டவன்டா
படைபலம் விட்டவன்டா
தலைகனம் விட்டவன்டா
தப்புதண்டா எப்பவுமே பண்ணாதவன்டா
மூக்குறுத்து எட்டுபோல்
எட்டுத்திசை மக்களெல்லாம்
எப்போதும் என்னோடுதான்

கூட்டம் கூட்டம் கூட்டம்
இது தமிழுக்கு வருகிற கூட்டம்
ஏ ஆட்டம் ஆட்டம் ஆட்டம்
சிலம்பரசனின் சிலம்பாட்டம்

ஏ கூட்டம் கூட்டம் கூட்டம்
இது தமிழுக்கு வருகிற கூட்டம்
ஏ ஆட்டம் ஆட்டம் ஆட்டம்
சிலம்பரசனின் சிலம்பாட்டம்
(தமிழென்றால்..)

சிலம்பாட்டம் பண்ணது இதோடா இதோடா
சிரிப்பழகு கள்ளரு இதோடா இதோடா
ஒஹோ ஓஹோ
புதிராட்டம்
விளையாட்டும்
பனிபோல ஓளிவீசும்
சீறும் சிறுத்தைப்போல வாழும் எங்கள் தங்க சிங்கமே
சீறும் சிறுத்தைப்போல வாழும் எங்கள் தங்க சிங்கமே

கிழக்கும் மேற்கும் விடியும் ரொம்பப்பிடிச்சா
பாலும் மண்ணும் அதிரும் வீசும் வெடிச்சா
விரல சூப்பும் வயசில் புக்கப்படிச்சேன்
விவரம் தெரிஞ்ச பிறது சொல்லி அடிச்சேன்
ஆ வம்புத்தும்பு சண்டைக்குத்தான் வரமாட்டேன்டா
நீ வாய்கொழுப்பா சவால்விட்டா விடமாட்டேன்டா
அட சும்மா இருக்கும் சங்கு இப்ப ஊதாதீங்க
இத ஊதிப்புட்டா தூள் பறக்கும் மோதாதீங்க
கோடை வெயிலா கோபம் இருக்கும்
வாடை குளிரா வாஞ்சி இருக்கும்
இரண்டும் உண்டு இங்கேதான்

தன்னா நன்னானே… தன்னா நன்னானே…
குலவ பாடுங்கடி
புடிச்சு ஆடுங்கடி
தமிழு வெயிச்சதுன்னு மாலைப்போடுங்கடி
வீரமகன்தான் இவன் வித்தையெல்லாம் கத்தவன்
சூரமகன் தான் மனம் சுத்தமான உத்தமன்
நம்மாளு வாயேன்டி ஆரத்தி சுத்தேன்டி
நம்மாளு நூறாண்டு வாழ

உறவு முறையே எனக்கு உலகம்னுதான்
உலக தமிழன் எனக்கு அண்ணன் தம்பிதான்
தலைவா இதுதான் எனக்கு சொல்லிக்கொடுத்தான்
தனக்கு பிடிச்ச தமிழன் அள்ளிக்கொடுப்பான்
என்ன பெத்தவுங்க எப்பவுமே சொன்னதில்ல
அவங்க போட்டு வச்ச கோட்டை தாண்டி ஜெயிச்சதில்ல
நான் மத்தவங்க சொல்லுபடி வாழும் பிள்ளை
இந்த மண்ணுக்குள்ள வானத்த நான் விட்டதில்ல
தமிழா தமிழா தலைய நிமிரு
தமிழன் இவன் தான் ஏறும் திமிரு
மண்ணின் மைந்தன் நாமதான்….

கூட்டம் கூட்டம் கூட்டம்
இது நம்ம தமிழரசனின் கூட்டம்
ஏ ஆட்டம் ஆட்டம் ஆட்டம்
சிலம்பரசனின் சிலம்பாட்டம்

கூட்டம் கூட்டம் கூட்டம்
இது நம்ம தமிழரசனின் கூட்டம்
ஏ ஆட்டம் ஆட்டம் ஆட்டம்
சிலம்பரசனின் சிலம்பாட்டம்
(தமிழென்றால்..)

படம்: சிலம்பாட்டம்
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்: ஷங்கர் மகாதேவன்

முஸ்தபா முஸ்தபா டோண்ட் வோர்ரி முஸ்தபா

முஸ்தபா முஸ்தபா டோண்ட் வோர்ரி முஸ்தபா
காலம் நம் தோழன் முஸ்தபா
டே பை டே டே பை டே
வாழ்க்கைப் பயணம் டே பை டே
மூழ்காத ஷிப்பே ஃபிரண்ட்ஷிப்பா
(முஸ்தபா..)

ஜூன் பிறக்கும் ஜூலை பிறக்கும்
சீனியருக்கும் ஜூனியருக்கும்
கல்லூரிச் சாலை எங்கும் ராக்கிங் நடக்கும்
ஸ்டூடண்ஸ் மனம் ஒரு நந்தவனமே
ரோஜா இருக்கும் முள்ளும் இருக்கும்
நட்புக்கு ராக்கிங் கூட பாதை வகுக்கும்

நண்பன் ஒருவன் வந்த பிறகு
விண்ணை தொடலாம் உந்தன் சிறகு
வாணுக்கும் எல்லை உண்டு நட்புக்கில்லையே
இன்பம் வரலாம் துன்பம் வரலாம்
நண்பன் ஒருவன் பங்கு பெறலாம்
கல்லூரி நட்புக்கில்லை முற்றுப்புள்ளியே
(முஸ்தபா..)

இங்கு பறக்கும் வண்ணப் பறவை
எங்கு இருந்தோ வந்த பறவை
கல்லூரி மண்தான் எங்கள் வேடந்தாங்கல்
கன்னி மலர்கள் கூடப் படிக்கும்
காளை மனதில் சாரல் அடிக்கும்
கல்லூரி சாலை எங்கள் கொடக்கானல்

கல்வி பயிலும் காலம் வரையில்
துள்ளித் திரியும் எங்கள் விழியில்
கண்ணீரைக் கண்டதில்லை தென்றல் சாட்சி
நண்பன் பிரிந்து ஊர் திரும்பும்
நாளில் மட்டும்தான் நீர் அரும்பும்
கண்ணீரில்தானே எங்கள் ஃபேர்வல் பார்ட்டி
(முஸ்தபா..)

படம்: காதல் தேசம்
இசை: AR ரஹ்மான்
பாடியவர்: AR ரஹ்மான்
வரிகள்: வாலி

ஓ ஆயியே யியாயியே யியாயியே

ஓ ஆயியே யியாயியே யியாயியே
தூவும் பூமாலை நெஞ்சிலே
பூவாசமே ஸ்வாசமே வாசமே
வந்து மையல் கொண்டது என்னிலே

நெஞ்சுக்குள் நுழைந்து மூச்சுக்குள் அலைந்து
கண்ணுக்குள் மலர்கின்ற கனவு நீ
என் கையில் வலைந்து என்மீது மீதந்து
சாலையில் நடக்கின்ற நிலவு நீ

நீயும் நீயும் அடி நீதானா
நீல நீல நிற தீதானா
தீயில் தீயில் விழ தித்திக்கின்றேன் நாந்தானா
(நீயும்..)
(ஓ ஆயியே..)

ஒரு கண்ணில் ஒரு கண்ணில் அமுதமும்
மறுக்கண்ணில் மறுக்கண்ணில் மதுரமும்
சுமக்கின்ற சுமக்கின்ற அழகியவளே
ஒரு கையில் ஒரு கையில் அகங்களும்
மறு கையில் மறு கையில் சுகங்களும்
எனக்குள்ளே கொடுக்கின்ற இனியவனே

இதழ் பூவென்றால் அதில் தேன் எங்கு
இங்கு பூவேதான் தேன் தேன் தேன் தேன் தே
ஊஹோஹுஹோ..
(ஓ ஆயியே..)

இமைக்காத இமைக்காத கண்களும்
எனக்காக எனக்காக வேண்டி நீ
உன்னைக்கண்டு உன்னைக்கண்டு ரசித்தேனே
முதல் முத்தம் முதல் முத்தம் தந்ததும்
இதழ் முத்தம் இதழ் முத்தம் என்றதும்
அதை எண்ணி அதை எண்ணி இனித்தேனே

சுடும் பூங்காற்றே சுட்டு போகாதே
இனிவானிங்கே மழைச்சாரல் பூவாய்
(ஓ ஆயியே..)

படம்: அயன்
இசை: ஹாரீஸ் ஜெயராஜ்
பாடியவர்கள்: சின்மாயி, பென்னி டயால், ஹரிசரண்

முதற்கனவே முதற்கனவே மறுபடி ஏன் வந்தாய்

முதற்கனவே முதற்கனவே மறுபடி ஏன் வந்தாய்
நீ மறூபடி ஏன் வந்தாய்

முதற்கனவே முதற்கனவே மறுபடி ஏன் வந்தாய்
நீ மறூபடி ஏன் வந்தாய்
விழி திறந்ததும் மறுபடி கனவுகள் வருமா வருமா?
விழி திறக்கையில் கனவென்னை துறத்துவது நிஜமா நிஜமா?

முதற்கனவு முதற்கனவு மூச்சுள்ள வரையில் வருமல்லவா?
கனவுகள் தீர்ந்து போனால் வாழ்வில்லை அல்லவா?
கனவல்லவே கனவல்லவே கண்மணி நானும் நிஜம் அல்லவா?
சத்தியத்தில் உடைத்த காதல் சாகாது அல்லவா?
(முதற்கனவே..)

எங்கே எங்கே நீ எங்கே என்று காடு மேடு தேடி ஓடி
இரு விழி இரு விழி தொலைத்து விட்டேன்
இங்கே இங்கே நீ வருவாய் என்று சின்ன கண்கள் சிந்துகின்ற
துளிகளில் துளிகளில் உயிர் வளர்ப்பேன்
தொலைந்த என் கண்களை பார்ஹ்த்டதும் கொடுத்து விட்டாய்
கண்களை கொடுத்து இதயத்தைஅ எடுத்துவிட்டாய்
இதயத்தை தொலைததற்காக என் ஜீவன் எடுக்கிறாய்
(முதற்கனவே..)

ஊடல் வேண்டாம் ஓடல்கள் வேண்டாம்
ஓசையோடு நாதம் போல உயிரிலே உயிரிலே கலந்து விடு
கண்ணீர் வேண்டாம் காயங்கள் வேண்டாம்
ஆறு மாத பிள்ளை போல மடியிலே மடியிலே உறங்கிவிடு
நிலா வரும் நேரம் நட்சத்திரம் தேவையில்லை
நீ வந்த நேரம் நெஞ்சில் ஒரு ஊடல் இல்லை
வண்ண பூக்கள் வேர்க்கும் முன்னே வரச்சொல்லு தென்றலை
வரச்சொல்லு தென்றலை

தாமரையே தாமரையே நீரில் ஒளியாதே நீ நீரில் ஒளியாதே
தினம் தினம் ஒரு சூரியன் போல வருவேன் வருவேன்
அதினம் உன்னை ஆயிரம் கையால் தொடுவேன் தொடுவேன்
விண்ணில் நீயும் இருந்துக்கொண்டே விர்ல் நீட்டி திறக்கிறாய்
மரங்கொத்தியே மரங்கொத்தியே மனதை கொத்தி துலையிட்உவாய்
உள்ளத்துக்குள் விளக்கடித்து உன் காதல் எழுப்புவாய்
தூங்கும் காதல் எழுப்புவாய்
தூங்கும் காதல் எழுப்புவாய்
நீ தூங்கும் காதல் எழுப்புவாய்
தூங்கும் காதல் எழுப்புவாய்

படம்: மஜுனு
இசை: ஹாரீஸ் ஜெயராஜ்
பாடியவர்கள்: ஹரிஷ் ராகவேந்திரா, பாம்பே ஜெயஸ்ரீ

காதல் யோகி காதல் யோகி ஹோய் ஹோய்

காதல் என்னும் தேன் குடித்தால் பைத்தியம் பிடிக்கும்
காதல் தேன் என்னை குடித்தால் என்ன தான் நடக்கும்
போதை தந்து தெளிய செய்துஹ்
ஞானம் தருவது காதல் தான்

காதல் யோகி காதல் யோகி ஹோய் ஹோய்
காதல் யோகி காதல் யோகி ஹோய் ஹோய்

நான் காதல் மதுவை குடித்துவிட்டேன்
கிண்ணம் உடையும் நானே உடைந்துவிட்டேன்
ஒரு நொடியில் நானே ஞானம் அடைந்துவிட்டேன்
காதல் யோகி காதல் யோகி ஹோய் ஹோய்
காதல் யோகி காதல் யோகி ஹோய் ஹோய்
(நான் காதல்..)
ஒரு காதல் வந்தால் போகி போகி
காதல் போனால் யோகி யோகி காதல் யோகி
காதல் யோகி காதல் யோகி ஹோய் ஹோய்
காதல் யோகி காதல் யோகி ஹோய் ஹோய்
காதல் யோகி காதல் யோகி ஹோய் ஹோய்

நீ காதல் மதுவை குடித்துவிட்டாய்
அந்த மதுவுக்கு மனசை தொலைத்து விட்டாய்
அந்த மதுவுக்கு மனசை தொலைத்து விட்டாய்
ஒரு நொடியில் நானே ஞானம் அடைந்துவிட்டேன்
ஒரு காதல் வந்தால் போகி போகி
காதல் போனால் யோகி யோகி காதல் யோகி
ஏ காதல் யோகி

இவன் யோகி ஆனது ஏனோ
இவன் யோகி ஆனது ஏனோ
அதை இன்று உறைத்திடவானோ
இல்லை நின்று விழுங்கிவிடுவானோ
ஒரு சிறு கிளி பார்த்தேன் வானத்திலே
மனம் சிக்கி கொண்டதே சிறகினிலே
மனம் சிக்கி கொண்டதே சிறகினிலே
நான் வானத்தில் ஏறிய நேரத்திலே
கிளி வண்ணம் மறைந்தது மேகத்திலே
நான் வானம் என்ற ஒன்றில் இன்று
காட்டில் வாழும் காதல் யோகி ஆனேனே
ஏ காதல் யோகி

காதலில் சொந்தங்கள் வளர்த்தேன் பந்தம் அறுத்தேன்
ஓ நான் என்னையும் மனதையும் தொலைத்தேன்
மனம் தொலைந்தும் காதலை தொலைக்கவில்லை
அட உன்னை போன்ற யோகி யாரும் பிறக்கவில்லை
அட உன்னை போன்ற யோகி யாரும் பிறக்கவில்லை
ஓ மனம் தொலைந்தும் நினைவுகள் மறக்கவில்லை
அவை தொலைந்தால் உயிர் எனக்கு இல்லை
நான் காதல் மட்டும் பற்றி கொண்டு
கானும் உலகம் விட்ட யோகி ஆனேனே
ஏ காதல் யோகி

படம்: தாளம்
இசை: AR ரஹ்மான்
பாடியவர்கள்: TL மகாராஜன், அனுராதா ஸ்ரீராம்

கோடு போட்டா கொன்னு போடு

கோடு போட்டா கொன்னு போடு
வேலி போட்டா வெட்டி போடு
நேத்துவரைக்கும் உங்க சட்டம் இன்னைக்கிருந்து எங்க சட்டம்
கோடு போட்டா கொன்னு போடு
வேலி போட்டா வெட்டி போடு
வில்லப் போல வளஞ்ச கூட்டம்
வேலப் போல நிமிர்ந்து விட்டோம்

சோத்துல பங்கு கேட்டா அட எலையப்போடு எலைய
சொத்துல பங்கு கேட்டா அவன் தலைய போடு தலைய
ஊரான் வீட்டு சட்டத்துக்கு ஊரு நாடு மசியாது
மேகம் வந்து சத்தம் போட்டா ஆகாயம்தான் கேக்காது
பாட்டன் பூட்டன் பூமிய யாரும் பட்டா போடக் கூடாது

பாம்பக் கூடப் பழகி பசும் பால ஊத்தும் சாதி
தப்பு தண்டா செஞ்சா அட அப்ப தெரியும் சேதி
கள்ளிக் காட்டுப் புள்ளத்தாச்சி கல்ல பெத்த வீரனடா
ஜல்லிக்கட்டு மாடு கிழிச்சா சரியும் குடலே மாலையடா
செத்த கெழவன் எழுதிவெச்ச ஒத்த சொத்து வீரமடா

கோடு போட்டா கொன்னு போடு
வேலி போட்டா வெட்டி போடு

எங்க காத்து மீன்சுட்ட வாசம் அடிக்கும்
எங்க தண்ணி எரி சாராயம் போல் ஒரைக்கும்
வத்திப் போன உசுரோட வாழ்வானே சம்சாரி
ஒரு சப்பாத்திக் கள்ளி வாழ வேணாமே மும்மாரி
எட்டுக்காணி போனா அட எவனும் ஏழை இல்ல
மானம் மட்டும் போனா நீ மய்க்கா நாளே ஏழ
மனைவி மாதா மட்டும் இல்ல மண்ணும் கூட மானம்தான்
சீயான் காட்டத் தோண்டிப் பாத்தா செம்மண் ஊத்து ரத்தம்தான்

கோ கோ கோ கோடு போட்டா கொன்னு போடு
வேலி போட்டா வெட்டி போடு
நேத்துவரைக்கும் உங்க சட்டம்
இன்னைக்கிருந்து எங்க சட்டம்

கோடு போட்டா கொன்னு போடு
வேலி போட்டா வெட்டி போடு
நேத்துவரைக்கும் உங்க சட்டம்
நேத்துவரைக்கும் உங்க சட்டம்
நேத்துவரைக்கும் உங்க சட்டம்
இன்னைக்கிருந்து எங்க சட்டம்

படம் : ராவணன்
இசை : ஏ.ஆர்.ரஹ்மான்
பாடல் வரிகள் : வைரமுத்து
பாடியவர் : பென்னி தயால்

விடை கொடு எங்கள் நாடே

விடை கொடு எங்கள் நாடே
கடல் வாசல் தெளிக்கும் வீடே
பனை மர காடே பறவைகள் கூடே
மறுமுறை ஒரு முறை பார்ப்போமா
உதட்டில் புன்னகை புதைத்தோம்
உயிரை உடம்புக்குள் புதைத்தோம்
வெறும் கூடுகள் மட்டும் ஊர்வலம் போகின்றோம்
(விடை கொடு..)

கந்தல் ஆனாலும் தாய் மடி போல்
ஒரு சுகம் வருமா வருமா
கந்தல் ஆனாலும் தாய் மடி போல்
ஒரு சுகம் வருமா வருமா
சொர்கம் சென்றாலும் சொந்த ஊர் போல்
ஒரு சுதந்திரம் வருமா வருமா
கண் திறந்த தேசம் அங்கே
கண் மூடும் தேசம் எங்கே
கண் திறந்த தேசம் அங்கே
கண் மூடும் தேசம் எங்கே

பிரிவோம் நதிகலே பிழைத்தால் வருகிறோம்
மீண்டும் தாயகம் அழைத்தால் வருகிறோம்
கண்ணீர் திரையில் பிறந்த மண்ணை
கடைசியாக பார்க்கின்றோம்
(விடை கொடு..)

எங்கள் சங்கீதம் பிள்ளையின் அழுகையிலே தொலைத்தோம்
எங்கள் சங்கீதம் பிள்ளையின் அழுகையிலே தொலைத்தோம்
எங்கள் இல்லம் திங்கள் வெடிகுண்டு புதையிலே புதைத்தோம்
முன் நிலவில் மலரில் கிடந்தோம்
பின் இரவில் முள்ளில் கிழிந்தோம்

கடல் நீர் பறவை தான் இருந்தால் சந்திப்போம்
வானமே மலைகளே வாழ்ந்தால் சந்திப்போம்
தலையில் கொஞ்சம் நெஞ்சில் அதிகம்
சுமைகள் சுமந்து போகின்றோம்
(விடை கொடு..)

படம்: கன்னத்தில் முத்தமிட்டால்
இசை: AR ரஹ்மான்
பாடியவர்கள்: AR ரெஹனா, பால்ராம், ஃபெபி மணி, MS விஸ்வநாதன்
வரிகள்: வைரமுத்து

உசுரே போகுதே உசுரே போகுதே

இந்த பூமியில எப்ப வந்து நீ பொறந்த
என் புத்திக்குள்ள தீப்பொறிய நீ வெதச்ச
அடி தேக்கு மர காடு பெருசுதான்
சின்ன தீக்குச்சி உசரம் சிறுசு தான்
அடி தேக்கு மர காடு பெருசுதான்
சின்ன தீக்குச்சி உசரம் சிறுசு தான்
ஒரு தீக்குச்சி விழுந்து துடிக்குதடி
கருந்தேக்கு மரக்காடு வெடிக்குதடி

உசுரே போகுதே உசுரே போகுதே
உதட்ட நீ கொஞ்சம் சுழிக்கயில
ஓ.. மாமன் தவிக்குறேன்
மடிப்பிச்சை கேக்குறேன்
மனசத் தாடி என் மணிக்குயிலே
அக்கரைச் சீமையில் நீ இருந்தும்
ஐவிரல் தீண்டிட நினைக்குதடி
அக்கினிப் பழமுன்னு தெரிஞ்சிருந்தும்
அடிக்கடி நாக்கு துடிக்குதடி

உடம்பும் மனசும் தூரம் தூரம்
ஒட்ட நினைக்கேன் ஆகல
மனசு சொல்லும் நல்ல சொல்ல
மாய உடம்பு கேக்கல
தவியா தவிச்சு
உசிர் தடம் கெட்டுத் திரியுதடி
தைலாங்குருவி
என்ன தள்ளி நின்னு சிரிக்குதடி
இந்த மம்முதக் கிறுக்கு தீருமா
அடி மந்திரிச்சு விட்ட கோழி மாறுமா
என் மயக்கத்த தீத்து வச்சு மன்னிச்சிருமா

சந்திரனும் சூரியனும்
சுத்தி ஒரு கோட்டில் வருகுதே
சத்தியமும் பத்தியமும்
இப்ப தலை சுத்தி கெடக்குதே

உசுரே போகுதே உசுரே போகுதே
உதட்ட நீ கொஞ்சம் சுழிக்கயில
ஓ.. மாமன் தவிக்குறேன்
மடிப்பிச்சை கேக்குறேன்
மனசத் தாடி என் மணிக்குயிலே
அக்கரைச் சீமையில் நீ இருந்தும்
ஐவிரல் தீண்டிட நினைக்குதடி
அக்கினிப் பழமுன்னு தெரிஞ்சிருந்தும்
அடிக்கடி நாக்கு துடிக்குதடி

இந்த உலகத்தில் இது ஒண்ணும் புதுசில்ல
ஒண்ணு ரெண்டு தப்பி போகும் ஒழுக்கத்தில
விதி சொல்லி வழி போட்டான் மனுசப்புள்ள
விதிவிலக்கில்லாத விதியுமில்ல

எட்டயிருக்கும் சூரியன் பாத்து
மொட்டு விரிக்குது தாமரை
தொட்டு விடாத தூரம் இருந்தும்
சொந்த பந்தமோ போகல
பாம்பா விழுதா ஒரு பாகுபாடு தெரியலையே
பாம்பா இருந்தும் நெஞ்சு பயப்பட நினைக்கலயே
என் கட்டையும் ஒரு நாள் சாயலாம்
என் கண்ணுல உன் முகம் போகுமா
நான் மண்ணுக்குள்ள
உன் நெனப்பு மனசுக்குள்ள
சந்திரனும் சூரியனும்
சுத்தி ஒரு கோட்டில் வருகுதே
சத்தியமும் பத்தியமும்
இப்ப தலை சுத்தி கெடக்குதே

உசுரே போகுதே உசுரே போகுதே
உதட்ட நீ கொஞ்சம் சுழிக்கயில
ஓ.. மாமன் தவிக்குறேன்
மடிப்பிச்சை கேக்குறேன்
மனசத் தாடி என் மணிக்குயிலே
அக்கரைச் சீமையில் நீ இருந்தும்
ஐவிரல் தீண்டிட நினைக்குதடி
அக்கினிப் பழமுன்னு தெரிஞ்சிருந்தும்
அடிக்கடி நாக்கு துடிக்குதடி

உசுரே போகுதே உசுரே போகுதே
உதட்ட நீ கொஞ்சம் சுழிக்கயில
ஓ.. மாமன் தவிக்குறேன்
மடிப்பிச்சை கேக்குறேன்
மனசத் தாடி என் மணிக்குயிலே
அக்கரைச் சீமையில் நீ இருந்தும்
ஐவிரல் தீண்டிட நினைக்குதடி
அக்கினிப் பழமுன்னு தெரிஞ்சிருந்தும்
அடிக்கடி நாக்கு துடிக்குதடி

படம் : ராவணன்
பாடல் வரிகள் : வைரமுத்து
பாடியவர்கள் : கார்த்திக், முகமது இர்ஃபான்
இசை : ஏ.ஆர்.ரஹ்மான்