நிழலினை நிஜமும் பிரிந்திடுமா
உடலின்றி உயிரும் வாழ்ந்திடுமா
கருவறை உனக்கும் பாரமா அம்மா
மீண்டும் என்னை ஒரு முறை சுமப்பாய் அம்மா
(நிழலினை)
நடமாடும் சாபமா நான் இங்கே இருக்க
விதி செய்த சதியா தெரியலம்மா
கடல் தூக்கும் அலையும் கடலில் தான் சேரும்
அது போல என்னையும் சேத்துக்கம்மா
உன் பிள்ளை என்று ஊர் சொல்லும் பொது
எனக்கே நான் யாரோ என்றாகி போனேன்
ஒத்த சொந்தம் நீயிருந்தால் போதுமம்மா
மொத்த பூமி எனக்கே தான் சொந்தமம்மா
பத்து மாசம் உள்ளிருந்தேன் பக்குவமா
பூமிக்கு நான் வந்ததென்ன குத்தமம்மா
திசை எல்லாம் எனக்கு இருளாகி கிடக்கு
எங்கேயோ பயணம் தொடருதம்மா
என்னோட மனசும் பழுதாகிப் போச்சு
சரி செய்ய வழியும் தெரியலம்மா
சூரியன் உடஞ்சா பகலில்ல அம்மா
ஆகாயம் மறஞ்சா அகிலமே சும்மா
என்ன சுத்தி என்னன்னமோ நடக்குதம்மா
கண்டதெல்லாம் கனவாகி போயிடுமா
தூக்கத்தில உன்னை நானும் தொலைச்சேன் அம்மா
தேடி தர தெய்வம் வந்து உதவிடுமா
(நிழலினை)
படம்: ராம்
பாடகர்: விஜய் ஜெசுதாஸ்
இசை: யுவன் சங்கர்ராஜா
Sunday, July 18, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment