மலரே மலரே மலரே மலரே முகவரி என்ன?
உன் மனத்தில் மனத்தில் மனத்தில் உள்ள முதல் வரி என்ன?
குல்முஹர் மலரே குல்முஹர் மலரே கொல்லப் பார்க்காதே
உன் துப்பட்டாவில் என்னை கட்டி
தூக்கில் போடாதே தூக்கில் போடாதே தூக்கில் போடாதே
(குல்முஹர் மலரே..)
மலரின் தொழிலே உயிரை கொல்லுதல் இல்லையடி
மனிதன் உயிரை கொன்றால் அதன் பெயர் மலரே இல்லையடி
அதன் பெயர் மலரே இல்லையடி
(குல்முஹர் மலரே..)
(மலரே மலரே..)
உயிரை திரிகி உந்தன் கூந்தல் சூடிக்கொள்ளாதே
என் உதிரம் கொண்டு உதட்டு சாயம் பூசி கொள்ளாதே
விண்மீன் பறிக்க வழியில்லை என்று கண்களை பறிக்காதே
என் இரவை எரித்து குழைத்து குழைத்து கண் மை பூசாதே
என்னை விடவும் என்னை அறிந்தும் யார் நீ? என்று கேட்காதே
இருக்கும் கவிஞர்கள் இம்சை போதும் என்னையும் கவிஞன் ஆக்காதே
(குல்முஹர் மலரே..)
உடைந்த வார்த்தையில் உன் பெயர் சொல்லி உடனே ஓடுகிறாய்
என் ரத்த குழாயில் புகுந்து கொண்டு சத்தம் போடுகிறாய்
கண்ணாடி நெஞ்சில் கல்லை எறிந்து கலகம் மூட்டுகிறாய்
இன்று இந்தரை மணிக்குள் காதல் வருமென அறிகுறி காட்டாதே
மௌனம் என்பது உறவா பகையா வயது தீயில் வாட்டு கிறாய்
ஏற்கனவே மனம் எரிமலை தானே ஏனடி பெட்ரோல் ஊற்றுகிறாய்
ஏனடி பெட்ரோல் ஊற்றுகிறாய்
(மலரே மலரே..)
மலரே மலரே குல்முஹர் மலரே கொல்லப் பார்க்காதே
உன் துப்பட்டா வில் என்னை கட்டி
தூக்கில் போடாதே தூக்கில் போடாதே
தூக்கி எரியாதே........ தூக்கில் போடாதே
முகவரி என்ன?
முகவரி என்ன?
முகவரி என்ன?
தூக்கில் போடாதே
முகவரி என்ன?
முகவரி என்ன?
முகவரி என்ன?
தூக்கில் போடாதே
படம்: மஜுனு
இசை: ஹாரீஸ் ஜெயராஜ்
பாடியவர்கள்: ஹரிஹரன், திப்பு
Sunday, July 18, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment