வைகை கரை காற்றே நில்லு
வைகை கரை காற்றே நில்லு
வஞ்சி தனை பார்த்தால் சொல்லு
மன்னன் மனம் வாடுதென்று
மங்கை தனை தேடுதென்று
காற்றே பூங்காற்றே
என் கண்மணி அவளை கண்டால் நீயும்
காதோரம் போய் சொல்லு
திருக்கோவில் வாசல் அது திறக்கவில்லை
தெருக்கோடி பூஜை அது நடக்கவில்லை
தேவதையை காண்பதற்கு வழியுமில்லை
தேன் மொழியை கேட்பதற்கு வகையுமில்லை
காதலில் வாழ்ந்த கன்னி மனம்
காவலில் வாடையில் கன்னி விடும்
கூண்டுக்குள்ளே அலைமோதும் காதல் கிளி அவள் பாவம்
கூண்டுக்குள்ளே அலைமோதும் கதால் கிளி அவள் பாவம்
காதல் கிளி அவள் பாவம்.
காற்றே பூங்காற்றே என் கண்மணி அவளை கண்டால் நீயும்
காதோரம் போய் சொல்லு
மாக்கோலம் போடுதற்க்கு வரவில்லையே
அவள் கோலம் பாற்பதற்கு வழியில்லையே
ஜன்னலுக்குள் நிலவு அவள் தோன்ற வில்லையே
ஜாடையொழி சிந்த அவள் இன்று இல்லையே
நிலவினை மேகம் வானில் மறைக்க
அவளினை யாரோ வீட்டில் தடுக்க
மேகமது விலகாதோ சோகமது நீங்காதோ
மேகமது விலகாதோ சோகமது நீஙாதோ
சோகமது நீஙாதோ..
காற்றே பூங்காற்றே என் கண்மணி அவளை கண்டால் நீயும்
காதோரம் போய் சொல்லு
வைகை கரை காற்றே நில்லு
வைகை கரை காற்றே நில்லு
வஞ்சி தனை பார்த்தால் சொல்லு
மன்னன் மனம் வாடுதென்று
மங்கை தனை தேடுதென்று
காற்றே பூங்காற்றே
என் கண்மணி அவளை கண்டால் நீயும்
காதோரம் போய் சொல்லு ..னீ
காதோரம் போய் சொல்லு.
Sunday, November 21, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment