நீ வருவாய் என நான் இருந்தேன்
ஏன் மறந்தாய் என நான் அறியேன்
(நீ வருவாய்..)
கண்கள் உறங்கவில்லை
இமைகள் தழுவவில்லை
கவிதை எழுத ஒரு வரியும் கிடைக்கவில்லை
அமைதி இழந்த மனம் எதையும் நினக்கவில்லை
வாராயோ..
(நீ வருவாய்..)
அடி தேவி உந்தன் தோழி
ஒரு தூதானாள் இன்று
(அதிதேவி..)
இரவெங்கே உறவெங்கே
உனை காண்பேனோ என்றும்
(இரவெங்கே..)
அமுத நதியில் என்னை தினமும் நனைய விட்டு
இதழில் மறைத்து கொண்ட இளமை அழகு சிட்டு
தனிமை மயக்கம்தனை விரைவில் தணிப்பதற்கு
வாராயோ..
(நீ வருவாய்..)
ஒரு மேடை ஒரு தோகை
அது ஆடாதோ கண்ணே
(ஒரு மேடை..)
குழல் மேகம் தரும் ராகம்
அது நாடாதோ என்னை
(குழல் மேகம்..)
சிவந்த முகத்தில் ஒரு நகையை அணிந்து கொண்டு
விரிந்த புருவங்களில் அழகை சுமந்து கொண்டு
எனது மரியில் ஒரு புதிய கவிதை சொல்ல
வாராயோ..
(நீ வருவாய்..)
படம்: சுஜாதா
இசை: MS விஸ்வநாதன்
பாடியவர்: கல்யாணி மேனன்
No comments:
Post a Comment