Sunday, April 26, 2015

கண்ணனுக்கு என்ன வேண்டும்

கண்ணனுக்கு என்ன வேண்டும்
கண்ணனுக்கு என்ன வேண்டும்
தினமும் உதிக்கும் பொன்மலரோ
இதழ்கள் உதிர்க்கும் சொல்மலரோ
உன்னை எண்ணி ஏங்கித் தவிக்கும்
உள்ளம் என்னும் மலரோ
சொல்லு கண்ணா... சொல்லு கண்ணா... சொல்லு கண்ணா...
(கண்ணனுக்கு...)


நதி வழி ஓர் ஓடம் போவது போலே
விதி வழி என் உள்ளம் உன் புகழ் பாடும்
தூரிகைகள் தீட்டாத ஓவியம் நீயே
பாரில் உனைப் பாடாத காலங்கள் வீணே
உன்னைப் போற்ற மண்ணின் மீது
உள்ளம் உண்டு கோடி கோடி (2)
உந்தன் உள்ளம் என்னவென்று சொல்லு கண்ணா...
(கண்ணனுக்கு...)


அல்லும் பகல் தோறும் உன் ஸ்ரீகிருஷ்ண கானம்
உள்ளமதில் உருகாமல் போனால் என்னாகும் (2)
வெண்ணிலவில் நதியோரம் வேங்குழல் ஓசை
என்னையது தாலாட்ட ஏங்குது ஆசை
கீதகோவிந்த கிருஷண கிருஷணா
நாத வேதங்கள் கிருஷண கிருஷணா
பாதவிந்தங்கள் போற்றி கிருஷ்ணா
யாதுமாய் நின்ற கிருஷ்ணா
(கண்ணனுக்கு...)

No comments:

Post a Comment