Sunday, April 26, 2015

அடடா அடடா அடடா எனை ஏதோ செய்கிறாய்

அடடா அடடா அடடா எனை ஏதோ செய்கிறாய்
அடடா அடடா அடடா என் நெஞ்சை கொய்கிறாய்
கனவில் நீயும் வந்தால் என் உறக்கம் கேட்கிறாய்
எதிரில் நீயும் வந்தால் என் உயிரைக் கேட்கிறாய்
அடி உன் முகம் கண்டால் என் இமை ரெண்டும்
கைகள் தட்டுதே...
(அடடா அடடா...)


நீயும் நானும் ஒன்றாய் போகும் போது
நீளும் பாதை இன்னும் வேண்டும் என்று
நெஞ்சம் ஏங்குதடி
வானவில்லாய் நீயும் வந்த போது
எந்தன் கருப்பு வெள்ளை கண்கள் ரெண்டும்
கலராய் மாறுதடி

என் வீட்டுப் பூவெல்லாம்
உன் வீட்டுத் திசை பார்க்கும்
என் வாசல் உன் பாதம்
எங்கென கேட்குதடி
(அடடா அடடா...)


ஏய் வானம் மீது போகும் மேகம் எல்லாம்
உனது உருவம் போல வடிவம் காட்ட
கண்கள் மயங்குதடி
பூவில் ஆடும் பட்டாம் பூச்சி கூட
நீயும் நடந்து கொண்டே பறந்து செல்லும்
அழகை ரசிக்குதடி

உன் செய்கை ஒவ்வொன்றும்
என் காதல் அர்த்தங்கள்
நாள் தோறும் நான் சேர்க்கும்
ஞாபகச் சின்னங்கள்
(அடடா அடடா...)

No comments:

Post a Comment