அடியே கொல்லுதே
அழகோ அள்ளுதே
உலகம் சுருங்குதே
இருவரில் அடங்குதே
உன்னோடு நடக்கும்
ஒவ்வொரு நொடிக்கும்
அர்த்தங்கள் சேர்ந்திடுதே
என் காலை நேரம்
என் மாலை வானம்
நீ இன்றிக் காய்ந்திடுதே
(அடியே..)
இரவும் பகலும் உன் முகம்
இரையைப் போலே
துரத்துவதும் ஏனோ
முதலும் முடிவும் நீ எனத்
தெரிந்த பின்பு
தயங்குவதும் வீணோ
வாடைக் காற்றினில் ஒரு நாள்
ஒரு வாசம் வந்ததே
பொன் நேரம் வந்ததே
உந்தன் கண்களில் ஏதோ
மின்சாரம் உள்ளதே
என் மீது பாய்ந்ததே
மழைக் காலத்தில் சரியும்
மண் தரை போலவே மனமும்
உனைக் கண்டதும் சரியக் கண்டேனே
(அடியே..)
அழகின் சிகரம் நீயடி
கொஞ்சம் அதனால்
தள்ளி நடப்பேனே
ஒரு சொல் ஒரு சொல் சொல்லடி
இந்தக் கணமே
உன்னை மணப்பேனே
சொல்லா வார்த்தையின் சுகமே
மயில் தோகை போலவே
என் மீது ஊறுதே
எல்லா வானமும் நீ
சில நேரம் மாத்திரம்
செந்தூரம் ஆகுதே
எனக்காகவே வந்தாய்
என் நிழல் போலவே நின்றாய்
உனை தோற்று நீ
என்னை வென்றாயே
(அடியே..)
Saturday, June 13, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment