Monday, May 2, 2011

வாழ்வே மாயம்

வாழ்வே மாயம் இந்த வாழ்வே மாயம்
தரை மீது காணும் யாவும் தண்ணீரில் போடும் கோலம்
நிலைக்காதம்மா…
யாரோடு யார் வந்தது? நாம் போகும்போது
யாரோடு யார் செல்வது?

(வாழ்வே)

யாரார்க்கு எந்த மேடையோ இங்கே யாரார்க்கு என்ன வேஷமோ
ஆடும் வரைக் கூட்டம் வரும் ஆட்டம் நின்றால் ஓட்டம் விடும்
தாயாலே வந்தது தீயாலே வெந்தது (2)
மெய் என்று மேனியை யார் சொன்னது

(வாழ்வே)

பிறந்தாலும் பாலை ஊற்றுவார் இங்கே இறந்தாலும் பாலைஊற்றுவார்
உண்டாவது ரெண்டாலதான் ஊர்போவது நாலாலதான்
கருவோடு வந்தது தெருவோடு போவது (2)
மெய் என்று மேனியை யார் சொன்னது

No comments:

Post a Comment