படம் : உன்னால் முடியும் தம்பி (1988)
பாடிவர்கள் : பாலசுப்ரமண்யம் SP, ஜானகி S
இசை : இளையராஜா
இதழில் கதை எழுதும் நேரமிது
இன்பங்கள் அழைக்குது ஆஆ
மனதில் சுகம் மலரும் மாலையிது
மான்விழி மயங்குது ஆஆ
இளமை அழகை அள்ளி அணைப்பதற்கே (2)
இருகரம் துடிக்குது தனிமையும் நெருங்கிட இனிமையும் பிறக்குது
(இதழில் )
காதல் கிளிகள் ரெண்டு ஜாடை பேசக்கண்டு
ஏதேதோ எண்ணம் என் நெஞ்சில் உதிக்கும்
நானும் நீயும் சேர்ந்து ராகம் பாடும்போது
நீரோடை போல என் நெஞ்சம் இனிக்கும்
இனிய பருவமுள்ள இளங்குயிலே ()
ஏன் இன்னும் தாமதம் மன்மதக் காவியம் என்னுடன் எழுத
நானும் எழுதிட இளமையும் துடிக்குது
நாணம் அதை வந்து இடையினில் தடுக்குது
ஏங்கித் தவிக்கையில் நாணங்கள் எதற்கடி
ஏக்கம் தணிந்திட ஒரு முறை தழுவடி
காலம் வரும் வரை பொறுத்திருந்தால்
கன்னி இவள் மலர்க்கரம் தழுவிடுமே
காலம் என்றைக்குக் கனிந்திடுமோ
காலை மனம் அதுவரை பொறுத்திடுமோ
மாலை மலர் மாலை இடும் வேலைதனில்
தேகம் இது விருந்துகள் படைத்திடும்
தோகை போலே மின்னும் பூவாய் உந்தன் கூந்தல்
கார்மேகம் என்றே நான் சொல்வேன் கண்ணே
பாவை எந்தன் கூந்தல் வாசம் யாவும் அந்த
மேகம்தனில் ஏது நீ சொல்வாய் கண்ணா
அழகைச் சுமந்து வரும் அழகரசி ()
ஆனந்த பூமுகம் அந்தியில் வந்திடும் சுந்தர நிலவோ
நாளும் நிலவது தேயுது மறையுது
நங்கை முகமென யாரதைச் சொன்னது
மங்கை உன் பதில் மனதினைக் கவருது
மாறன் கணை வந்து மார்பினில் பாயுது
காமன் கணைகளைத் தடுத்திடவே
காதல் மயில் துணை என வருகிறது
மையல் தந்திடும் வார்த்தைகளே
மோகம் எனும் நெருப்பினைப் பொழிகிறது
மோகம் நெருப்பாக அதைத் தீர்க்குமொரு
ஜீவா நதி அருகினில் இருக்குது
Thursday, January 26, 2012
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment