ஒரு தங்கரதத்தில் பொன்மஞ்சள் நிலவு
ஒரு தங்கரதத்தில் பொன்மஞ்சள் நிலவு
என் தெய்வம் தந்த..........
என் தெய்வம் தந்த என் தங்கை
ஒரு தங்கரதத்தில் பொன்மஞ்சள் நிலவு
ஒரு தங்கரதத்தில் பொன்மஞ்சள் நிலவு
செம்மண்ணிலே தண்ணீரைப்போல் உண்டான சொந்தம் இது
சிந்தாமணி ஜோதியைப்போல் ஒன்றான பந்தம் இது
தங்கை அல்ல.....
தங்கை அல்ல தாயானவள்
கோடி பாடல் நான் பாட பொருளானாள்
ஒரு தங்க ரதத்தில் பொன்மஞ்சள் நிலவு
ஒரு தங்க ரதத்தில் பொன்மஞ்சள் நிலவு
கண்ணீரினால் நீராட்டினால் என் ஆசை தீராதம்மா
முன்னூறு நாள் தாலாட்டினால் என் பாசம் போகாதம்மா
என் ஆலயம் பொன் கோபுரம்
ஏழேழு ஜென்மங்கள் ஆனாலும் மாறாதம்மா
ஒரு தங்கரதத்தில் பொன்மஞ்சள் நிலவு
ஒரு தங்கரதத்தில் பொன்மஞ்சள் நிலவு
ராஜாவை நான் ராஜாத்திக்கு துணையாக பார்ப்பேன் அம்மா
தேவர்களின் பல்லாக்கிலே ஊர்கோலம் வைப்பேன் அம்மா
மணமங்கலம் திருக்குங்குமம் வாழ்க என்று பல்லாண்டு நான் பாடுவேன்
ஒரு தங்கரதத்தில் பொன்மஞ்சள் நிலவு
ஒரு தங்கரதத்தில் பொன்மஞ்சள் நிலவு
என் தெய்வம் தந்த..........
என் தெய்வம் தந்த என் தங்கை
ஒரு தங்க ரதத்தில் பொன்மஞ்சள் நிலவு
ஒரு தங்க ரதத்தில் பொன்மஞ்சள் நிலவு
Friday, January 27, 2012
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment