நீ நாதஸ்வரம் போல வந்தா நாபிக்கமலம் நானா
நீ ஏழு ஸ்வரம் போல வந்தா எட்டாம் ஸ்வரம் நானா
வளையப்பட்டி தவிலே தவிலே
ஜுகல்பந்தி வைக்கும் மவளே மவளே
அடி ஜிமிக்கி போட்ட மயிலே மயிலே
என்னை மயக்குறியே மயக்குறியே
நீ நாதஸ்வரம் போல வந்தா நாபிக்கமலம் நானா
நீ ஏழு ஸ்வரம் போல வந்தா எட்டாம் ஸ்வரம் நானா
(வளையப்பட்டி தவிலே)
உன் கண்கள் ரெண்டும் கல்யாணி
உன் சிரிப்போ சிந்துபைரவி
நீ பார்க்கும்போது பாக்யஸ்ரீ
நீ கொஞ்சும்போது நீலாம்பரி
நான் திருவையாறு கச்சேரி
நீ தாளம் போடு பித்தேறி
பல ராகங்கள் சொல்வேன் பின்னாடி
என் ஊருக்கு வா நீ பஸ் ஏறி
(வளையப்பட்டி தவிலே)
நீ பார்க்கும்போதே பத்திக்குதே
சொந்த ஊரு சிவகாசியா
பேசும் போதே ஜில்லுங்குதே
உங்க ஊரு சிரபுஞ்சியா
நீ நெருங்கும் போதே கரண்ட் ஏறுதே
உங்க ஊரு கல்பாக்கமா
நரம்பெல்லாம் முருக்கேறுதே
ஏண்டி நீயும் மணப்பாறையா
நீ கைகால் முளைச்ச மத்தளமா
உன்னை வாசிக்கப் பின்னால் சுத்தனுமா
நீ ஆர்மோனிய கட்டையமா
என் ஹார்மோன் செய்யுது சேட்டையம்மா
நான் வாலிபம் திருடும் வீணையடா
இங்கே வந்தா ஒளியும் பூணையடா
நான் வயதுக்கு வந்த வயலினடா
என்னை மைனரைப் போல வாசியடா
Friday, October 22, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment