செம்மீனே செம்மீனே உங்கிட்ட சொன்னேனே
செவ்வந்திப் பெண்ணுக்கு சிங்காரக் கண்ணுக்கு
கல்யாண மாலை கொண்டு வாரேன்
மஞ்சள் தாலியும் குங்குமமும் தாரேன்
தானன தனனானா.... நா
தானன தனனானா...
செம்மீனே செம்மீனே உங்கிட்ட சொன்னேனே
மலைசாதிப் பெண்ணுக்கு மடல்வாழை கண்ணுக்கு
கல்யாண மாலை கொண்டு வா வா
மஞ்சள் தாலியும் குங்குமமும் தா தா
கால் கடுக்க காத்திருந்தேன்
கண்ணு ரெண்டும் பூத்திருந்தேன்
காதலனை காணலியே
காரணத்தை நானறியேன்
தினசரி நான் பார்த்த தாமரப்பூவும்
திருமுகம் காட்டாது போனதென் பாவம்
ஊர் தடுத்தும் யார் தடுத்தும்
ஓயாது நானும் கொண்ட மோஹம்
என்றும் நானும் கொண்ட மோஹம்
செம்மீனே செம்மீனே உங்கிட்ட சொன்னேனே
செவ்வந்திப் பெண்ணுக்கு சிங்காரக் கண்ணுக்கு
கல்யாண மாலை கொண்டு வா வா
மஞ்சள் தாலியும் குங்குமமும் தா தா
ஆ ஆஅ ஆஅ ஆஅ ஆ ஆஅ ஆஅ
ஹா ஆ ஆ ஆஅ ஆ ஆ ஆ ஆ
நான் வழங்கும் பூ முடிக்க
கூந்தல்லொண்ணு ஆடுதங்கே
என் விரலால் பொட்டு வைக்க
நெற்றியொண்ணு வாடுதங்கே
இருவரும் அன்றாடம் சேர்ந்ததைப் பார்த்து
இடைவெளி இல்லாமல் போனது காத்து
நான் திரும்பி வரும் வரைக்கும்
நீரின்றி வாடும் இள நாத்து
ஓடை நீரின்றி வாடும் இள நாத்து
செம்மீனே செம்மீனே உங்கிட்ட சொன்னேனே
மலைசாதிப் பெண்ணுக்கு மடல்வாழை கண்ணுக்கு
கல்யாண மாலை கொண்டு வாரேன்
மஞ்சள் தாலியும் குங்குமமும் தாரேன்
கல்யாண மாலை கொண்டு வா வா
மஞ்சள் தாலியும் குங்குமமும் தா தா
Friday, October 22, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment