மலரே...மௌனமா..
மௌனமே வேதமா...
மலர்கள்... பேசுமா....
பேசினால் ஓயுமா... அன்பே
பாதி ஜீவன் கொண்டு தேகம் வாழ்ந்து வந்ததோ
மீதி ஜீவன் உன்னைப் பார்த்த போது வந்ததோ
ஏதோ சுகம் உள்ளூறுதே
ஏனோ மனம் தள்ளாடுதே
விரல்கள் தொடவா
விருந்தைத் தரவா
மார்போடு கண்கள் மூடவா
மலரே...மௌனமா..
மௌனமே வேதமா...
மலர்கள்... பேசுமா....
பேசினால் ஓயுமா... அன்பே
கனவு கண்டு எந்தன் கண்கள் மூடிக் கிடந்தேன்
காற்று போல வந்து கண்கள் மெல்லத் திறந்தேன்
காற்றே எனைக் கிள்ளாதிரு
பூவே என்னைத் தள்ளாதிரு
உறவின் உறவே
உயிரின் உயிரே
புது வாழ்கை தந்த வள்ளலே
மலரே...மௌனமா..
மௌனமே வேதமா...
மலர்கள்... பேசுமா....
பேசினால் ஓயுமா... அன்பே
Friday, October 22, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment