Friday, October 22, 2010

சக்க போடு போட்டானே சவுக்கு கண்ணால

சக்க போடு போட்டானே சவுக்கு கண்ணால
சத்தியமா பாக்கல இதுக்கு முன்னால
தாங்கதான் முடியல ஐயோ என்னால
என் தாவணி நழுவுது கீழே தன்னால

சக்க போடு போட்டாளே சவுக்கு கண்ணால
சத்தியமா பாக்கல இதுக்கு முன்னால
தாங்கதான் முடியல ஐயோ என்னால
என் தாகம் தன் கூடுது இந்த பொண்ணால


கொண்டையிலே பூவடுக்கி
கும்முனுதான் பேசுற
கெண்ட காலை நீவுற
கிச்சு கிச்சு மூட்டிகிட்டே கிறுக்கு புடிக்க வெக்கிற
அஞ்சு நொடி நேரத்தில .. கோடி முறை பார்க்குறே
மீனுகுஞ்சு போல துள்ளி ஐய்சாலக்கடி காட்டுற

எச்சி தொட்டு கச்சிதமா உன்னை என்னை ஒட்டிக்கலாம்
முத்தம் வெச்சு முத்தம் வெச்சு மூச்சு முட்ட கட்டிக்கலாம்

கொழுத்து போன பொம்பளை இடுப்ப கொண்டாடீ
ஹே .. கொஞ்சம் நானும் ஓடினா தவிப்ப திண்டாடி

சக்க போடு போட்டாளே சவுக்கு கண்ணால
சத்தியமா பாக்கல இதுக்கு முன்னால
ஹே ..தாங்கதான் முடியல ஐயோ என்னால
என் தாகம் தன் கூடுது இந்த பொண்ணால


உள்ளங்களை சேர்த்து வெச்சு ஊருக்காக வாழுற ..
பம்பரமா ஓடுற ..
உன்னை எண்ணி ஏங்கிரேனே என்ன செய்ய போகுற
உள்ளங்கையில் தூக்கி வெச்சு உத்து உத்து பார்க்கவா
உருட்டி கீழ தள்ளி ஒண்டிக்கு ஒண்டி ஆடவா

ஒத்த சொல்லு சொன்னதில பத்திகிச்சு என் மனசு
மத்தபடி கன்னத்துல முத்த கதை நீ எழுது

வடிச்ச சோறு போலதான் ஆவி பரகுற ..
ஹே மடிச்ச சேலை கலைக்க தான் கூவி அழைக்கிறேன்
சக்க போடு போட்டனே சவுக்கு கண்ணால
சத்தியமா பாக்கல இதுக்கு முன்னால

தாங்கதான் முடியல ஐயோ என்னால
என் தாகம் தன் கூடுது இந்த பொண்ணால

No comments:

Post a Comment