நீ என்பது எதுவரை? எதுவரை?
நான் என்பது எதுவரை? எதுவரை?
நாம் என்பதும் அதுவரை அது வரைதான்
வாழ்வு என்பது ஒரு முறை ஒரு முறை
சாவென்பதும் ஒரு முறை ஒரு முறை
காதல் வரும் ஒரு முறை ஒரு முறை தான்
நீயா பேசியது? என் அன்பே நீயா பேசியது?
தீயை வீசியது? என் அன்பே தீயை வீசியது?
கண்களிலே உன் கண்களிலே பொய் காதல் நாடகம் ஏனடி?
அன்பினிலே மெய் அன்பினிலே ஓர் ஊமை காதலன் நானடி
நீயா பேசியது நீயா பேசியது நீயா பேசியது
நீயா பேசியது
ஏதோ நான் இருந்தேன், என் உள்ளே காற்றாய் நீ கிடைத்தாய்
காற்றை மொழி பெயர்த்தேன், அன்பே சொல் மூச்சை என் பரிதாய்?
இரவு இங்கே பகல் இங்கே தொடுவானம் போனதெங்கே?
உடல் இங்கே உயிர் இங்கே தடுமாறும் ஆவி எங்கே?
உறுகினான் நான் உறுகினேன், இன்று உயிரில் பாடி கருகினேன்
நீயா பேசியது என் அன்பே நீயா பேசியது?
வேரில் நான் அழுதேன், என் பூவும் சோகம் உணரவில்லை
வேஷம் தரிக்கவில்லை முன் நாளில் காதல் பழக்கமில்லை
உனக்கு என்றே உயிர் கொண்டேன், அதில் ஏதும் மாற்றம் இல்லை
பிரிவேன்றால் உறவுண்டு அதனாலே வாட்டம் இல்லை
மறைப்பதால் நீ மறைப்பதால் என் காதல் மாய்ந்து போகுமா?
நீயா பேசியது? என் அன்பே நீயா பேசியது?
தீயை வீசியது? என் அன்பே தீயை வீசியது?
கண்களிலே உன் கண்களிலே பொய் காதல் நாடகம் ஏனடி?
அன்பினிலே மெய் அன்பினிலே ஓர் ஊமை காதலன் நானடி
நீயா பேசியது நீயா பேசியது நீயா பேசியது
நீயா பேசியது
Friday, October 22, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment