Friday, January 27, 2012

நியூயார்க் நகரம் உறங்கும் நேரம்

பல்லவி :-

ம்ம்ம் .ம் ...ம்ம்ம்ம் ..ம்ம்ம்ம்

நியூயார்க் நகரம் உறங்கும் நேரம்
தனிமை அடர்ந்தது பனியும் படர்ந்தது
கப்பல் இறங்கியே காற்றும் கரையில் நடந்தது
நான்கு கண்ணாடி சுவர்களுக்குள்ளே
நானும் மெழுகுவர்த்தியும்
தனிமை தனிமையோ கொடுமை கொடுமையோ

ம்ம் ...ம்..ம்ம்ம் .....ம்ம்ம்ம்

நியூயார்க் நகரம் உறங்கும் நேரம்
தனிமை அடர்ந்தது பனியும் படர்ந்தது..
கப்பல் இறங்கியே காற்றும் கரையில் நடந்தது
நான்கு கண்ணாடி சுவர்களுக்குள்ளே
நானும் மெழுகுவர்த்தியும்
தனிமை தனிமையோ
தனிமை தனிமையோ..கொடுமை கொடுமையோ

ஓஒ .ஒ ..ஒ ஒ ..ஓஹோ ..ஒ



சரணம் 1

பேச்செல்லாம் தாலாட்டு போல
என்னை உறங்க வைக்க நீ இல்லை
தினமும் ஒரு முத்தம் தந்து
காலை காபி கொடுக்க நீ இல்லை
விழியில் விழும் தூசி தன்னை
எடுக்க நீ இங்கு இல்லை
மனதில் எழும் குழப்பம் தன்னை
தீர்க்க நீ இங்கு இல்லை
நான் இங்கே நீயும் அங்கே
இந்த தனிமை நிமிஷங்கள் வருஷம்
ஆனதேனோ
வான் இங்கே நீளம் அங்கே
இந்த உவமைக்கு இருவரும் விளக்கம்
ஆனதேனோ

ஒ .ஒ .ஒ .ஓஹோ ..ஒ ..ஒ ஒ ..ஓஹோ ..ஒ

நியூயார்க் நகரம் உறங்கும் நேரம்
தனிமை அடர்ந்தது பனியும் படர்ந்தது..

ஒ .ஒ .ஒ .ஒ ...ஒ .ஒ .ஒ . ஒ ...

சரணம் 2


நாட்குறிப்பில் நூறு தடவை
உந்தன் பெயரை எழதும் என் பேனா
எழுதியதும் எறும்பு மொய்க்க
பெயரின் ஓரமென்ன தேனா .
ஒ .ஒ .ஒ .ஒ ...ஜில்லென்று பூமி இருந்தும்
இந்த தருணத்தில் குளிர்காலம்
கோடை ஆனதேனோ
ஒ .ஒ.ஒ .ஒ ...
நான் அங்கே நீயும் வந்தால்
செந்தணல் கூட பனிக்கட்டி
போல மாறுமே ..ஒ..ஒ ..

நியூயார்க் நகரம் உறங்கும் நேரம்
தனிமை அடர்ந்தது பனியும் படர்ந்தது
கப்பல் இறங்கியே காற்றும் கரையில் நடந்தது
நான்கு கண்ணாடி சுவர்களுக்குள்ளே
நானும் மெழுகுவர்த்தியும்
தனிமை தனிமையோ
தனிமை தனிமையோ..கொடுமை கொடுமையோ

1 comment:

  1. மிக உபயோகம்.
    ஆனால் பாடல் எழுதியவர், பாடியவர், இசையமைத்தவர், படத்தின் பெயர்
    சேர்த்தலே நன்றிக்குரியது.

    ReplyDelete