Friday, February 11, 2011

வெண்பஞ்சு மேகம் என்பேனா

வெண்பஞ்சு மேகம் என்பேனா
பொன் மஞ்சள் நேரம் என்பேனா
பொன் தோன்றும் கோளம் என்பேனா
என் அன்பே என் அன்பே
சில்லென்ற சாரல் என்பேனா
சில்வண்டு பாடல் என்பேனா
உள்ளத்தின் தேடல் என்பேனா
என் அன்பே என் அன்பே
என்னென்று உன்னை சொவது
மொழி இல்லை சொல்ல என்னிடம்
பொய் இல்லை என்ன செய்வது
எனதுள்ளம் இன்று உன்னிடம்
உன்னாலே உன்னாலே உன்னாலே
மண் மேலே மண் மேலே மண் மேலே
கண்டேன் கண்டேன் கண்டேன் காதலை
கண்டேன் கண்டேன் கண்டேன் காதலை
கண்டேன் கண்டேன் கண்டேன் காதலை
கண்டேன் கண்டேன் கண்டேன் காதலை
ஓஹோ ஹோ ஹோ ஹோ
(வெண்பஞ்சு..)

கண்கள் இரண்டை காதல் வந்து சந்திப்பதேன்
இல்லை இல்லை தூக்கம் என்று வஞ்சிப்பதேன்
உள்ளம் உன்னை ஏந்திக்கொள்ள சிந்திப்பதேன்
கொள்ளைக்கொண்டு போனப்பின்பும் மண்ணிப்பதேன்
உன் கையை சென்றிடவே என் கைகள் நீளுவதேன்
உன் பேரைக் கேட்டதுமே தார்சாலைப் பூப்பது ஏன்
பூத்தப் பூக்கள் அடிக்கடி சிரிப்பதும் ஏன்
முதுகினில் சிறகுகள் முளைப்பது ஏன்
என் ஆசைகள் உன்னை சொல்வது
நீ ஆயுதம் இன்றிக் கொல்வதேன்
(கண்டேன்..)

குட்டிக்குட்டி சேட்டை செய்து ஒட்டிக்கொண்டாய்
கொஞ்சிக்கொஞ்சிப் பேசி என்னை கொத்திச்சென்றாய்
தள்ளித்தள்ளிப் போனப் பின்னும் பக்கம் வந்தாய்
இன்னும் இன்னும் மேலே செல்ல இரக்கை தந்தாய்
எல்லாமே மாறிவிடும் சொன்னாலே மீண்டுவர
சொல்லாமல் மாற்றத்தைத் தந்தாயே நான் மலர
உன்னைவிட அதிசயம் உலகில் இல்லை
ஏய் அழகியே அவஸ்தையும் எதுவுமில்லை
என் தேவதை உன்னை எண்ணியே நான் நீங்கியதென்ன
என்னையே..
(கண்டேன்..)

No comments:

Post a Comment