நிலவு தூங்கும் நேரம்
நிலவு தூங்கும் நேரம் நினைவு தூங்கிடாது
இரவு தூங்கும் நேரம் உறவு தூங்கிடாது
இது ஒரு தொடர்கதை தினம் தினம் வளர்பிறை(நிலவு தூங்கும் நேரம்… )
நான்கு கண்ணில் இன்று ஒரு காட்சியானதே
வானம் காற்று பூமி இவை சாட்சியானதே
நானுனைப் பார்த்தது பூர்வ ஜென்ம பந்தம்
நீண்ட நாள் நினைவிலே வாடுமிந்த சொந்தம்
நான் இனி நீ… நீ இனி நான்
வாழ்வோம் வா கண்ணே!
(நிலவு தூங்கும் நேரம்… )
கீதை போலக் காதல் மிகப் புனிதமானது
கோதை நெஞ்சில் ஆடும் இந்தச் சிலுவை போன்றது
வாழ்விலும் தாழ்விலும் விலகிடாத நேசம்
வாலிபம் தென்றலாய் என்றும் இங்கு வீசும்
ஏன் மயக்கம் ஏன் தயக்கம்
கண்ணே வா இங்கே
(நிலவு தூங்கும் நேரம்… )
Friday, February 11, 2011
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment