ரகசியமாய் ரகசியமாய் புன்னகைத்தால் பொருளென்னவோ?
ரகசியமாய் ரகசியமாய் புன்னகைத்தால் பொருளென்னவோ?சொல்லத் துடிக்கும் வார்த்தை கிரங்கும்,
தொண்டைக் குழியில் ஊசி இறங்கும்,
இலை வடிவில் இதயம் இருக்கும்,
மலை வடிவில் அதுவும் கனக்கும்.
சிரித்து சிரித்துசிறையிலே,
சிக்கிக் கொள்ள அடம் பிடிக்கும்.
ரகசியமாய் ரகசியமாய் புன்னகைத்தால் பொருளென்னவோ?
அதிசயமாய் அவசரமாய் மொழித் தொலைந்தால் பொருளென்னவோ?
சொல்லத் துடிக்கும் வார்த்தை கிரங்கும்,
தொண்டைக் குழியில் ஊசி இறங்கும்,
இலை வடிவில் இதயம் இருக்கும்,
மலை வடிவில் அதுவும் கனக்கும்.
சிரித்து சிரித்து சிறையிலே,
சிக்கிக் கொள்ள அடம் பிடிக்கும்.
நிலம், நீர், காற்றிலே மின்சாரங்கள் பிறந்திடும்.
காதல் தரும் மின்சாரமோ பிரபஞ்சத்தைக் கடந்திடும்.
நிஜமாய் நீ என்னைத் தீண்டினால்…
நிஜமாய் நீ என்னைத் தீண்டினால்,
பனியாய் பனியாய் உறைகிறேன்.
ஓளியாய் நீ என்னைத் தீண்டினால்,
நுரையாய் உன்னுள் கரைகிறேன்.
காதல் வந்தாலே வந்தாலே,
ஏனோ உலறல்கள் தானோ?
அதிசயமாய் அவசரமாய் மொழித் தொலைந்தால் பொருளென்னவோ?
அதிசயமாய் அவசரமாய் மொழித் தொலைந்தால் பொருளென்னவோ?
வெள்ளித் தரைப் போலவே என் இதயம் இருந்தது.
மெல்ல வந்த உன் விரல் காதல் என்று எழுதுது.
ஒரு நாள் காதல் என் வாசலில்…
ஒரு நாள் காதல் என் வாசலில்,
வரவா? வரவா? கேட்டது.
மறுநாள் காதல் என் வீட்டுக்குள்,
அடிமை சாசனம் மீட்டுது.
அதுவோ? அது இதுவோ? இது எதுவோ?
அதுவே நாம் அறியோமே.
ரகசியமாய் ரகசியமாய் புன்னகைத்தால் பொருளென்னவோ?
அவசரமாய் அவசரமாய் மொழித் தொலைந்தால் பொருளென்னவோ?
சொல்லத் துடிக்கும் வார்த்தை கிரங்கும்,
தொண்டைக் குழியில் ஊசி இறங்கும்,
இலை வடிவில் இதயம் இருக்கும்,
மலை வடிவில் அதுவும் கனக்கும்.
சிரித்து சிரித்துசிறையிலே,
சிக்கிக் கொள்ள அடம் பிடிக்கும்
Friday, February 11, 2011
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment