வளையோசை கலகலகல
வளையோசை கலகலகலவெனக் கவிதைகள் படிக்குது
குளுகுளு தென்றல் காற்றும் வீசுதுசில நேரம் சிலுசிலுசிலு எனச் சிறகுகள் படபட துடிக்குது
எங்கும் தேகம் கூசுது
சின்னப் பெண் பெண்ணல்ல வண்ணப் பூந்தோட்டம்
கொட்டட்டும் மேளம் தான் அன்று காதல் தேரோட்டம்
(வளையோசை கலகலகலவென)
ஒரு காதல் கடிதம் விழி போடும்
உன்னைக் காணும் சபலம் வரக் கூடும்
நீ பார்க்கும் பார்வைகள் பூவாகும்
நெஞ்சுக்குள் தைக்கின்ற முள்ளாகும்
கண்ணே என் கண் பட்ட காயம்
கை வைக்கத் தானாக ஆறும்
முன்னாலும் பின்னாலும் தள்ளாடும்
செம்மேனி என் மேனி உன் தோளில் ஆடும் நாள்
(வளையோசை கலகலகலவென)
லாலலாலலாலா லாலா
லாலலாலலாலா லாலா ஹே
லாலலாலலாலா லாலலாலலாலா
உன்னைக் காணாதுருகும் நொடி நேரம்
பல மாதம் வருடம் என மாறும்
நீங்காத ரீங்காரம் நான்தானே
நெஞ்சோடு நெஞ்சாக நின்றேனே
ராகங்கள் தாளங்கள் நூறு
ராஜா உன் பேர் சொல்லும் பாரு
சிந்தாமல் நின்றாடும் செந்தேனே
சங்கீதம் உண்டாகும் நீ பேச்சில்தான்
(வளையோசை கலகலகலவென)
Friday, February 11, 2011
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment