மணியே மணிக்குயிலே, மாலையிளங்கதிரழகே!
கொடியே கொடிமலரே, கொடியிடையின் நடையழகே !
மணியே, மணிக்குயிலே, மாலையிளங்கதிரழகே!
கொடியே, கொடிமலரே, கொடியிடையின் நடையழகே!
தொட்ட இடம் பூமணக்கும்;துளிர்க்கரமோ தொட இனிக்கும்;
பூமரப் பாவை நீயடி, இங்கு நான் பாடும் -
பாமரப் பாடல் கேளடி..
ஒஓ ஒஒ ஒஒஓ..
மணியே, மணிக்குயிலே, மாலையிளம் கதிரழகே!
கொடியே, கொடிமலரே, கொடியிடையின் நடையழகே!
பொன்னில் வடித்த சிலையே!ப்ரம்மன் படைத்தான் உனையே!
வண்ணமயில் போல வந்த பாவையே..
எண்ண இனிக்கும் நிலையே!இன்பம் கொடுக்கும் கலையே!
உன்னை எண்ணி வாழும் எந்தன் ஆவியே..
கண்ணிமையில் தூண்டிலிட்டு,காதல்தனை தூண்டிவிட்டு,
எண்ணி எண்ணி ஏங்கவைக்கும், ஏந்திழையே!
பெண்ணிவளை ஆதரித்து,பேசித்தொட்டுக் காதலித்து,
இன்பம்கொண்ட காரணத்தால், தூங்கலையே!
சொல்லிச் சொல்லி ஆசை வைத்தேன்,
துடியிடையில் பாசம் வைத்தேன்,
பூமரப் பாவை நீயடி, இங்கு நான் பாடும் -
பாமரப் பாடல் கேளடி..
ஒஓ ஒஒ ஒ
மணியே மணிக்குயிலே, மாலையிளம் கதிரழகே!
கொடியே கொடிமலரே, கொடியிடையின் நடையழகே!
தொட்ட இடம் பூமணக்கும்;துளிர்க்கரமோ தொட இனிக்கும்
பூமரப் பாவை நீயடி, இங்கு நான் பாடும் -பாமரப் பாடல் கேளடி..
ஆஆஅ ஆஆ...
கண்ணிமைகளை வருத்தி,கனவுகளைத் துரத்தி,
மென்மனதினால் முடித்த மூக்குத்தி..
என்னுயிரிலே ஒருத்தி,கண்டபடி எனைத் துரத்தி,
அம்மனவள் வாங்கிக்கொண்ட மூக்குத்தி..
கோடிமணி ஓசைநெஞ்சில்,கூடிவந்துதான் ஒலிக்க,
ஓடிவந்து கேட்கவரும், தேவதைகள்
சூடமலர் மாலை கொண்டு,தூபமிட்டு தூண்டிவிட்டு,
கூடவிட்டு வாழ்த்தவரும், வானவர்கள்
அந்தி வரும் நேரமம்மா,ஆசைவிளக்கேற்றுதம்மா,
பூமரப் பாவை நீயடி, இங்கு நான் பாடும் பாமரப் பாடல் கேளடி..
ஒஓ ஒஒ ஒஒஓ..
மணியே மணிக்குயிலே, மாலையிளம் கதிரழகே!
மணியே மணிக்குயிலே, மாலையிளம் கதிரழகே!
தொட்ட இடம் பூமணக்கும்;துளிர்க்கரமோ தொட இனிக்கும்;
பூமரப் பாவை நீயடி, இங்கு நான் பாடும் -பாமரப் பாடல் கேளடி..
ஒஓ ஒஒ ஒஒஓ..
னானன னான னான னா,
Tuesday, March 22, 2011
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment