சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசம் உண்டு
கண்டதுண்டா கண்டவர்கள் சொன்னதுண்டா
சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசம் உண்டு
கண்டுக்கொண்டேன் கண்களுக்கு பள்ளி கொண்டேன்
வானத்து இந்திரரே வாருங்கள் வாருங்கள்
பெண்ணுக்குள் என்ன இன்பம் கூறுங்கள் கூறுங்கள்
இதுப்போல் இதமோ சுகமோ உலகத்தில் இல்லை
இவளின் குணமோ மனமோ மலருக்குள் இல்லை
ஓ கூந்தலுக்குள்ளே ஒரு வீடு கட்டுங்கள்
காதலுக்குள்ளே கிடையாது சட்டங்கள்
ஆ ஆயிரம் உண்டு என்னோடு மச்சங்கள்
ஆயினும் என்ன நெஞ்சோடு அச்சங்கள்
ஆனந்த சங்கமத்தில் அச்சம் வருமா
பூக்களை கிள்ளுவதால் ரத்தம் வருமா
இதுப்போல் இதமோ சுகமோ உலகத்தில் இல்லை
இவளின் குணமோ மனமோ மலருக்குள் இல்லை
ஓ காதல் வெண்ணிலா கையோடு வந்தாடும்
கண்கள் ரெண்டுமே கச்சேரி பண்ணுதோ
ஓ மோகமந்திரம் கண்ணோடு உள்ளதோ
மூடுமந்திரம் பெண்ணோடு உள்ளதோ
மீனுக்கு தூண்டிலிட்டால் யானை வந்தது
மேகத்தை தூது விட்டாய் வானம் வந்தது
இதுப்போல் இதமோ சுகமோ உலகத்தில் இல்லை
இவளின் குணமோ மனமோ மலருக்குள் இல்லை
Sunday, March 20, 2011
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment