Sunday, March 20, 2011

இருமனம் கொண்ட திருமண வாழ்வில்

இரு மனம் கொண்ட திருமண வாழ்வில்
இடையினில் நீயேன் மயங்குகிறாய்? (இரு மனம்)

இளகிய பெண்மை இருவர் கை பொம்மை
ஏன் இன்னும் நீயும் ஏங்குகின்றாய்? (இளகிய)
கரையினிலாடும் நாணலே நீ
நாணல்? நீ? ஹிஹிஹி

கரையினிலாடும் நாணலே நீ
நதியிடம் சொந்தம் தேடுகிறாய்

சிற்பம் ஒன்று சிரிக்கக் கொண்டு
ரப்பர் பொம்மை ஏக்கம் கொண்டு
காதல் கீதல் செய்யக் கூடாதோ?
சின்னப் பையன் வயசும் கொஞ்சும்
பொம்மைக்கென்ன மனசா பஞ்சம்
ஒட்டிப் பார்த்தால் ஒன்றாய் சேராதோ?

(ஜூனியர்) (இருமனம்)

கடற்கரை தாகம் இதுதான் உந்தன் காதலடா
அடுத்தவர் ராகம் அதை நீ பாடுதல் பாவமடா

If it is apoorva raagam?
ம்ம்.. (சிரிப்பு)

(கடற்கரை)

வயலுக்குத் தேவை மேகம் என்பாய்
அவளது தேவை அறிவாயோ (வயலுக்கு)

பாட்டைக் கொண்டு ராகம் போட்டேன்
நீரைக் கண்டு தாகம் கொண்டேன்
பாவம் கீவம் பார்க்கக் கூடாது

No It's bad!
But I'm mad!

பாவப்பட்ட ஜென்மம் ஒன்று
ஊமைக் கேள்வி கேட்கும்போது
ஆசை மோசம் செய்யக்கூடாது

(சிரிப்பு)
What.. கபகபா கபகபா?

ஜூனியர்? ஜூனியர்...ஜூனியர்...ஜூனியர்..

(இரு மனம்)

சித்திரை மாதம் மழையைத் தேடி வாடுகின்றாய்
மார்கழி மாதம் வெயிலைத் தேடி ஓடுகின்றாய்

Boss. Love has no season; or even reason;
Shut up!

(சித்திரை)

உதயத்தைக் காண மேற்கு நோக்கி
ஒவ்வொரு நாளும் ஏங்குகிறாய்

(உதயத்தை)

அடைஞ்சவனுக்கு ஐப்பசி மாசம்
ஏமாந்தாலோ ஏப்ரல் மாசம்
அடியேன் முடிவைச் சொல்லக் கூடாதோ?

It's highly idiotic!
No boss. only romantic!

கொஞ்சும் பொம்மை பாடுது பாட்டு
குழம்பிய நெஞ்சம் சிரிக்குது கேட்டு
முடிவைச் சொல்லிச் சிரிக்கக் கூடாதோ?
முடிவைச் சொல்லிச் சிரிக்கக் கூடாதோ?

இருமனம் கொண்ட திருமண வாழ்வில்
இடையினில் நீயேன் மயங்குகிறாய்..

No comments:

Post a Comment